1-குளோரோயெக்சேன்
1-குளோரோயெக்சேன் (1-Chlorohexane) என்பது C6H13Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். CH3(CH2)5Cl என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். அலிபாட்டிக்கு நிறைவுற்ற ஆலசனேற்ற நீரகக் கரிமங்கள் என்ற குழுவின் உறுப்பினர் எனவும் இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[2][3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
1-எக்சைல் குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
544-10-5 | |
ChEMBL | ChEMBL156095 |
ChemSpider | 10526 |
EC number | 208-859-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10992 |
| |
UNII | R5L7I6O9NW |
UN number | 1993 |
பண்புகள் | |
C6H13Cl | |
வாய்ப்பாட்டு எடை | 120.62 g·mol−1 |
தோற்றம் | நீர்மம் |
அடர்த்தி | 0.88 கி/செ.மீ3 |
உருகுநிலை | −94.0 °C (−137.2 °F; 179.2 K) |
கொதிநிலை | 135 °C (275 °F; 408 K) |
சிறிதளவு கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H226, H412 | |
P210, P233, P240, P241, P242, P243, P273, P280, P303+361+353, P370+378, P403+235, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஐதரோகுளோரிக் அமிலம் அல்லது தயோனைல் குளோரைடுடன் எக்சைல் ஆல்ககாலைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் 1-குளோரோயெக்சேனைத் தயாரிக்கலாம்.
இயற்பியல் பண்புகள்
தொகு1-குளோரோயெக்சேன் நிறமற்ற திரவமாகும். நறுமண வாசனையுடன் தண்ணீரில் மிகவும் குறைவாகவே கரையும்.[4]
வேதிப்பண்புகள்
தொகுஎத்திலீன் கிளைக்காலில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் புளோரைடுடன் 1-குளோரோயெக்சேனைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் 1-புளோரோயெக்சேனைத் தயாரிக்கலாம்.
பென்சீன் மற்றும் அலுமினியம் முக்குளோரைடுடன் 1-குளோரோயெக்சேனைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் 2-பீனைல்யெக்சேனைத் தயாரிக்கலாம்.[5]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "1-Chlorohexane". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ "1-Chlorohexane". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 7 August 2024.
- ↑ "Hexane, 1-chloro-". NIST. பார்க்கப்பட்ட நாள் 7 August 2024.
- ↑ Lide, David R. (1993). CRC Handbook of Chemistry and Physics/Special Student Edition 1993-1994. CRC Press . p. 3-112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0849305955. பார்க்கப்பட்ட நாள் 7 August 2024.
- ↑ Fox, Scott (2004). Organic Chemistry. Jones and Bartlett Publishers. p. 530. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0763721978. பார்க்கப்பட்ட நாள் 7 August 2024.