அமராவதிபுதூர்

அமராவதிபுதூர் (ஆங்கிலம்: Amaravathipudur) இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது. இது காரைக்குடி-தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலை 210 (NH-210) இல் தேவகோட்டை இரஸ்தாவிற்கு அடுத்து அமைந்துள்ளது. இவ்வூர் பேருந்து நிலையத்தை உள்ளூர்வாசிகள் உசிலாண்டி என்பர்.

அமராவதிபுதூர்
—  ஊராட்சி  —
அமராவதிபுதூர்
இருப்பிடம்: அமராவதிபுதூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°01′19″N 78°46′03″E / 10.021881°N 78.767536°E / 10.021881; 78.767536ஆள்கூறுகள்: 10°01′19″N 78°46′03″E / 10.021881°N 78.767536°E / 10.021881; 78.767536
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் J. ஜெயகாந்தன், இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கவிஞர் கண்ணதாசன் இவ்வூரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் (குருகுலம்) எட்டாம் வகுப்பு வரைப் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[4]

சங்கரபதிக்கோட்டைதொகு

 
சங்கரபதிக்கோட்டையின் சிதிலமடைந்த காட்சி.

200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சங்கரபதிக்கோட்டை (குருகுலத்தின் பின்புறம் உள்ள பெரும் காட்டுப்பகுதியில்) அமராவதிபுதூரில் அமைந்துள்ளது. இதனை 18 ஆம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவரின் படைத்தலைவராக இருந்த மருது சகோதரர்கள் (சின்னமருது மற்றும் பெரியமருது) ஆங்கிலேயர் படைகளை எதிர்த்த போது இந்த சங்கரபதிக்கோட்டையிலேயே ஆங்கிலேயர்களால் மருது சகோதரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.[5]

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. வனவாசம் - எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்
  5. 200-year-old Independence Landmark is Castle in the Air. Is State Listening?
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமராவதிபுதூர்&oldid=2034155" இருந்து மீள்விக்கப்பட்டது