அமரன் (2024 திரைப்படம்)

2024 திரைப்படம்

அமரன் ( Amaran ) [a] இராஜ்குமார் பெரியசாமி எழுத்து, இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரிப்பில், 31 அக்டோபர் 2024இல் வெளிவந்த தமிழ் அதிரடி போர்த் திரைப்படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், சாய் பல்லவி, பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீ குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இது இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனை அடிப்படையாகக் கொண்ட சிவ் அரூர் மற்றும் இராகுல் சிங் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ் என்ற புத்தகத் தொடரின் தழுவலாகும்.

அமரன்
படத்தின் முதல் சுவரொட்டி
இயக்கம்இராஜ்குமார் பெரியசாமி
தயாரிப்பு
திரைக்கதைஇராஜ்குமார் பெரியசாமி
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுசி. எச். சாய்
படத்தொகுப்புஆர். கலைவாணன்
கலையகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுமதிப்பீடு. 150–200 கோடி[1][2]
மொத்த வருவாய்மதிப்பீடு. 200 கோடி[3][4]

சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக நடிக்கும் 21வது படம் என்பதால் #SK21 என்ற தற்காலிகத் தலைப்பில் சனவரி 2022 இல் இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதிகாரப்பூர்வ தலைப்பு பிப்ரவரி 2024 இல் அறிவிக்கப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி மே 2023 இல் தொடங்கியது. தற்போது காஷ்மீர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, சி. எச். சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

நடிகர்கள்

தொகு
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு அமரன் என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது இதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்

பாடல்கள்

தொகு

சிவகார்த்திகேயன், இராஜ்குமார் பெரியசாமி ஆகியோருடன் இணைந்து ஜி. வி. பிரகாஷ் குமார் முதல் தடவையாக இசையமைத்துள்ளார். இசை உரிமையை சரிகம வாங்கியது.[6] ஜென் மார்ட்டின் இசையமைத்த முகரத் புஜா காணொளி 2023 மே 5 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படப் பாடல்களில் ஜென் மார்ட்டின், சத்திய நாராயணன், மதுவந்தி கணேஷ், இரமணி ஆகியோரின் குரல்களும், விஷ்ணு எடவன் எழுதிய பாடல்களும் இடம்பெற்றன.[7] படத்தில் சில வேகமான நடனப் பாடல்கள் இருப்பதாக இராஜ்குமார் கூறினார்.[8] சூன் மாதத்தின் இடையில், படத்தின் இசை வேலைகள் ஏறக்குறைய முடிந்துவிட்டதாக பிரகாஷ் தெரிவித்தார்.[9] முதல் தனிப்பாடலான "ஹே மின்னலே" அக்டோபர் 4 அன்று வெளியிடப்பட்டது.[10] இரண்டாவது தனிப்பாடலான "வெண்ணிலவு சாரல்" அக்டோபர் 17 அன்று வெளியிடப்பட்டது.[11] இசை வெளியீட்டு விழா 2024 அக்டோபர் 18 அன்று சென்னையிலுள்ள சிறீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.[12] மூன்றாவது தனிப்பாடலான "உயிரே" 2024 அக்டோபர் 30 அன்று வெளியிடப்பட்டது.[13]  திரைப்படத்தில் கூடுதலாகச் சேர்த்த பாடல்களில் நான்காவது தனிப்பாடலாக "வானே வானே" என்ற பாடலும், ஐந்தாவது தனிப்பாடலாக "அமரா" என்ற பாடலும், 2024 நவம்பர் 9, 11 தேதிகள் முறையே வெளியிடப்பட்டது.[14][15]

வெளியீடு

தொகு

இத்திரைப்படம் 2024 அக்டோபர் 31 தீபாவளியன்று வெளியிடப்பட்டது. முன்பாக இத்திரைப்படம் ஆகத்து 24 அன்று வெளியிட திட்டமிடப்பட்டதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்தது.[16] இராஜ்குமார் 2024 இன் மத்தியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியதை அடுத்து [17] தொலைக்காட்சி உரிமையை நெற்ஃபிளிக்சு வாங்கியது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியானது.[18] [19]

சர்ச்சை

தொகு

2024 பிப்ரவரி 21 அன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட விளம்பர முன்னோட்டத்தில் முஸ்லிம்களை "மோசமாக" சித்தரிப்பதாகக் கூறி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் மற்றும் கடலூரில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.[20] [21]

குறிப்பு

தொகு
  1. The title also means "Warrior" and "Godly".[5]

