அமராவதி (இந்திரலோகம்)
அமராவதி என்பதற்கு என்றும் அழியாத நகரம் என்று பொருள்.[1] இந்நகரம் தேவர்களின் தலைவரான இந்திரன் தனது மனைவி இந்திராணியுடன் வாழுமிடம்.இந்நகரம் தேவ உலகத்தின் தலைநகரம் ஆகும்.[2][3]
விளக்கம்
தொகுஇந்து தொன்மவியல்படி, பிரம்மாவின் மகனும், தேவர்களின் கட்டிடக் கலைஞருமான விஸ்வகர்மா நிறுவிய நகரமே அமராவதி ஆகும். அமராவதி பட்டணத்தில் நறுமலர்கள் கொண்ட பூந்தோட்டங்களும், சாகா வரம் அளிக்கும் அமிர்தம், விருப்பத்தை நிறைவேற்றும் கற்பக விருட்சம், கேட்டதை தரும் காமதேனு, நடனமாட அழகிய அரம்பையர்கள், இன்னிசைக்க கந்தர்வர்கள், இந்திரன் ஏறிவரும் வெள்ளை யானை மற்றும் உச்சைசிரவஸ் எனும் வெள்ளைக் குதிரை உள்ளது. இந்த அமராவதி பட்டிணம் எண்ணூறு மைல் சுற்றளவும் நாற்பது மைல் உயரமும் கொண்டது.[4]இந்த அமராவதி பட்டிணத்தை பல முறை அசுரர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது.
அமராவதி நகரத்திற்கு மனிதர்கள் செல்ல அனுமதி இல்லை. இருப்பினும் தேவர்களுக்கு இணையான மனிதர்களான நகுசன், யயாதி, அருச்சுனன் போன்றவர்கள் அமராவதி நகரத்திற்கு சென்று வந்தவர்களே.[5]அமராவதி பட்டணத்தின் தூண்கள் வைரத்தால் மின்னும்.அமரும் ஆசனங்கள் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்திரனின் சபா மண்டபமானது, முப்பத்தி மூன்று தேவர்கள், 48 ஆயிரம் ரிஷிகள் அமரத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
புராணங்களில்
தொகுகந்த புராணம்
தொகுகந்த புராணத்தில் அமராவதி பட்டணம் குறித்து விரிவாக விளக்கியுள்ளது:[6]
பிரம்ம புராணம்
தொகுபிரம்ம புராணத்தில் துவாரகை நகரத்தை நிறுவிய கிருஷ்ணர், அமராவதி பட்டணம் குறித்து விளக்குகையில் தெய்வீக நகரமான அமராவதி நூற்றுக்கணக்கான ஏரிகளும், நூற்றுக்கணக்கான பெரிய அரண்மனைகளும், பிரம்மாண்டமான பூங்காக்கள் மற்றும் வெளிப்புற சுவர்களைக் கொண்டுள்ளது. [7]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ www.wisdomlib.org (2009-04-11). "Amaravati, Amarāvati, Amarāvatī, Amaravatī: 27 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-02.
- ↑ Roshen Dalal (2014). Hinduism: An Alphabetical Guide. Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184752779. Entry: "Indraloka"
- ↑ www.wisdomlib.org (2009-04-11). "Amaravati, Amarāvati, Amarāvatī, Amaravatī: 27 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
- ↑ Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 66.
- ↑ www.wisdomlib.org (2020-10-13). "The Genesis of the Name Amarāvatī [Chapter 46]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
- ↑ www.wisdomlib.org (2020-10-13). "The Genesis of the Name Amarāvatī [Chapter 46]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
- ↑ www.wisdomlib.org (2018-03-31). "Mucukunda's Prayer [Chapter 88]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
வெளி இணைப்புகள்
தொகு- "The Mahabharata, Book 3: Vana Parva: Indralokagamana Parva: Section XLII". Sacred-texts.com. பார்க்கப்பட்ட நாள் 2014-03-30.
- "The Mahabharata, Book 3: Vana Parva: Indralokagamana Parva: Section XLIII". Sacred-texts.com. பார்க்கப்பட்ட நாள் 2014-03-30.