அகப்பொருள் தலைவி
அகப்பொருள் மாந்தர்களில் ஒருவராக வரும் தலைவியைத் தலைமகள், கிழத்தி, கிழவோள் மனையோள் [1] என்றெல்லாம் குறிப்பிடுவர். இவள் காதல் வாழ்க்கையில் காதலியாகவும், மனைவியாகவும் வெளிப்படுவாள்.
- அவனுக்கு அவள், அவளுக்கு அவன் என உரிமை உண்டாவதைக் கிழவன், கிழத்தி என்னும் சொற்களால் குறிப்பிடுவர். (கிழமை = உரிமை)
உடலுறவு உரிமை வாழ்க்கையில் இவளுக்கு உள்ள பங்கைத் தொல்காப்பியம் தொகுத்தும் விரித்தும் காட்டுகிறது. இவற்றால் தமிழரின் வாழ்க்கைப் பாங்கை உணரமுடியும்.
காதல் வாழ்க்கையில் தலைவியின் பங்கும், உரையாடல்களும் நிகழும் சூழல்கள் இப்பகுதியில் தொகுத்துக் காட்டப்படுகின்றன.
- தலைவன் வருகையில் பகற்குறியும், இரவுக்குறியும் பிழைபட்டபோது
- அவன் வாராதபோது அவளுக்குப் பொழுது போகாமை
- குறியிடத்தைப் பார்க்கும்போதெல்லாம்
- திடீரென அவன் வீட்டுக்கே வந்துவிட்டால் அவனுக்கு உதவுதல்
- பெருந்தடைகளைக் கடந்து அவன் வரும்போது
- அவள் கூடிய பின்னர் நாணத்தொடு அவனை அனுப்பும்போது
- திருமணத்துக்குப் பின் உறவு என்று தோழி தடுக்கும்போது
- பெற்றோர் திருமணத்துக்கு உடன்பட்டபோதும், மறுத்தபோதும்
தலைவியின் கூற்று நிகழும்.
கற்புக் காலத்தில் தலைவியின் பங்கும், உரையாடுதலும் பற்றித் தொகுத்துரைக்கப்படும் செய்திகள்:
- உரிமை தந்த தலைவனின் அன்பைப் பாராட்டுதல்
- தலைவன் பிரிந்த காலத்தில் நோதல்
- குளத்தில் பிற மகளிருடன் நீராடியவனிடம் ஊடல்
- ஈன்றணிமைக் காலத்தில் தலைவன் புதியவளை நாடித் திரும்பியபோது ஊடல்
- கெஞ்சும் தலைவனை அவளிடம் கெஞ்சு எனல்
- அவளிடம் செல் எனத் திட்டுதல்
- காமக்கிழத்தி தன் மகனைத் தழுவி விளையாடும்போது மகனைத் திட்டுதல்.
- இந்த விளையாட்டுக் கண்டுகொள்ளாமல் செல்லல்
- தந்தையை ஒப்பர் மகன் என்று குழந்தையைப் பழித்தல்.
- அவன் விலகியிருந்த கொடுமையை எண்ணித் தானும் தற்காலிகமாக விலகி நிற்றல்.
- தன் காலடியில் வணங்கிய தலைவனை அந்தப் பெண்கள் இதனைக் காணவேண்டும் எனல்.
- அணி செய்வித்த தன் மகனை அவனது பரத்தை தூக்கும்போது நோதல்
- பரத்தை சூள் உரைத்ததைப் பற்றிக் கடிதல்
- தோழி தலைவன் பக்கம் பேசும்போது எதிர்த்துப் பேசுதல்.
இப்படித் தலைவி காய்ந்தும் (சினந்தும்), உவந்தும் (மகிழ்ந்தும்), பிரிந்தும் (ஊடியும்), பெட்டும் (விரும்பியும்) பேசுவாள்.
அடிக்குறிப்புகள்
தொகுகாண்க
தொகுதொகு | அகத்திணை மாந்தர் |
---|---|
அகத்திணைத் தலைவர்கள் | தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
|
அகத்திணை வாயில்கள் | தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர் | வரைவின் மகளிர் | பரத்தையர்
|