1-அயோடோயெக்சேன்

வேதிச் சேர்மம்

1-அயோடோயெக்சேன் (1-Iodohexane) என்பது C6H13I என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். CH3(CH2)5I என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். அலிபாட்டிக்கு நிறைவுற்ற ஆலசனேற்ற நீரகக் கரிமங்கள் என்ற குழுவின் உறுப்பினர் எனவும் இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[2][3] நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. எக்சைல் அயோடைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

1-அயோடோயெக்சேன்
1-Iodorohexane
பெயர்கள்
வேறு பெயர்கள்
1-எக்சைல் அயோடைடு
இனங்காட்டிகள்
638-45-9 Y
ChEMBL ChEMBL3188734
ChemSpider 12010
EC number 211-339-0
InChI
  • InChI=1S/C6H13I/c1-2-3-4-5-6-7/h2-6H2,1H3
    Key: ANOOTOPTCJRUPK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12527
  • CCCCCCI
UNII 27F4BFU2DR
பண்புகள்
C6H13I
வாய்ப்பாட்டு எடை 212.07 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிற நீர்மம்
அடர்த்தி 1.437 கி/செ.மீ3
உருகுநிலை −75 °C (−103 °F; 198 K)
கொதிநிலை 181 °C (358 °F; 454 K)
நடைமுறையில் கரையாது
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் [1]
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H302, H315, H318, H319, H335
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

1-புரோமோயெக்சேனை பொட்டாசியம் அயோடைடுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் 1-அயோடோயெக்சேன் சேர்மத்தைப் பெறலாம்.[4]

1-எக்சேனாலை அயோடின் மற்றும் முப்பீனைல்பாசுபீனுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமும் இந்த சேர்மத்தைத் தயாரிக்கலாம்.[5]

இயற்பியல் பண்புகள்

தொகு

1-அயோடோயெக்சேன் என்பது தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாகும். பற்றவைப்பது கடினமாகும். ஒளி-உணர்திறன் கொண்டு நீர்மநிலையில் காணப்படுகிறது. நடைமுறையில் தண்ணீரில் கரையாது.[6] தாமிரம் பொதுவாக சேர்மத்தில் நிலைப்படுத்தியாக சேர்க்கப்படுகிறது.[7]

பயன்கள்

தொகு

1-அயோடோயெக்சேன் கரிமத் தொகுப்பு வினைகளில் ஓர் ஆல்க்கைலேற்றும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.[8] மேலும், டெட்ராடெக்கேன் போன்ற பிற இரசாயன சேர்மங்களின் உற்பத்தியில் இது ஓர் இடைநிலையாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "1-Iodohexane". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. "Hexane, 1-iodo-". NIST. பார்க்கப்பட்ட நாள் 8 August 2024.
  3. Barnes, Ian; Rudzinski, Krzysztof J. (13 January 2006). Environmental Simulation Chambers: Application to Atmospheric Chemical Processes (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-4231-7. பார்க்கப்பட்ட நாள் 8 August 2024.
  4. Hernán-Gómez, Alberto; Rodríguez, Mònica; Parella, Teodor; Costas, Miquel (23 September 2019). "Electrophilic Iron Catalyst Paired with a Lithium Cation Enables Selective Functionalization of Non-Activated Aliphatic C−H Bonds via Metallocarbene Intermediates" (in en). Angewandte Chemie International Edition 58 (39): 13904–13911. doi:10.1002/anie.201905986. பன்னாட்டுத் தர தொடர் எண்:1433-7851. பப்மெட்:31338944. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/anie.201905986. பார்த்த நாள்: 8 August 2024. 
  5. Alberto Hernán-Gómez, Mònica Rodríguez, Teodor Parella, Miquel Costas. Electrophilic Iron Catalyst Paired with a Lithium Cation Enables Selective Functionalization of Non-Activated Aliphatic C−H Bonds via Metallocarbene Intermediates. Angew Chem Int Ed, 2019. 58 (39): 13904-13911. எஆசு:10.1002/anie.201905986.
  6. Marine enzymes and specialized metabolism - Part B (in ஆங்கிலம்). Academic Press. 22 June 2018. p. 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-815046-7. பார்க்கப்பட்ட நாள் 8 August 2024.
  7. "1-Iodohexane". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 8 August 2024.
  8. "1-Iodohexane | CAS 638-45-9 | SCBT - Santa Cruz Biotechnology" (in ஆங்கிலம்). scbt.com. பார்க்கப்பட்ட நாள் 8 August 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1-அயோடோயெக்சேன்&oldid=4070522" இலிருந்து மீள்விக்கப்பட்டது