2015 சிங்கப்பூர் பொதுத் தேர்தல்

சிங்கப்பூரின் 17வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் (Singapore's 17th parliamentary general election) 2015 செப்டம்பர் 11 இல் நடைபெற்றது.[1] சிங்கப்பூரின் யாப்பின் படி, சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் அதிகபட்சக் கால எல்லை 5 ஆண்டுகள் ஆகும். இக்காலப்பகுதிக்குள் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கலைத்து, மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.[2] சிங்கப்பூரில் வாக்களிப்பது கட்டாயம் ஆகும். பிரதமர் அலுவலகத்தின் கீழுள்ள தேர்தல் வாரியத்தினால் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. 2015 ஆகத்து 25 இல் குடியரசுத் தலைவர் டோனி டேன் கெங் யம் 16வது நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 2015 செப்டம்பரில் நியமனங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

சிங்கப்பூர் பொதுத் தேர்தல், 2015

← 2011 11 செப்டம்பர் 2015

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் 89 தொகுதிகள்

அதிகபட்சமாக 45 தொகுதிகள் தேவைப்படுகிறது
  First party Second party
 
தலைவர் லீ சியன் லூங் லோ தியா கியாங்
கட்சி மசெக சிதொக
தலைவரான
ஆண்டு
2004 2001
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
ஆங் மோ கியோ ஆல்ஜுனீத்
முந்தைய
தேர்தல்
81 இடங்கள்
60.1%
6 இடங்கள் + 2 நியமனம்
12.8%
முன்பிருந்த தொகுதிகள் 79 இடங்கள் 7 இடங்கள் + 2 நியமனம்
வென்ற
தொகுதிகள்
83 இடங்கள் 6 இடங்கள் + 3 நியமனம்
மாற்றம் Increase3 1
மொத்த வாக்குகள் 1,576,784 281,697
விழுக்காடு 69.9% 12.5%
மாற்றம் Increase 9.7% 0.3%

தொகுதி வாரியாக முடிவுகள்:
  மக்கள் செயல் கட்சி
  சிங்கப்பூர் தொழிலாளர் கட்சி

முந்தைய பிரதமர்

லீ சியன் லூங்
மசெக

பிரதமர் -தெரிவு

லீ சியன் லூங்
மசெக

சிங்கப்பூரின் விடுதலைக்குப் பின்னர் முதற் தடவையாக இத்தேர்தலிலேயே அனைத்து 83 தொகுதிகளிலும் தேர்தல் இடம்பெற்றது.[3] பெரும்பாலான தொகுதிகளில் முக்கிய இரண்டு கட்சிகளே போட்டியிட்டன. மூன்று தனித் தொகுதிகளில் மூன்று கட்சிகள் போட்டியிட்டன.[4]

மொத்தமுள்ள 89 தொகுதிகளில், மக்கள் செயல் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு 83 இடங்களை வென்றது. மீதமுள்ள 6 இடங்களை 28 தொகுதிகளில் போட்டியிட்ட சிங்கப்பூர் பாட்டாளிக் கட்சி வென்றது.[3] மொத்தம் 93.56% வாக்குகள் (வெளிநாட்டு வாக்குகள் தவிர்த்து) பதியப்பட்டன.[5] செயல் கட்சி 69.86% வாக்குகளைப் பெற்றது. இது 2011 தேர்தல் வாக்குகளை விட 9.72% அதிகமாகும். பாட்டாளிக் கட்சி 39.75% வாக்குகளைப் பெற்றது. இது சென்ற தேர்தலை விட 6.83% குறைவானதாகும்.[4][6]

பின்னணி

தொகு

இத்தேர்தல் சிங்கப்பூரின் 17வது பொதுத்தேர்தலும், சுதந்திரத்திற்குப் பின் நடக்கும் 12வது பொதுத்தேர்தலும் ஆகும். 1959 முதல் தொடர்ந்து 14 முறை ஆட்சியில் உள்ள மக்கள் செயல் கட்சி (PAP) இத்தேர்தலில் போட்டியிடுகிறது. சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் மறைவிற்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தலும், பிஏபி பொதுச் செயலாளர் லீ சியன் லூங்கின் தலைமையிலான மூன்றாவது தேர்தலுமாகும்.

அரசியல் கட்சிகள்

தொகு

1965இல் சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்ததிலிருந்து மக்கள் செயல் கட்சி (PAP) ஆட்சியில் உள்ளது, பிரதமராக லீ சியன் லூங் பதவியில் உள்ளார். லோ தியா கியாங் தலைமையிலான தொழிலாளர் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது. அக்கட்சிக்கு தற்போது 7 உறுப்பினர்களும் இரண்டு தொகுதியல்லாத உறுப்பினர்களும் உள்ளனர். சியா சீ தோங் தலைமையிலான சிங்கப்பூர் மக்கள் கட்சிக்கு தொகுதியல்லாத நாடாளுமன்ற உறுப்பினர் (NCMP) ஒருவர் உள்ளார். எட்டு எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலில் களத்தில் இறங்கின.

