அக்கு ஷா

இந்தியக் கலைஞர்

அக்கு வாஜ்பாய் ஷா (Haku Vajubhai Shah) (24 மார்ச் 1934 - 21 மார்ச் 2019) ஓர் இந்திய ஓவியரும், காந்தியம், கலாச்சார மானுடவியல், நாட்டுப்புறம், பழங்குடிக் கலை மற்றும் கலாச்சாரம் பற்றிய எழுத்தாளரும் ஆவார். இவரது கலை பரோடா குழுமத்தைச் சேர்ந்தது. இவரது படைப்புகள் நாட்டுப்புற அல்லது பழங்குடி கலைகளின் கருப்பொருள்களை இந்தியக் கலைக்கு கொண்டு வந்த கலைஞர்களின் வரிசையில் கருதப்படுகின்றன. [1] [2]

அக்கு ஷா
பிறப்புஅக்கு வாஜ்பாய் ஷா
(1934-03-26)26 மார்ச்சு 1934
வாலோத், குசராத்து, இந்தியா
இறப்பு21 மார்ச்சு 2019(2019-03-21) (அகவை 84)
தேசியம் இந்தியா
அறியப்படுவதுஓவியம், பழங்குடிக் கலை, எழுத்தாளர்
அரசியல் இயக்கம்பரோடா குழுமம்
விருதுகள்பத்மசிறீ (1989)

கலைக்கு இவர் செய்த பங்களிப்புக்காக பத்மசிறீ விருது (1989), ஜவகர்லால் நேரு கூட்டாளர் கௌரவம், கலா ரத்னா உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார். [3]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

தொகு

இவர், மார்ச் 26, 1934இல், [4] [5] வலோதில் (இப்போது குசராத்தின் சூரத் மாவட்டம்) வாஜ்பாய் மற்றும் வதன்பென் ஆகியோருக்குப் பிறந்தார். இவரது தாயார் மகாத்மா காந்தியால் தாக்கம் பெற்றார். அது இவரையும் பாதித்தது. இவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி கல்வியை வலோதில் முடித்தார். படிக்கும்போதே மாணவர் சங்கத்தின் தீவிர உறுப்பினராக இருந்தார். 1955 ஆம் ஆண்டில் வடோதரா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் நுண்கலைகளில் (பி.எஃப்.ஏ) பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் நுண்கலைகளில் முதுகலை பட்டமும் பெற்றார் (எம்.எஃப்.ஏ). [3] [6]

தொழில்

தொகு

இவரது பணிகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. 1965 வாக்கில் இவர் கொல்கத்தா மற்றும் மும்பையில் பல தனி நிகழ்ச்சிகளை நடத்தினார். 1968ஆம் ஆண்டில், பிலடெல்பியா கலை அருங்காட்சியகத்தில் ஆர்ட் கிரிடிக் ஸ்டெல்லா கிராம்ரிச் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த 'அறியப்படாத இந்தியா' என்ற கண்காட்சியை இவர் நடத்தினார். அதே ஆண்டில் இராக்ஃபெல்லர் உதவித் தொகையையும், 1971 இல் நேரு கூட்டாளர் விருதையும் பெற்றார். [6]

பல ஆண்டுகளாக, கிராமப்புற மற்றும் பழங்குடி கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள், மரபுகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் குறித்து விரிவான கள ஆராய்ச்சி மற்றும் ஆவணங்களை இவர் மேற்கொண்டார். தெற்கு குசராத்தில் உள்ள ஒரு காந்தி ஆசிரமத்தில் பல ஆண்டுகளாக கற்பித்த இவர், அகமதாபாத்தில் உள்ள குஜராத் வித்யாபீடத்தில் ஒரு பழங்குடி அருங்காட்சியகத்தை நிறுவினார். இது மகாத்மா காந்தியால் அமைக்கப்பட்டது. இவர் அதை பல ஆண்டுகளாக அருங்காட்சியகத்தை நிர்வகித்தார். இது இவரது கடைசி பணியாக இருந்தது. [3]

