அகமது அலி (எழுத்தாளர்)

பாக்கித்தான் எழுத்தாளர்

அகமது அலி (Ahmed Ali 1 ஜூலை 1910 தில்லி – 14 ஜனவரி 1994 கராச்சி ) ( உருது: احمد علی‎ ) ஒரு பாகிஸ்தான் நாவலாசிரியர், கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், இராஜதந்திரி மற்றும் அறிஞர் ஆவார் . நவீன உருது சிறுகதையின் முன்னோடி என இவர் அறியப்படுகிறார். அங்கரே (எம்பர்ஸ்), 1932; ஹமாரி கலி (இவர் லேன்), 1940; கைத் கானா (சிறைச்சாலை-வீடு), 1942; மற்றும் மட் சே பெஹ்லே (மரணத்திற்கு முன்), 1945[1] ஆகியன இவரது படைப்புகளில் குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுப்புகள் ஆகும். 1940 ஆம் ஆண்டில் டுவிலைட் இன் டெல்லி எனும் புதினத்தை ஆங்கிலத்தில் எழுதினார். ஆங்கிலத்தில் இவர் எழுதிய முதல் புதினம் இது ஆகும்.[2]

சுயசரிதை

தொகு

பிரித்தானிய இந்தியாவின் டெல்லியில் பிறந்த அகமது அலி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் லக்னோ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். இந்தக் கல்லூரியில் பயிலும் போது ஆங்கிலப் பிரிவில் அதிக மதிப்பெண்களைப் பெற்றார் [3] 1932 முதல் 1946 வரை, அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் லக்னோவில் உள்ள இவர் பயின்ற கல்விச் சாலை உள்ளிட்ட முன்னணி இந்திய பல்கலைக்கழகங்களில் இவர் கல்வி கற்பித்தார். கல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரியில் 1944 ஆம் ஆண்டு முதல் 1947 வரை இவர் பேராசிரியராகவும், ஆங்கிலத் துறையின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் 1942–45 முதல் இரண்டாம் உலகப் போரின்போது இந்தியாவில் பிபிசி ஊடக நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் இயக்குநராகவும் இருந்தார்.[4] அதைத் தொடர்ந்து, இந்திய பிரித்தானிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நாஞ்சிங் பல்கலைக்கழகத்திற்கு பிரித்தானிய கவுன்சிலில் கவுரவ பேராசிரியராக இருந்தார். 1948 ஆம் ஆண்டில், இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இவர் நாடு திரும்ப முயற்சித்தபோது அப்போதைய சீனாவிற்கான இந்தியத் தூதர் கே.பி.எஸ் மேனன் அதை அனுமதிக்க வில்லை.இதனால் இவர் பாகிஸ்தான் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[5]

1948 ஆம் ஆண்டில் இவர் கராச்சிக்கு குடிபெயர்ந்தார். பின்னர், இவர் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கான வெளிநாட்டிற்கான விளம்பர இயக்குநராக நியமிக்கப்பட்டார். பிரதமர் லியாகத் அலிகானின் உத்தரவின் பேரில் 1950 ல் பாகிஸ்தான் வெளியுறவு சேவையில் சேர்ந்தார்.

படைப்புகள்

தொகு

1940 ஆம் ஆண்டில் லண்டனில் ஹோகார்ட் பிரஸ் வெளியிட்ட டுவிலைட் இன் டெல்லி எனும் புதினத்தினை ஆங்கில மொழியில் வெளியிட்டார். இதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார்.[6] ஆங்கிலத்தில் இவர் எழுதிய முதல் புதினம் இது ஆகும். இந்த புதினம், அதன் தலைப்பில் குறிப்பிதனைப் போல, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரித்தானிய காலனித்துவத்தின் முன்னேற்றத்தையும் முஸ்லீம் பிரபுத்துவத்தின் வீழ்ச்சியையும் இந்த நூல் விவரிக்கிறது.[2] அல்குர் ஆன் தற்காலிக மொழிபெயர்ப்பு எனும் இவரின் நூல் சிறந்த மொழிபெயர்ப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

தொகு

1979 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அகாடமி ஆஃப் லெட்டர்ஸின் நிறுவன உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் ஜனாதிபதியால் 1980 ஆம் ஆண்டில் இவர் சித்தாரா-இ-இம்தியாஸ் (ஸ்டார் ஆஃப் எக்ஸலன்ஸ்) எனும் விருது பெற்றார்.மேலும் ஜனவரி 14, 2005 அன்று, பாகிஸ்தான் போஸ்ட் தனது 'மென் ஆஃப் லெட்டர்ஸ்' தொடரில் இவரது நினைவாக ஒரு நினைவு தபால் தலையினை வெளியிட்டது.[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Profile of Professor Ahmed Ali on paknetmag.com website, Retrieved 31 August 2019
  2. 2.0 2.1 Profile of Ahmed Ali (writer) on Encyclopædia Britannica Retrieved 31 August 2019
  3. Dr. T. Jeevan Kumar, "Ahmed Ali: A Progressive Writer" in The English Literature Journal, Vol. 1, No. 2 (2014):57
  4. Orwell and Politics. Penguin UK, 2001 on Google Books Retrieved 23 April 2018
  5. Introduction by the author, Ahmed Ali, Twilight in Delhi, Rupa Publishing Co., Delhi, 1993
  6. Twilight in Delhi, The Hogarth Press, 1940; Oxford University Press, Delhi, 1966; OUP, Karachi, 1984; Sterling Paperbacks, Delhi, 1973; New Directions, New York, 1994; Rupa Publications, Delhi, 2007; Urdu translation, Akrash Press, Karachi, 1963, Jamia Millia, Delhi, 1969; (French) French translation, Editions Gallimard, Paris, 1989; Spanish translation, Ediciones Martinez Roca, 1991.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_அலி_(எழுத்தாளர்)&oldid=3924457" இலிருந்து மீள்விக்கப்பட்டது