அடவி பாபிராஜு

தெலுங்கு எழுத்தாளர்

அடவி பாபிராஜு ( Adivi Baapiraju ) (1895-1952) இந்தியாவைச் சேர்ந்த பல்துறை அறிஞராவார். இவர் தெலுங்கு மொழி புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், ஓவியர், கலை இயக்குனர் மற்றும் தெலுங்கு நாடகம் மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறையில் தனது படைப்புகளுக்காக அறியப்பட்ட காலனித்துவ எதிர்ப்பு தேசியவாதியுமாவார்.[1][2] கோனகன்னா ரெட்டி, நாராயண ராவ் மற்றும் ஹிமாபிந்து போன்ற இலக்கியப் படைப்புகளுக்காக இவர் அறியப்படுகிறார்.[3]

Adivi Baapiraju
பிறப்பு(1895-10-08)8 அக்டோபர் 1895
பீமவரம், மேற்கு கோதாவரி மாவட்டம் in மேற்கு கோதாவரி மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்புமணிப்பால், கருநாடகம், India
தேசியம்Indian
பணிNovelist, playwright
செயற்பாட்டுக்
காலம்
1895-1952

வாழ்க்கை தொகு

பாபிராஜு ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பீமவரம் அருகே உள்ள சாரேபல்லே என்ற ஊரில் 1895 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி பிறந்தார். ஆரம்பக் கல்வியை பீமவரத்திலும், உயர்கல்வியை நரசாபுரம் மற்றும் ராஜமகேந்திரவரத்திலும் பயின்றார். இவர் அஜந்தா குகைகள், அம்பி போன்ற நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பார்வையிட்டார். இதனால் கலை மற்றும் ஓவியங்களில் இவருக்கு ஆர்வம் வளர்ந்தது. பிபின் சந்திர பால் போன்றவர்களால் ஈர்க்கப்பட்டு, பாபிராஜு 1921 இல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று 1922 இல் சுமார் ஒரு வருடம் சிறையில் இருந்தார். [4] சிறையில் இருந்த அனுபவங்களை இவர் தனது "தொல்கரி" புத்தகத்தில் எழுதினார். [2] விடுதலையான பிறகு பாபிராஜு சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பீமவரத்தில் ஒரு வருடம் வழக்கறிஞர் தொழில் செய்து பின்னர் அதை கைவிட்டார்.[1]

 
விசாகப்பட்டினம் ஆர்.கே கடற்கரைச் சாலையில் உள்ள அடவி பாபிராஜு சிலை

பாபிராஜு மச்சிலிப்பட்டிணத்தின் ஜடேய கலாசாலையின் முதல்வராக சிறிது காலம் பணியாற்றினார். 1934 இல் இவர் கலை இயக்குநராக தெலுங்குத் திரையுலகில் நுழைவதற்காக அந்த வேலையை விட்டுவிட்டார். [1] துருவ விஜயம், மீராபாய், அனுசூயா ஆகிய படங்களை இயக்கினார். 1943 முதல் 1946 வரை ஐதராபாத்தில் இருந்து வெளியான மிஜான் என்ற தெலுங்கு நாளிதழை பாபிராஜு திருத்தி வெளியிட்டார். பாபிராஜு நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் எழுதியுள்ளார். விசுவநாத சத்யநாராயணனின் கிணேரசனி படாலு, நந்தூரியின் என்கிபடாலு போன்ற படைப்புகளுக்கு ஓவியங்களை வரைந்துள்ளார் . [1]

இறப்பு தொகு

பாபிராஜு, 1952 இல் இறந்தார். [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Encyclopedia of Indian Literature பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-260-1803-8 Sahitya Akademi
  2. 2.0 2.1 "Adavi Bapiraju". www.vepachedu.org.
  3. "Rich tributes paid to Adavi Bapiraju". The Hindu. 8 October 2016. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/Rich-tributes-paid-to-Adavi-Bapiraju/article15477333.ece. 
  4. "Archived copy". Archived from the original on 21 September 2011. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடவி_பாபிராஜு&oldid=3879062" இலிருந்து மீள்விக்கப்பட்டது