1931 சீன வெள்ளம்

1931 சீனா வெள்ளம் அல்லது 1931 யாங்சி-ஹுயேய் ஆற்று வெள்ளம் என்பது சீனா நாட்டில் 1931 ஆம் ஆண்டு பெருகிய உலகின் மிகவும் மோசமான வெள்ளமாகும். தொற்றுநோய் மற்றும் பஞ்சம் நீங்கலாக இந்த வெள்ளம் இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிகவும் கொடுமையான ஒரு இயற்கைப் பேரழிவாகும் [4][1] சுமார் 422,499 பேரிலிருந்து 3.7 மில்லியன் மற்றும் 4 மில்லியன் வரை பலியானதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.[5][2][3][6]

1931 சீனா வெள்ளம்
1931 ஆகஸ்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர்
நாள்ஜூலை-நவம்பர் 1931
அமைவிடம்மஞ்சள் ஆறு, யாங்சி ஆறு, ஹுயேய் ஆறு
இறப்புகள்422,499–4,000,000 [1][2][3]

வான்நிலை காரணங்களும் பூகோள விளைவுகளும் தொகு

1928 முதல் 1930 வரை வறட்சியில் சீனா இருந்தது.[3] 1930 இன் பனிக்காலத்தில் அதிகமான பனிப்பொலிவுகள் மலைப்பகுதிகளில் படிந்தன. 1931 இன் தொடக்கத்தில் அப்பனிப்படலங்கள் உருகத் தொடங்கிய போது பலத்த பருவ மழையும் பொலியத் தொடங்கியது. தாழ்வான பகுதிகளில் பாதிவு ஏற்பட்டதால் மக்கள் வெளியேறத் தொடங்கினர்.[4] அதே ஆண்டின் கோடையில் வலிமையான ஒன்பது சூறாவளி ஜூலை மாதத்தை ஒட்டி ஏற்பட்டது.[1] ஜூலையில் ஒரே மாத்தில் 600 mm (24 அங்) மழை பெய்ந்து யாங்சி ஆற்றின் அதிகபட்சமாக அளவை எட்டியது.[4] வெள்ளம் சுமார் 180,000 கிமீ2 அளவிற்குப் பரவியது[7] அன்ஹுயி மாகாணம், ஹுபேய் மாகாணம், ஹுனான் மாகாணம், சியாங்சு, செஜியாங் மாகாணம், ஜியாங்சி மாகாணம், ஹெய்நான் மற்றும் சாண்டோங் முதலிய மேற்கே சிச்சுவான் வரை பாதிப்புகள் அடைந்தன.[5][4]

உயிரிழப்புகளும் பாதிப்புகளும் தொகு

அரசு கணக்கீட்டின் படி 25 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.[7] 53 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதாக வரலாற்றாளர்கள் கூறிவருகிறார்கள்.[5] அதுபோல உயிரிழப்புகளும் மிக அதிகம். வெள்ளத்தின் முதல் சில மாதத்திலேயே சுமார் 150,000 பேர் வெள்ளத்தில் மூழ்கி இறந்ததாகவும் லட்சக் கணக்கானோர் பசியிலும் நோயாலும் இறந்ததாகவும் ஜான் லாசிங் பக் கூறினார். சமகால சீன வரலாற்றாளர் லி வெங்கை 422,499 பேர் இறந்ததாகக் கணித்தார்.[5] Contemporary government sources suggested that the figure may have been as high as two million.[4] சில மேற்குலக செய்திகளின் அடிப்படையில் இறந்தோரின் எண்ணிக்கை 4.7 முதல் 4 மில்லியன் வரை ஆகும்.[2][3]

வெள்ளத்தால் குடியுருப்புகளும் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டன.[7] யாங்சி பள்ளத்தாக்கைச் சுற்றி 15% கோதுமை மற்றும் அரிசி பயிர்கள் சேதமாகின.[8] பேரழிவால் அத்தியாவசியப் பொருளின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியது. சூழலியல் சேதத்துடன் பொருளாதாரப் பாதிப்பும் பஞ்சத்தை உருவாக்கியது. மக்கள் உணவின்றி மரப்பட்டைகளையும் காட்டுச்செடிகளையும் உண்டனர், சிலர் உயிர்வாழ்வதற்காகத் தங்கள் குழந்தைகளையே விற்கத் தொடங்கினர், தன்னின உயிருண்ணியாகவும் மாறத் தொடங்கினர்.[1][4] சுகாதாரமின்மையாலும், தொடர் இடப்பெயர்ச்சியாலும் தொற்று நோய்களான வாந்திபேதி, தட்டம்மை, மலேரியா, இரத்தக்கழிசல் போன்றவை அதிகமாகப் பரவின.[4]