இவரது படைப்புகள் பழங்குடி கலை மற்றும் கலாச்சாரத்தால் ஆழமாக பாதிக்கப்பட்டிருந்தன. இவரது பல படைப்புகளில் கருப்பொருளாக பக்தி இயக்கம், குறிப்பாக அதன் நிர்குனக் கவிதை ஆகியவை இடம் பெற்றன. [3] காந்திய தத்துவத்தாலும் இவர் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். [7] 1980களில், ராஜஸ்தானின் உதயப்பூரில் சில்பிராம் என்ற கிராமத்தில் ஒரு கைவினைக் கிராமம் அமைப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.

2009 ஆம் ஆண்டில், "மனுஷ்" என்ற தலைப்பில் தனது நினைவுக் குறிப்புகளை வெளியிட்டார். [7]

இறப்பு

தொகு

மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அகமதாபாத்தில் 2019 மார்ச் 21 அன்று காலமானார். [3] [7]

விருதுகள்

தொகு

குழந்தைகள் புத்தகங்கள்

தொகு

வெளியீடுகள்

தொகு
  • 1969: Community Ancestor Worship', (in Gujarati, Hindi and English, Gujarat Vidyapith, Ahmedabad. (with Vimal Shah and Ramesh Shroff)
  • 1970: Rural Craftsmen and their work, equipment and techniques in the Mer village of Ratadi in Saurashtra, India. National Institute of Design Ahmedabad (with Eberhard Fischer)
  • 1971: Schlichter Eintrag-Ikat aus Süd-Gujarat, Indien, Die Herstellung von Lendentüchern für die Chaudhri-Stämme in Mandvi durch Khatri-Weber in Tribus Vol. 19:47–69, Linden-Museum, Stuttgart. (with Eberhard Fischer)
  • 1971: Mogra dev, tribal crocodile gods of the Chodhri, Gamit and Vasava tribes, South Gujarat, India. Gujarat Vidyapith, Ahmedabad (with Eberhard Fischer)
  • 1972: Kunsttraditionen in Nordindien: Stammeskunst, Volkskunst, klassische Kunst. Museum Rietberg Zürich (with Eberhard Fischer)
  • 1973: Simple weft-ikat' from South Gujarat, India. Calico Museum of Textiles, Ahmedebad (with Eberhard Fischer)
  • 1973: Vetra ne khambha, memorials for the dead, wooden figures and memorial slabs of the Chodhri, Gamit and Vasava tribes, South Gujarat, India. Gujarat Vidyapith, Ahmedabad (with Eberhard Fischer)
  • 1974: Tatauieren in Kutch, in Ethnologische Zeitschrift Zürich Vol.2:105–129 Völkerkundemuseum Zürich. (with Eberhard Fischer)
  • 1975: Kites flourishing in Ahmedabad, India, in Asian Culture Centre for UNESCO.
  • 1976, Treatment against Ghosts and Spirits, the Bhagtai-ceremony of the Chodhri tribe in Gujarat, in German Scholars on India, vol.2:51–60, Bombay (with Eberhard Fischer)
  • 1978: Folk Myth and Tribal Magic, in Art Heritage exhibition catalogue no.1.
  • 1979: More lights on the Harappan Terracotta Figures, in The Eastern Anthropologist with Suman Pandya)
  • 1980: The ritual paintings of the god Pithora Baba, Zürcher Zeitschrift für Ethnologie, vol. 11: 7–62.
  • 1982: Tempeltücher für die Muttergöttinnen in Indien, Zeremonien, Herstellung und Ikonographie gemalter und gedruckter Stoffbilder aus Gujarat, Museum Rietberg Zürich (with Eberhard Fischer and Jyotindra Jain)
  • 1982: The voice that paints, in Shilpakar, pp. 77–87, Crafts Council of Western India, Bombay.
  • 1984: On Art and Ritual, India International Centre Quarterly, vol. 11, no.4:14–33, New Delhi. (Interview with Geeti Sen)
  • 1985: Form and many Forms of Mother Clay, Contemporary Indian Pottery and Terracotta (with contributions by Pupul Jayakar, C. Sivaramamurti and Stella Kramrisch) exhibition catalogue for the National Crafts Museum, New Delhi.
  • 1985: Votive terracottas of Gujarat , Mapin Publishers, Ahmedabad. (edited by Carmen Kegal)
  • 1985: Gopal, ein indischer Balladensänger zeichnet sein Leben, Jogi Gopal gay chhe, Gopal chitre chhe (German and Gujarati) Peter Hammer Verlag, Wuppertal. (with Barbara and Eberhard Fischer) Gopal singt, Lieder eines indischen Balladensängers und Zeichners, tape and leaflet of songs by Gopal.
  • 1987, Some 19th-century garâs pata or jajmâniî documents of Muslim potters in Kutch, in Verhandlungen der Naturforschenden Gesellschaft, Basel, vol. 97:103–120, Museum für Völkerkunde Basel. (with Eberhard Fischer)
  • 1991, Mati in Indigenous Visions, India International Centre Quarterly, New Delhi (interview with Geeti Sen)
  • 1992, Teju means radiating light, in Brunner and Vogelsanger edit. Teju zeichnet, aus den Malheften einer indischen Familie (pp. 5–12), Völkerkundemuseum der Universität Zürich.
  • 1992: Contemporary streams of tribal and folk art, exhibition catalogue New South Wales Gallery, Australia.
  • 2009: Manush (memoirs).

