2019 ஐதராபாத் குழு பாலியல் வல்லுறவுக் கொலை

நவம்பர் 2019 இல், ஐதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் 26 வயதான கால்நடை மருத்துவர் குழு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பரவலான கவனத்தி ஈர்த்தது.[1] அவர் கொலை செய்யப்பட்ட மறுநாளான 28 நவம்பர் 2019 அன்று அவரது உடல் சாட் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.சைபராபாத் பெருநகர காவல்துறையின் அறிவிக்கையின் படி, இதில் நான்கு பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மருத்துவரை பாலியல் வல்லுறவு செய்து கொன்றதாக ஒப்புக்கொண்டார்.[2]

தெலுங்கானா காவல் துறை பாதிக்கப்பட்ட பெண் தனது குதியுந்தினை சுங்கச்சாவடி அருகே நிறுத்தியது, அங்கிருந்த இரண்டு சுமையுந்து ஓட்டுநர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, அவர்கள் அந்தப் பெண்ணின் வாகனத்தின் வட்டையினை பழுது செய்ததாகவும், பின்னர் அவருக்கு உதவுவது போல் நடித்து, அருகிலுள்ள புதர்களுக்குள் தள்ளி, பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு மூச்சுத் திணறச் செய்து அவரை கொலை செய்ததாகவும் கூறினர். பின்னர், அவரது பிணத்தை சுமையுந்திவில் ஏற்றிச் சென்று சாலை ஓரம் வீசியாதாகவும் காவல் துறையினரின் அறிக்கையில் தெரிய வந்தது.

மூடிய-மின்சுற்று தொலைக்காட்சியின் மூலமும் , பாதிக்கப்பட்டவரின் அலைபேசி மூலமும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் காவல் துறையினர் நான்கு பேரை கைது செய்தனர். குற்றவாளிகள் சேர்லப்பள்ளி மத்திய சிறையில் பதினான்கு நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். தெலுங்கானா முதல்வர், விரைவு நீதிமன்றம் அமைத்து குற்றம் சாட்டப்பட்டட்வர்களை விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.இந்தப் பாலியல் வல்லுறவானது நாட்டின் பல பகுதிகளில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. வல்லுறவு மற்றும் வல்லுறவில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றக் கோரி போராட்டங்கள் மற்றும் பொது ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டன. உள்துறை அமைச்சர் தெலுங்கானா காவல்துறையினரின் நடவடிக்கையினை விமர்சித்தார் மற்றும் விரைவு நீதிமன்றங்கள் மூலம் விரைவாக தண்டிக்கப்படுவதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்காக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் விரும்புவதாகக் கூறினார்.

நான்கு குற்றவாளிகளும் 6 டிசம்பர் 2019 அன்று, பெங்களூரு ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் காவல் துறையினரின் கண்காணிப்பில் இருந்தபோது ஒரு பாலத்தின் கீழ் கொல்லப்பட்டனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, குற்றம் நடந்த இடத்தை புனரமைப்பதற்காக சந்தேக நபர்கள் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அவர்களில் இருவர் துப்பாக்கிகளைப் பறித்து காவல் துறையினரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில், நான்கு சந்தேக நபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[3] சிலர் இதனை சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் செய்ததாக குற்றம் சாட்டினர்,[4] ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குற்றவாளிகளின் மரணத்தை கொண்டாடினர்.[5]

சட்டத்திற்குப் புறமாக கொலை செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளின் முதல் பிரேத பரிசோதனை அதே நாளில் மகாபுப் நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டது, பின்னர் உடல்கள் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. தெலுங்கானா உயர் நீதிமன்றம் டிசம்பர் 21 அன்று நான்கு குற்றவாளிகளின் மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டது. இரண்டாவது பிரேத பரிசோதனை ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் டெல்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக தடயவியல் நிபுணர்கள் குழுவால் செய்யப்பட்டது. மறு பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உரிய அடையாளம் காணப்பட்ட பிறகு உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.[6]

சான்றுகள்

தொகு
  1. Ganeshan, Balakrishna (29 November 2019). "When will our country be safe for Women?". தி நியூஸ் மினிட். பார்க்கப்பட்ட நாள் 30 November 2019.
  2. Khan, Omar. "Four men confess to gang rape of woman they later burned alive, Indian police say". CNN. பார்க்கப்பட்ட நாள் 1 December 2019.
  3. News Service, Express (6 December 2019). "Hyderabad rape-murder accused shot dead: How the 'encounter' with Telangana Police unfolded". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 6 December 2019.
  4. "Indian police kill rape-murder suspects, sparking celebrations". https://www.afp.com/en/news/15/indian-police-kill-rape-murder-suspects-sparking-celebrations-doc-1mu58f4. 
  5. Pandey, Geeta. "Why Indians are celebrating the killings in Hyderabad". https://www.bbc.com/news/world-asia-india-50683615. 
  6. "Hyderabad rape and murder case: AIIMS team conducts second autopsy of four accused killed in encounter; bodies handed over to kin". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2019-12-23.