அனிதா கவுல்

அனிதா கவுல் (இயற்பெயர்: கிரிபலானி; 19 செப்டம்பர் 1954 - 10 அக்டோபர் 2016) என்பவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. இந்தியக் கல்வித் துறைக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்கு மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தினை இயற்றியதில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவராக இருந்தார்.[1] இதன் விளைவாக இந்திய அரசியலமைப்பின் 21-ஏ பிரிவின் கீழ் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி உரிமையினை அடிப்படை உரிமையாக்கியது. இவர் நீதித்துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் இந்தியச் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் முன்னுரிமை வரிசை அரசு ஊழியராகப் பணியாற்றினார்.

அனிதா கவுல்
பிறப்பு19 செப்டம்பர் 1954
இறப்பு10 அக்டோபர் 2016
பணிஇந்திய ஆட்சிப் பணி

பணி தொகு

கல்வி தொகு

2006-2012க்கும் இடையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வித் துறை அமைச்சகத்தில் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில்,[2] இவர் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அரசியலமைப்பு சட்டம் முன் கல்வி உரிமைச்சட்ட பாதுகாப்பினை இந்திய உச்ச நீதிமன்றத்தில் பெற்றுத்தந்தார். இவர் முன்பு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் (NCERT) செயலாளராக பணியாற்றினார், இந்திய அரசின் இந்த தன்னாட்சி அமைப்பின், தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2005கான சமூக விவாதத்தில் முயற்சிகளை முன்னெடுத்தார். தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு 2005 இந்தியாவில் குழந்தைகளுக்கு என்ன கற்பிக்கப்பட வேண்டும், எப்படிக் கற்பிக்கப்பட வேண்டும் என்பதை வகுத்துள்ளது.[3]

1990களில், உலக வங்கி நிதியளித்த மாவட்ட முதன்மைக் கல்வித் திட்டத்தின் திட்ட (1996-1999) இயக்குநராகப் பணியாற்றினார். கர்நாடக அரசாங்கத்தின் கல்வித் துறைச் செயலாளராக 1999 முதல் 2000 வரை பணியாற்றி உள்ளார்.[4] இவர் கர்நாடகத்தின் தொடக்கப் பள்ளிகளில் கற்றல் குறித்த நளி காளி (மகிழ்ச்சியான கற்றல்) அணுகுமுறையைக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றினார். இத்திட்டம் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் உதவியுடன் கிராமப்புற தொடக்கப் பள்ளிகளில், குறிப்பாகப் பெண் குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கல்விகற்றலை உறுதிப்படுத்தியது.[5]

ஆரம்பத்தில், இவர் தேசிய கல்வியறிவு இயக்கத்தின் (1988-1992) இயக்குநராக பணியாற்றினார். கல்வி குறித்த சீர்திருத்தங்களை ஆதரித்து[6] மிகவும் வெற்றிகரமான மாவட்ட அடிப்படையிலான எழுத்தறிவு பிரச்சாரங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினார்.[7][8] அனைவருக்குமான எழுத்தறிவு பிரச்சாரங்கள் 1989இல் எர்ணாகுளம் மாவட்டத்தில் தொடங்கியது. கல்வியறிவு குறித்த இலக்கினை இலக்கை அடைய மக்களின் பங்கேற்பின் எழுச்சியை உருவாக்க உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பங்கேற்பின் அவசியம் என்பதால் அவர்களின் பங்களிப்பும் உறுதிசெய்யப்பட்டது.[7]

பிற தொழில் சிறப்பம்சங்கள் தொகு

இந்திய அரசாங்க பணியின் இறுதிக் காலத்தில், நீதித்துறை செயலாளராக, தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம், 2014 நிறைவேற்றுவதற்கு இவர் முக்கிய பங்காற்றினார். நீதிபதிகள் நியமனம் மற்றும் நீதிபதிகளை இந்தியாவின் உயர் நீதித்துறைக்கு மாற்றுவதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டது. [9]

கர்நாடகாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இயக்குநராக (1993-1995), 73வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட சமயத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்குப் பயிற்சித் திட்டங்களை நடத்தினார். சுகாதாரம், கல்வி, நீர் மற்றும் ஆரோக்கியம் மற்றும் பொதுச் சொத்து பிரச்சினைகள் குறித்து இப்பயிற்சி அமைந்தது.[7] பின்னர், கர்நாடகாவில் நிர்வாகப் பயிற்சி நிறுவனம், மாநில ஊரக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனம் தலைமை இயக்குநராகச் செயல்பட்டார். இந்த நிறுவனங்கள் மூலம், மகளிர் ஊராட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி குறித்த கருத்தாக்கம் மற்றும் செயல்படுத்துவதில் தனது முயற்சியினை முன்னெடுத்துச் சென்றார். பெரிய அளவிலான, பங்கேற்பு, பயிற்சித் திட்டம் காரணமாகக் கர்நாடகாவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 80,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை இந்த பயிற்சி சென்றடைந்தது.[10]

