1-மெத்தில்நாப்தலீன்

1-மெத்தில்நாப்தலீன் (1-Methylnaphthalene) என்பது C11H10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு ப.அ.நீ. ஆகும். இச்சேர்மத்தினுடைய சிடேன் எண் பூச்சியம் ஆகும். முன்னதாக மிகக் குறைந்த சிடேன் எண் கொண்ட சேர்மத்திற்கு உதாரணமாக 1-மெத்தில்நாப்தலீன் சொல்லப்பட்டு வந்தது. எனினும் விலை உயர்வு மற்றும் கையாளுமை சிரமங்களை முன்னிட்டு இச்சேர்மத்தின் இடத்தை ஐசோசிடேன் பிடித்துக் கொண்டது. இதனுடைய சிடேன் எண் 15 ஆகும்[2].

1-மெத்தில்நாப்தலீன்[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-மெத்தில்நாப்தலீன்
வேறு பெயர்கள்
α-மெத்தில்நாப்தலீன்
இனங்காட்டிகள்
90-12-0 Y
ChEBI CHEBI:50717 Y
ChEMBL ChEMBL383808 Y
ChemSpider 6736 Y
EC number 201-966-8
InChI
  • InChI=1S/C11H10/c1-9-5-4-7-10-6-2-3-8-11(9)10/h2-8H,1H3 Y
    Key: QPUYECUOLPXSFR-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C11H10/c1-9-5-4-7-10-6-2-3-8-11(9)10/h2-8H,1H3
    Key: QPUYECUOLPXSFR-UHFFFAOYAD
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14082 Y
பப்கெம் 7002
  • c1cccc2cccc(c12)C
பண்புகள்
C11H10
வாய்ப்பாட்டு எடை 142.20 கி/மோல்
தோற்றம் திரவம்
அடர்த்தி 1.001 கி/மி.லி
உருகுநிலை −22 °C (−8 °F; 251 K)
கொதிநிலை 240–243 °C (464–469 °F; 513–516 K)
ஆவியமுக்கம் 4.91
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R22 R42 R43
S-சொற்றொடர்கள் S7 S36 S37 S39
தீப்பற்றும் வெப்பநிலை 82 °C (180 °F; 355 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அண்டத்தில் 1-மெத்தில்நாப்தலீன் உள்ளிட்ட பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமங்களை கண்டறியவும் கண்காணிக்கவும் தேவையான நன்கு மேம்படுத்தப்பட்டத் தரவுகளை[3][4] நாசா 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 இல் வெளியிட்டது. அண்டத்தில் காணப்படும் கார்பனில் 20 சதவீதத்திற்கும் மேலான கார்பன் அநேகமாக பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன என்று நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவையே பூமியில் வாழ்க்கை உருவாதலுக்கான[3] வாய்ப்புள்ள தொடக்க வேதிப்பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பெரு வெடிப்புக்கு சற்றுப் பின்னர் பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமங்கள் உருவாகியிருக்க வேண்டும். அதனால்தான் இவை அண்டத்தில் பெருமளவில் காணக்கிடைக்கின்றன[5][6][7]. மேலும், இவை புதிய விண்மீன்கள் மற்றும் புறக்கோள்களுடனும் தொடர்பு கொண்டுள்ளன[3].

மேற்கோள்கள்

தொகு
  1. 1-Methylnaphthalene பரணிடப்பட்டது 2008-05-13 at the வந்தவழி இயந்திரம் at University of Oxford
  2. Cetane number
  3. 3.0 3.1 3.2 Hoover, Rachel (February 21, 2014). "Need to Track Organic Nano-Particles Across the Universe? NASA's Got an App for That". நாசா. பார்க்கப்பட்ட நாள் February 22, 2014.
  4. Staff (October 29, 2013). "PAH IR Spectral Database". நாசா. பார்க்கப்பட்ட நாள் March 12, 2014.
  5. Carey, Bjorn (October 18, 2005). "Life's Building Blocks 'Abundant in Space'". Space.com. பார்க்கப்பட்ட நாள் March 3, 2014.
  6. Hudgins, Douglas M.; Bauschlicher,Jr, Charles W.; Allamandola, L. J. (October 10, 2005). "Variations in the Peak Position of the 6.2 μm Interstellar Emission Feature: A Tracer of N in the Interstellar Polycyclic Aromatic Hydrocarbon Population". Astrophysical Journal 632: 316–332. doi:10.1086/432495. http://iopscience.iop.org/0004-637X/632/1/316/fulltext/. பார்த்த நாள்: March 3, 2014. 
  7. Allamandola, Louis; et al. (April 13, 2011). "Cosmic Distribution of Chemical Complexity". நாசா. Archived from the original on February 27, 2014. பார்க்கப்பட்ட நாள் March 3, 2014.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=1-மெத்தில்நாப்தலீன்&oldid=3906886" இலிருந்து மீள்விக்கப்பட்டது