அஞ்சுகிராமம்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
அஞ்சுகிராமம் (ஆங்கிலம்:Anjugramam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சுற்றுலா தலங்களான கன்னியாகுமரி, வட்டக் கோட்டை மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை இதன் அருகாமையில் உள்ளது.
அஞ்சுகிராமம் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | அகத்தீஸ்வரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
10,982 (2011[update]) • 1,445/km2 (3,743/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 7.60 சதுர கிலோமீட்டர்கள் (2.93 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/anjugramam |
அமைவிடம்
தொகுஅஞ்சுகிராமம் பேரூராட்சி, கன்னியாகுமரியிலிருந்து 8 கிமீ; நாகரகோவிலிருந்து 20 கிமீ; காவல்கிணற்றிலிருந்து 15 கிமீ; தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு7.60 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3760 வீடுகளும், 10982 மக்கள்தொகையும் கொண்டது.
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ அஞ்சுகிராமம் பேரூராட்சியின் இணையதளம்