அனிதா கவுல் நினைவு சொற்பொழிவு தொகு

அனிதா கவுல் நினைவு சொற்பொழிவு என்பது ஆண்டுதோறும் நடைபெறும் சொற்பொழிவாகும். இது சமத்துவ ஆய்வுகள் மையம் பரணிடப்பட்டது 2019-07-23 at the வந்தவழி இயந்திரம், வானவில் அறக்கட்டளை இந்தியா பரணிடப்பட்டது 2019-07-23 at the வந்தவழி இயந்திரம் மற்றும் மொபைல் க்ரீச்ஸ் அமைப்புகள் அனிதா கவுலின் நினைவாக ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளாகும்.

முதலாவது அனிதா கவுல் நினைவு சொற்பொழிவு 2017 அக்டோபர் 15 அன்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு முன்னாள் இயக்குநர் பேராசிரியர் கிருஷ்ண குமாரால் வழங்கப்பட்டது. எம். வி. அறக்கட்டளை நிறுவனரும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சாந்தா சின்ஹா தலைமையில் "இந்தியாவில் கல்வி மற்றும் சமத்துவமின்மை" என்ற தலைப்பில் இந்த சொற்பொழிவு நடத்தப்பட்டது. [11]

இரண்டாவது அனிதா கவுல் நினைவு சொற்பொழிவு 2018 அக்டோபர் 13 அன்று நடைபெற்றது. ஐதராபாத் நல்சார் சட்டப் பல்கலைக்கழக, பேராசிரியர் அமிதா தண்டா, மஸ்தூர் கிசான் சக்தி சங்கேதன் நிறுவனர் அரூனா ரோய், தலைமையில் [12] "அனைவருக்கும் கல்விக்கான உரிமையை உணர்தல்: நீதிமன்றங்களின் பலிபீடத்திலா அல்லது மக்களின் கைகளிலா" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Ramachandran, Vimala (2016). "In Memoriam: Anita Kaul". Seminar 687 (November 2015). http://www.india-seminar.com/2016/687/687_in_memoriam.htm. 
  2. "About Bureaucrats In India". 12 October 2016. பார்க்கப்பட்ட நாள் 26 October 2016.
  3. "National Curriculum Framework 2005" (PDF).
  4. "Centre for Innovations in Public Systems - Education". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2021-09-19.
  5. "Nali-Kali initiative - Karnataka". UNICEF India. Archived from the original on 2020-02-08. பார்க்கப்பட்ட நாள் 2021-09-19.
  6. Mangla, Akshay (June 2017). "Elite strategies and incremental policy change: The expansion of primary education in India" (in en). Governance 31 (2): 381–399. doi:10.1111/gove.12299. பன்னாட்டுத் தர தொடர் எண்:1468-0491. "It bears emphasizing that the officials advocating for reforms were in some ways unconventional....Perhaps, for that reason, social programs attracted highly committed officials. For example, Anita Kaul, who led the NLM during its first two years, spent more than 25 years of her IAS career working in social sector programs, including education, nutrition and women and child development.". 
  7. 7.0 7.1 7.2 Ghosh, Avik (1997). "Looking Beyond Literacy Campaigns". Economic and Political Weekly 32 (51): 3246–3248. 
  8. Bordia, Anil; Kaul, Anita (March 1992). "Literacy Efforts in India". The Annals of the American Academy of Political and Social Science 520 (1): 151–162. doi:10.1177/0002716292520001016. 
  9. "Parliament passes Judicial Appointments bill". http://indianexpress.com/article/india/politics/rajya-sabha-passes-judicial-appointments-bill/. 
  10. Kato, Rika (2004). "Research Visit to India". Research Centre for the Local Public Human Resources and Policy Development. http://lorc.ryukoku.ac.jp/phase1/docs/india_summary_report.pdf. பார்த்த நாள்: 2021-09-19. 
  11. "1st Anita Kaul Memorial Lecture". 24 December 2018.
  12. "2nd Anita Kaul Memorial Lecture". 24 December 2018.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_கவுல்&oldid=3579270" இலிருந்து மீள்விக்கப்பட்டது