கட்சி சுருக்கம் தலைவர் உருவான ஆண்டு 2015இற்கு முன்பு தொகுதி நாடாளுமன்ற இருப்பு
 மக்கள் செயல் கட்சி PAP லீ சியன் லூங்
1954
79
சட்டமன்றம்:

1955-1965[7]
நகரசபைகள்:
1957-1965[8]
சிங்கப்பூர் நாடாளுமன்றம்:
1965—தற்போது

 தொழிலாளர் கட்சி WP லோ தியா கியாங்
1957
9
சட்டமன்றம்:

1961-1963[9]
நகரசபைகள்:
1957-1959[8]
சிங்கப்பூர் நாடாளுமன்றம்:
1981—1986; 1991—இன்று

 சிங்கப்பூர் மக்கள் கட்சி SPP சியாம் சீ தொங்
1994
1
சிங்கப்பூர் நாடாளுமன்றம்t:

1997—தற்போது

 சிங்கப்பூர் சனநாயகக் கட்சி SDP சீ சூன் உவான்
1980
0
சிங்கப்பூர் நாடாளுமன்றம்:

1984—1997

 தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி NSP செபஸ்டியான் தியோ
1987
0
சிங்கப்பூர் நாடாளுமன்றம்:

2001—2006

 சிங்கப்பூர் சனநாயகக் கூட்டணி SDA டெசுமண்டு லிம் பாக் சுவான்
2001
0
சிங்கப்பூர் நாடாளுமன்றம்:

2001—2011

 சீர்திருத்தக் கட்சி RP கென்னத் ஜெயரத்தினம்
2008
0
 சிங்கப்பூரியர் முதலில் SF த்கான் ஜீ சேய்
2014
0
மக்களின் சக்தி கட்சி PPP கோ மெங் செங்
2015
0

காலக்கோடு

தொகு
தேதி Event
24 சூலை வாக்காளர் எல்லை ரிப்போர்ட் வெளியீடு
25 ஆகத்து நாடாளுமன்றம் கலைப்பு
Issuance of writ of election
1 செப்டம்பர்  மனுத்தாக்கல்
1–9 செப்டம்பர் பிரச்சார காலம்
10 செப்டம்பர் Cooling Off Day
11 செப்டம்பர் தேர்தல் நாள்

தேர்தல் முடிவுகள்

தொகு
 

வாக்குகள்

  மசெக (69.86%)
  WP (12.48%)
  SDP (3.76%)
  NSP (3.53%)
  RP (2.63%)
  SingFirst (2.25%)
  SPP (2.17%)
  SDA (2.06%)
  PPP (1.13%)
  சுயேட்சை (0.12%)





 

இடங்கள்

  83 இடங்கள் (மசெக (93.26%)
  6 இடங்கள் (சிதொக) (6.74%)
 
2015 செப்டம்பர் 11 இல் அறிவிக்கப்பட்ட முடிவுகள்

மேற்கோள்கள்

தொகு
  1. Min Kok, Lee (25 ஆகத்து 2015). "Polling Day on Sept 11, Nomination Day on Sept 1 as general election is called in Singapore". The Straits Times. http://www.straitstimes.com/politics/parliament-dissolved-writ-of-election-expected-soon. 
  2. "Constitution of the Republic of Singapore". Attorney-General's Chambers of Singapore website. Archived from the original on 15 பெப்பிரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 17 December 2008.
  3. 3.0 3.1 "PAP wins in a landslide with 69.86% of votes". சேனல் நியூசு ஏசியா. Archived from the original on 12 செப்தெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 செப்தெம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. 4.0 4.1 "Singapore General Election 2015 Detailed Results". டுடே. Archived from the original on 2015-09-12. பார்க்கப்பட்ட நாள் 12 செப்தெம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)
  5. Lee, Min Kok. "GE2015: Voter turnout at 93.56 per cent, improves slightly from 2011 record low". ஸ்ட்ரெயிட் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் 12 செப்தெம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. Heng, Janice. "For PAP, the numbers hark back to 2001 polls showing". ஸ்ட்ரெயிட் டைம்சு. Archived from the original on 12 செப்தெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 செப்தெம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "சிங்கப்பூர் சட்டமன்ற பொதுத்தேர்தல் 1955" பரணிடப்பட்டது 2015-08-29 at the வந்தவழி இயந்திரம். www.singapore-elections.com.
  8. 8.0 8.1 "Singapore City Council Election 1957" பரணிடப்பட்டது 2015-09-10 at the வந்தவழி இயந்திரம். www.singapore-elections.com.
  9. "Singapore Legislative Assembly By-Election July 1961" பரணிடப்பட்டது 2015-09-10 at the வந்தவழி இயந்திரம். www.singapore-elections.com.