விசுவநாத சத்யநாராயணா

சாகித்திய அகாதமி விருது பெற்ற தெலுங்கு எழுத்தாளர்

விசுவநாத சத்யநாராயணா (ஆங்கிலம்: Viswanatha Satyanarayana) (பிறப்பு:10 செப்டம்பர் 1895   - இறப்பு: 18 அக்டோபர் 1976) இவர் ஒரு 20 ஆம் நூற்றாண்டின் தெலுங்கு எழுத்தாளர் ஆவார். 1895 ஆம் ஆண்டில் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் விசயவாடாவில் சோபானாத்ரி மற்றும் பார்வதி ஆகியோருக்கு பிறந்தார். இவரது படைப்புகள் கவிதை, புதினம், நாடகம், சிறுகதைகள் மற்றும் உரைநடை, வரலாறு, தத்துவம், மதம், சமூகவியல், அரசியல் அறிவியல், மொழியியல், உளவியல் மற்றும் உணர்வு நிலை ஆய்வுகள், அறிவாய்வியல், அழகியல் மற்றும் ஆன்மிகம் போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது. இவர் செல்லப்பில்லா வெங்கட சாத்திரி என்பவரின் மாணவராக இருந்தார். இவர் செல்லப்பில்லா திருப்பதி வெங்கட காவலு, திவாகர்லா திருப்பதி சாத்திரி என்ற இரட்டைப் பெயரில் நன்கு அறியப்பட்டவர். விசுவநாதரின் கவிதை பாணி இயற்கையின் பாரம்பரியத்தை கொண்ண்டிருந்தது. இவரது பிரபலமான படைப்புகளில் இராமாயண கல்ப விருச்சமு (வரமளிக்கும் இராமாயண தெய்வீக மரம்), கின்னெர்சனி பாடலு ( தேவதை பாடல்கள்) மற்றும் வெயிபடகாலு (ஆயிரம் முக்காடுகள்) ஆகியவை அடங்கும்.

இந்தியாவின் 2017 அஞ்சல் முத்திரையில் சத்தியநாராயணா

இவர் சிலகாலம் கரீம்நகர் அரசு கல்லூரியின் முதல் முதல்வராக (1959–61) பணியாற்றினார். [1] அவருக்கு ஞானபீட விருது [2] மற்றும் பத்ம பூஷண் 1971 இல் வழக்கப்பட்டது. [3]

தெலுங்கு இலக்கியத்தின் எளிதான உரைநடைகளுக்கு இணையான "இலவச-வசனம்" இயக்கம், அலங்காரம் (யதி), ஒலிப்பு (பிரசா) மற்றும் சந்தங்கள் (அளவு) போன்ற கவிதைகளின் கடுமையான விதிகளைத் பறக்கவிட்ட ஒரு வைராக்கியவாதி என்று விமர்சிக்கப்பட்டார். இருப்பினும் இது இவர் உருவாக்கிய பல்வேறு வகையான இலக்கியங்களின் ஒரு பகுதியை மட்டுமே உள்ளடக்கியது. அதே சமயம், தெலுங்கு இலக்கியத்தில் இவர் உள்ளடக்கிய பாடங்களின் ஆழத்தையும், இலக்கியத்தில் தேர்ச்சியையும் பொருத்தக்கூடிய சமகாலத்தவர்கள் யாரும் இல்லை. இவரது நினைவுகள் உள்ளடங்கிய ஒரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. [4] [5]

வாழ்க்கை

தொகு

விசுவநாத சத்யநாராயணன் பிராமண நில உரிமையாளரான சோபனாத்ரியின் மகன் ஆவார். இவரது தந்தை அதிகப்படியான தாராள எண்ணம், தொண்டு மனப்பான்மை ஆகியவற்றின் காரணமாக தனது மனைவி பார்வதியுடன் வறிய நிலையில் இருந்தார். இவர் ஆந்திரப் பிரதேசம் கிருஷ்ணா மாவட்டத்தில், சென்னை மாகாணத்தில் (தற்போது ஆந்திராவின் உங்குத்துரு மண்டலம்) அவர்களின் முன்னோர்களின் இடத்தில் 1895 செப்டம்பர் 10 இல் பிறந்தார்.

இவர் 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முறைசாரா பள்ளிகளாக அங்கீகரிக்கப்பட்ட வீதி படிக்குச் (அதாவது tr: தெருப் பள்ளி) கல்வி கற்கச் சென்றார். இவரது குழந்தை பருவத்தில் கிராம கலாச்சாரம் சத்தியநாராயணவின் மீது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து இவர் நிறைய கற்றுக்கொண்டார். தனது குழந்தை பருவத்தில், பல தெரு நாட்டுப்புற கலை வடிவங்களின் பாரம்பரிய கலை சத்யநாராயணனை பல வழிகளில் ஈர்த்தது. இந்த கலை வடிவங்களில் கதை சொல்லும் பாணி, சிறந்த கவிதை, இசை, செயல்திறன் மற்றும் நடனம் ஆகியவை வெவ்வேறு வடிவங்களில் அடங்கும். அவருடைய சிந்தனை மற்றும் கதை சொல்லல் ஆகியவற்றில் அவர்கள் ஆழமான எண்ணத்தை ஏற்படுத்தினார்கள். சாதிகள் மற்றும் சமூக தடைகளுக்கு அப்பாற்பட்ட கிராம மக்களிடையே பிணைப்பு, கிராம வாழ்க்கையின் அழகு ஆகியவை அவரது சிந்தனையையும் சித்தாந்தத்தையும் பின்னர் வடிவமைத்தன.