மேற்கோள்கள்

தொகு
  1. M, Marimuthu (25 May 2024). "Amaran: 'துப்பாக்கி ஏந்தி நின்னான்பாரு..': நிறைவுபெற்ற சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தின் படப்பிடிப்பு". Hindustan Times. Archived from the original on 17 July 2024. பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.
  2. "How much did Sai Pallavi charge for Sivakarthikeyan's biographical action war movie Amaran?". PINKVILLA (in ஆங்கிலம்). 2024-10-29. பார்க்கப்பட்ட நாள் 2024-11-03.
  3. "Amaran Box Office Update: Sivakarthikeyan and Sai Pallavi movie crosses MASSIVE Rs 200 crore worldwide". PINKVILLA (in ஆங்கிலம்). 2024-11-09. பார்க்கப்பட்ட நாள் 2024-11-09.
  4. "Amaran Beats Rajinikanth's Vettaiyan At Tamil Nadu Box Office, Hits Rs 200 Crore Globally In 10 Days". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-09.
  5. "Rajkumar Periasamy on 'Amaran' title for Sivakarthikeyan's film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 February 2024 இம் மூலத்தில் இருந்து 18 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240218074300/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/director-rajkumar-periasamy-reveals-the-story-behind-choosing-amaran-title-for-sivakarthikeyans-film/articleshow/107775959.cms. 
  6. Raaj Kamal Films International [RKFI]. "Soldiers protect us Music uplifts us! Happy to be associated with @saregamasouth for #Amaran" (Tweet). பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2024. Missing or empty |date= (help)
  7. SK21 | Ulaganayagan Kamal Haasan | SPIP | Sivakarthikeyan | Rajkumar Periasamy | GV Prakash (in ஆங்கிலம்). Turmeric Media. 5 மே 2023. Archived from the original on 24 பெப்பிரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 24 பெப்பிரவரி 2024 – via யூடியூப்.
  8. "Amaran: Director Rajkumar Periasamy talks about Sai Pallavi's role in Sivakarthikeyan starrer". Pinkvilla (in ஆங்கிலம்). 23 February 2024. Archived from the original on 25 பெப்பிரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 25 பெப்பிரவரி 2024.
  9. "GV Prakash teases first single release from Vikram's 'Thangalaan'". தி டைம்ஸ் ஆப் இந்தியா. 12 June 2024 இம் மூலத்தில் இருந்து 13 சூன் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240613011945/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/gv-prakash-teases-first-single-release-from-vikrams-thangalaan/articleshow/110930485.cms. 
  10. "உருக வைக்கும் அமரன் படத்தின் முதல் மெலடி பாடல்!". டைம்ஸ் நவ். 4 October 2024. Archived from the original on 6 October 2024. பார்க்கப்பட்ட நாள் 4 October 2024.
  11. B, Jayabhuvaneshwari (17 October 2024). "'Vennilavu Saaral' song from Sivakarthikeyan's Amaran out". சினிமா எக்சுபிரசு (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 October 2024.
  12. "Mani Ratnam to Sai Pallavi at Amaran audio launch: Hope to work with you one day". India Today (in ஆங்கிலம்). 2024-10-21. பார்க்கப்பட்ட நாள் 2024-10-29.
  13. M, Narayani (2024-10-30). "'Uyirey' song from Sivakarthikeyan-Sai Pallavi's Amaran out". சினிமா எக்சுபிரசு (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-30.
  14. G. V. Prakash (2024-11-08). Vaane Vaane (From "Amaran") (Tamil). பார்க்கப்பட்ட நாள் 2024-11-09 – via YouTube.
  15. Arivu - Topic (2024-11-11). Amara (From "Amaran") (Tamil). பார்க்கப்பட்ட நாள் 2024-11-14 – via YouTube.
  16. "Director Rajkumar Periasamy reveals Sai Pallavi plays a challenging role in 'Amaran'". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/director-rajkumar-periasamy-reveals-sai-pallavis-challenging-role-in-amaran/articleshow/107959995.cms. 
  17. Sivakarthikeyan's Multiple Look in Amaran,Kashmir Shooting Diaries - Rajkumar Periasamy | SaiPallavi (in ஆங்கிலம்), archived from the original on 23 February 2024, பார்க்கப்பட்ட நாள் 2024-02-23
  18. "Amaran: Sivakarthikeyan's title teaser & all about Major Mukund Varadarajan". Moviecrow. 16 February 2024. Archived from the original on 17 February 2024. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.
  19. Express, Team Cinema (2024-02-16). "WATCH | Sivakarthikeyan dons army uniform in 'Amaran', teaser out". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-24.
  20. "Protests in Tamil Nadu over portrayal of Muslims in teaser of Sivakarthikeyan film 'Amaran'". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 22 February 2024. Archived from the original on 22 February 2024. பார்க்கப்பட்ட நாள் 22 February 2024.
  21. "Protests erupt in TN over ‘derogatory’ portrayal of Muslims in Sivakarthikeyan's 'Amaran' teaser". 2024-02-23. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/protests-erupt-in-tn-over-derogatory-portrayal-of-muslims-in-sivakarthikeyans-amaran-teaser/articleshow/107935721.cms?_gl=1*m189x4*_ga*TFFOWE1oaks4ZDg0eTRfWXNXSk9WQjlwSS04NnZBZHBGalNyLUVCYkw4S3hNejV5X3JPX1Rua04zREVHUGdJWA... 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமரன்_(2024_திரைப்படம்)&oldid=4147279" இலிருந்து மீள்விக்கப்பட்டது