அரசின் செயல்பாடு தொகு

குடியரசு ஆட்சியில்(1930s–1940s) தொகு

1931 இல் பெருக்கெடுத்த வெள்ளமானது குவோமின்டாங் அரசிற்கு முக்கிய சவாலாக இருந்தது. பேரிழப்புகள் வெளிப்படையாகத் தெரிந்தன, அரசு தேசிய வெள்ள நிவாரண ஆணையத்தை முக்கிய அரசியல்வாதியும், சங் கை செக்கின் மைத்துனருமான சொங் சூவென் தலைமையில் அமைத்தது.[7] பிரபல நோயியல் நிபுணர் வூ லிண்டே, சுகாதார அமைச்சர் லூ ரூரிங், பொதுச் சுகாதாரப் பணியாளர் ஜான் கிராண்ட், நீரியல் நிபுணர் ஆலிவர் டூட் எனப் பல்வேறு சீன மற்றும் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்டு இந்த ஆணையம் செயல்படத் தொடங்கியது. உலக நாடுகள் சங்கம் மூலம் உதவியும் பெற்றது. மேலும் பிரபல வானூர்தியாளர் சார்லஸ் லின்ட்பர்க் மற்றும் அவரது துணைவியார் அன்னே லின்ட்பர்க் இணைந்து வான்வழியாக வெள்ளப்பாதிப்புகளை அளவிட்டனர். சொங் சூவென் தலைமையில் ஆணையம் செயல்பட்டாலும் நாளடைவில் ஜான் ஹோப் சிம்சன் என்ற ஆங்கிலேய ஆதரவற்றோர் மீட்பாளாரிடம் ஒப்படைக்கப் பட்டது. நாடுகடந்த தென்கிழக்காசிய சீனர்களிடமிருந்தும், உலகம் முழுதிலிருந்தும் உதவிகள் வந்தன. ஐக்கிய அமெரிக்க எழுத்தாளர் பெர்ல் பக் நிதி திரட்டுவதற்காக சிறுகதைகளை எழுதினார். 1931 இல் ஜப்பானின் மஞ்சூரியா மீதான படையெடுப்பால் நிவாரணப்பணிகளில் தொய்வு ஏற்பட்டன. தொடர்ந்து அமெரிக்காவிடமிருந்து கோதுமை மற்றும் மாவை கடனாக இறக்குமதி செய்து கொண்டது.[4] பேரழிவிலிருந்து மீண்டு வெள்ளப்பெருக்கிற்குத் தீர்வுகான அரசு ஹுயேய் ஆற்று பாதுகாப்பு ஆணையத்தை அமைத்தது.[1] ஆனால் தொடர் நிதி பற்றாக்குறையாலும், இரண்டாம் சீன-சப்பானியப் போர் மூண்டதாலும், தொடர்ச்சியான சீன உள்நாட்டுப் போர்களாலும் சிறிய அணை மட்டுமே யாங்சி ஆற்றின் குறுக்கே கட்டமுடிந்தது.[9]

கம்யூனிஸ்ட் ஆட்சியில் (1949–தற்போது) தொகு

1953 உள்நாட்டுப் போருக்குப் பின்னர் சீனப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் மா சே துங் யாங்சி ஆற்றின் மீது வெள்ளக்கட்டுப்பாட்டிற்கு மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை திட்டத்தை அமைத்தார். சீன வரலாற்றில் முக்கியத் திட்டங்களான சின் சி ஹுவாங்கின் சீனப் பெருஞ் சுவரையும் சூ யங் டியின் சீனப் பெரும் கால்வாயையும் விட இந்தத் திட்டம் முக்கியத்துவம் பெற்றது.[9] விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் இத்திட்டத்தில் நம்பிக்கையின்றி சந்தேகம் எழுப்பினர். போதிய வளமின்மையாலும், சீன-சோவியத் சச்சரவுகளாலும், புதிய பொருளாதார முற்போக்குப் பாய்ச்சலாலும் மாவின் காலகட்டத்தில் இந்தத் திட்டம் திட்டமிடலைத் தாண்டி செல்லவில்லை.[9] 1980 களில் இத்திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்து 2012 இல் நீர் மினாற்றலில் இயக்கும் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணைகள் செயல்பாட்டிற்கு வந்தன. அந்த நேரத்தில் நிறுவய கொள்ளளவின் அடிப்படையில் இதுவே பெரிய மின் நிலையம் ஆகும்.[10]


மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Pietz, David (2002). Engineering the State: The Huai River and Reconstruction in Nationalist China 1927–1937. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-93388-9. pp. xvii, 61–70.
  2. 2.0 2.1 2.2 "Dealing with the Deluge". PBS NOVA Online. 26 March 1996. Retrieved 12 February 2013.
  3. 3.0 3.1 3.2 3.3 Glantz, Mickey. Glantz, Michael H (2003). Climate Affairs: A Primer. Island Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55963-919-9. p. 252.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 Chris Courtney (2018). The Nature of Disaster in China: The 1931 Yangzi River Flood. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-108-41777-8.
  5. 5.0 5.1 5.2 5.3 李文海 (1994). 中國近代十大灾荒. 上海人民出版社. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9787208018129.
  6. "NOAA'S top global weather, water and climate events of the 20th century" பரணிடப்பட்டது 2011-10-19 at the வந்தவழி இயந்திரம். NOAA.gov. 13 December 1999. Retrieved 29 November 2012.
  7. 7.0 7.1 7.2 7.3 National Flood Relief Commission Report of the National Flood Relief Commission Shanghai, 1932
  8. Y.Y. Kueh Agricultural Instability in China, 1931–1990: Weather, Technology, and Institutions Oxford University Press, 1995,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-828777-1
  9. 9.0 9.1 9.2 Li, Cheng & Barnett, Arthur Doak (1997). Rediscovering China: Dynamics and Dilemmas of Reform. Rowman & Littlefield. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8476-8338-9. pp. 168–169.
  10. "Breathtaking force: World's most powerful dam opens in China as gushing water generates the same power as FIFTEEN nuclear reactors". டெய்லி மெயில். 25 July 2012. பார்க்கப்பட்ட நாள் 13 September 2012.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=1931_சீன_வெள்ளம்&oldid=3611222" இலிருந்து மீள்விக்கப்பட்டது