11 வயதில் இவரது உயர்கல்வி அருகிலுள்ள நகரமான மச்சிலிப்பட்டணத்தில் உள்ள நன்கு அறியப்பட்ட நோபல் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. அதற்குள் தனது தொண்டு மனப்பான்மை காரணமாக கிட்டத்தட்ட தனது செல்வத்தை இழந்த இவரது தந்தை சோபனாத்ரி, ஆங்கில மைய கல்வி தனது மகனுக்கு நல்ல வாழ்க்கை பெற உதவக்கூடும் என்று நினைத்தார். [6]

வரலாறு

தொகு

வரலாறு என்பது மன்னர்களின் கதை அல்ல, ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மனிதனின் சமூகவியல், அரசியல், பொருளாதார, கலாச்சார, விஞ்ஞான, ஆன்மீக மற்றும் அழகியல் வாழ்க்கை மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி பற்றிய புரிதலை அளிக்கும் கதை என்று விசுவநாதரின் கருத்து இருந்தது. [7] கோட்டா வெங்கடச்சலத்தின் காலவரிசையை அடிப்படையாகக் கொண்டு விசுவநாதர் பண்டைய மற்றும் இடைக்கால சமுதாயத்தின் இந்த அம்சங்களை சித்தரிக்கும் புராண வைரா கிரந்தமாலா , நேபாள ராசவம்ச சரித்திரம், காஷ்மீர் ராசவம்ச சரித்திரம் என்ற மூன்று தொடர் புதினங்களை எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

தொகு
 
தன்னைப் பற்றிய விஸ்வநாத சத்யநாராயணாவின் கவிதை

விசுவநாதரின் இலக்கியப் படைப்புகளில் 30 கவிதைகள், 20 நாடகங்கள், 60 புதினங்கள், 10 விமர்சன மதிப்பீடுகள், 200 கன்ட காவியங்கள், 35 சிறுகதைகள், மூன்று நாடகங்கள், 70 கட்டுரைகள், 50 வானொலி நாடகங்கள், ஆங்கிலத்தில் 10 கட்டுரைகள், 10 சமசுகிருதப் படைப்புகள், மூன்று மொழிபெயர்ப்புகள், 100 அறிமுகங்கள் மற்றும் முன்னுரைகள் மற்றும் வானொலி பேச்சுக்கள் போன்றவிகள் அடங்கும். இவரது சில கவிதைகள் மற்றும் புதினங்கள் ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம், உருது மற்றும் சமசுகிருத போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

வெயிபடகாலு என்பது பின்னர் இந்தி மொழியில்]] முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் அவர்களால் "சகசுரபன்" என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. [8]

புதினங்கள்

தொகு

விசுவநாதரின் பெரும்பாலான புதினங்கள் வளர்ந்து வரும் சமூக நிலைமைகளை சித்தரிக்கின்றன. மேலும் கலாச்சாரம் மற்றும் மனித இயல்பு மற்றும் நனவு பற்றிய ஆழமான பகுப்பாய்வை உள்ளடக்கியது.


குறிப்புகள்

தொகு
  1. CiNaRe: A pioneer of ‘free verse’ in Telugu literature. New Indian Express. 13 June 2017
  2. "Jnanpith Laureates Official listings". Jnanpith Website. Archived from the original on 13 October 2007. பார்க்கப்பட்ட நாள் 7 November 2008.
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  4. V. Raghavendra. "Book festival: stall showcasing works of 'Kavi Samrat' a highlight". The Hindu.
  5. "Viswanatha Satyanarayana deserved a Nobel". http://www.thehindu.com/news/states/andhra-pradesh/article3666971.ece. 
  6. "viswanatha satyanarayana navalalu, telugu navalalu, viswanatha books" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-12-20. Archived from the original on 2018-12-30. பார்க்கப்பட்ட நாள் 2018-12-30.
  7. Introduction to Purana Vaira Granthamala
  8. Modern Indian literature, an anthology. George, K. M., Sahitya Akademi. New Delhi: Sahitya Akademi. 1992. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8172013248. இணையக் கணினி நூலக மைய எண் 29599405.{{cite book}}: CS1 maint: others (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவநாத_சத்யநாராயணா&oldid=3681893" இலிருந்து மீள்விக்கப்பட்டது