மேலும் படிக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Lyrical grace: A painting by Haku Shah – Jamini Roy may have been the first modern to... பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் The Telegraph, 11 March 2005.
  2. "Artist Haku Shah dies at 85". Devdiscourse. 2019-03-21.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Artist Haku Shah dies at 85". Devdiscourse. 2019-03-21."Artist Haku Shah dies at 85". Devdiscourse. Devdiscourse News Desk. 21 March 2019.
  4. Sawai, Bhadra Vikram (May 2019). Doshi, Deepak. ed. "હકુભાઈ શાહ: કલાની પીંછી અને ગાંધીની દ્રષ્ટિ" (in gu). Navneet Samarpan (Mumbai: P. V. Shankarankutti, பாரதிய வித்தியா பவன்) 40 (1): 38–40. பன்னாட்டுத் தர தொடர் எண்:2455-4162. 
  5. Artist Haku Shah dies at 85
  6. 6.0 6.1 Painter, writer, anthropologist, mentor and inspiration to many in many realms of life — Haku Shah is considered an authority on folk and tribal art. பரணிடப்பட்டது 2012-11-04 at the வந்தவழி இயந்திரம் தி இந்து, 10 January 2007.
  7. 7.0 7.1 7.2 Sawai, Bhadra Vikram (May 2019). Doshi, Deepak. ed. "હકુભાઈ શાહ: કલાની પીંછી અને ગાંધીની દ્રષ્ટિ" (in gu). Navneet Samarpan (Mumbai: P. V. Shankarankutti, பாரதிய வித்தியா பவன்) 40 (1): 38–40. பன்னாட்டுத் தர தொடர் எண்:2455-4162. Sawai, Bhadra Vikram (May 2019). Doshi, Deepak (ed.). "હકુભાઈ શાહ: કલાની પીંછી અને ગાંધીની દ્રષ્ટિ" [Hakubhai Shah: Paintbrush of Art and Vision of Gandhi]. Navneet Samarpan (in Gujarati). Mumbai: P. V. Shankarankutti, Bharatiya Vidya Bhavan. 40 (1): 38–40. ISSN 2455-4162.
  8. All India Fine Arts & Crafts Society, New Delhi
  9. "Excerpts".
  10. "DesiLit". www.desilit.org.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கு_ஷா&oldid=3741079" இலிருந்து மீள்விக்கப்பட்டது