1935 குவெட்டா நிலநடுக்கம்

பாக்கித்தானின் குவெட்டா நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம்

1935 இல் குவெட்டாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1935 Quetta earthquake) 1935 மே 31 அன்று பிரித்தானிய இந்தியாவின் பலுச்சிசுத்தானில் (இப்போது பாக்கித்தானின் ஒரு பகுதி) தெற்கு ஆப்கானித்தானின் எல்லைக்கு அருகில் உள்ள குவெட்டாவில் அதிகாலை 2.30 மணி முதல் அதிகாலை 3:40 மணி வரை நிலநடுக்கம் ஏற்பட்டது.   இந்த நிலநடுக்கம் 7.7Mw அளவையும், 30,000 முதல் 60,000 பேர் வரை இந்த தாக்கத்தால் உயிரிழந்தனர்.[2] 2005இல் காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு தெற்கு ஆசியாவைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கமாக இது பதிவு செய்யப்பட்டது.[3] இந்த நிலநடுக்கம் பிரித்தானிய இந்தியாவின் பலுச்சிசுத்தானில் உள்ள அலி ஜானுக்கு தென்மேற்கே 4 கிமீ தொலைவில் மையமாக இருந்தது.[3]

1935 குவெட்டா நிலநடுக்கம்
1935 குவெட்டா நிலநடுக்கம் is located in பாக்கித்தான்
Agra
Agra
1935 குவெட்டா நிலநடுக்கம்
நிலநடுக்க அளவு7.7 Mw
ஆழம்15 கிலோமீட்டர்கள் (9.3 mi)
நிலநடுக்க மையம்29°30′N 66°48′E / 29.5°N 66.8°E / 29.5; 66.8[1]
பாதிக்கப்பட்ட பகுதிகள்பலுச்சிசுத்தானம், பிரித்தானிய இந்தியா
(நவீன பாக்கித்தான்)
அதிகபட்ச செறிவுX (Extreme)[1]
உயிரிழப்புகள்30,000–60,000[2]
பலுச்சிசுத்தானில் உள்ள சாப்பர் பிளவு, ஒரு முக்கிய தொடருந்துத் தளமான இது, 1935 நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. இங்குள்ள மலைகள் பிளவுண்டது.

பின்விளைவு

தொகு

உயிரிழப்புகள்

தொகு

குவெட்டா நகரத்தில்தான் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டன. மொத்தமாக 25,000 பேர் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டதாகவும், 10,000 உயிரிழந்ததாகவும் மற்றும் 4,000 பேர் காயமடைந்ததாகவும் மதிப்பிடப்பட்டது. நகரம் மோசமாக சேதமடைந்தது.[4] குவெட்டாவிற்கும் கலாட்டிற்கும் இடையே உள்ள அனைத்து கிராமங்களும் அழந்தன. மேலும் சுற்றியுள்ள நகரங்களில் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தன.

 
பூகம்பம் ஏற்பட்ட புரூஸ் தெரு. கபரி சந்தை மற்றும் பழச் சந்தைகள் முற்றிலுமாக அழிந்ததால் வர்த்தக நிறுவனங்கள் முடங்கின.

நகரின் உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்தது. தொடர் வண்டி பகுதி அழிக்கப்பட்டதுடன், இடிந்த நிலையில் இருந்த அரசாங்க இல்லத்தைத் தவிர அனைத்து வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டன. இராணுவ கன்டோன்மென்ட் பகுதியின் கால் பகுதி அழிக்கப்பட்டது. இராணுவ உபகரணங்கள் மற்றும் அரச கழக விமானப்படைப் பகுதி கடுமையான சேதத்தை சந்தித்தன.[4]

மீட்பு முயற்சிகள்

தொகு

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நகரத்தில் பெரும் இழப்புகள் ஏற்பட்டன. பலர் உயிருடன் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தனர். மீட்புப் பணிகளில் பிரித்தானிய ராணுவப் படைப்பிரிவுகளும் உதவின.[4] மீட்பு முயற்சிகளுக்காக பெரும்பாலான பிரித்தன் மற்றும் இந்திய வீரர்களுக்கு பல பதக்கங்கள் வழங்கப்பட்டது.

முக்கியத்துவம்

தொகு

குவெட்டாவில் நடந்த இந்த இயற்கைப் பேரழிவு இன்றுவரை உலகளவில் இறப்பு எண்ணிக்கை அடிப்படையில் இயற்கை பேரழிவுகளின் பட்டியலில் 23 வது மிக மோசமான நிலநடுக்கமாக உள்ளது. 2005இல் காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, இஸ்லாமாபாத்தில் உள்ள வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் சௌத்ரி கமாருஜாமான், தெற்கு ஆசியப் பகுதி கண்ட நான்கு பயங்கரமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இந்த நிலநடுக்கம் இருப்பதாகக் குறிப்பிட்டார். மற்றவை 2005 இல் காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம், 1945 பலுச்சிசுத்தானில் எற்பட்ட நிலநடுக்கம் மற்றும் 1905 இல் காங்க்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கம்.

உயிர் பிழைத்தவர்களில் குறிப்பிட்டத்தக்கவர்

தொகு

அப்போது எட்டு வயது நிரம்பிய இந்திய விண்வெளி விஞ்ஞானியும் கல்வியாளருமான யஷ் பால் அவரது உடன்பிறப்புகளுடன் சேர்ந்து கட்டிட எச்சங்களுக்கு அடியில் சிக்கி, மீட்கப்பட்டார்.[5]

இதனையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 National Geophysical Data Center / World Data Service (NGDC/WDS): NCEI/WDS Global Significant Earthquake Database. NOAA National Centers for Environmental Information. (1972). "Significant Earthquake Information". NOAA National Centers for Environmental Information. எண்ணிம ஆவணச் சுட்டி:10.7289/V5TD9V7K. பார்க்கப்பட்ட நாள் 22 March 2024.
  2. 2.0 2.1 M.Y.H. Bangash (2011). Earthquake Resistant Buildings: Dynamic Analyses, Numerical Computations, Codified Methods, Case Studies and Examples. Springer Science & Business Media. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-93818-7.
  3. 3.0 3.1 "The great Quetta tragedy". Pakistan: Dawn. 25 October 2005.
  4. 4.0 4.1 4.2 "1st Queen's at Quetta – The Earthquake". Queens Royal Surreys. Archived from the original on 24 July 2008. பார்க்கப்பட்ட நாள் 5 June 2008.
  5. JAYAN, T. V. (2 August 2017). "For the love of science". Frontline. http://www.frontline.in/other/obituary/for-the-love-of-science/article9796443.ece. 

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=1935_குவெட்டா_நிலநடுக்கம்&oldid=4020281" இலிருந்து மீள்விக்கப்பட்டது