அம்ருதா பத்னாவிசு
அம்ருதா பத்னாவிசு (Amruta Fadnavis-பிறப்பு 9 ஏப்ரல் 1979) என்பவர் இந்திய வங்கியாளர், நடிகை, பாடகி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இவர் மகாராட்டிராவின் 9ஆவது மற்றும் தற்போதைய துணை முதல்வரான தேவேந்திர பட்னாவிசை மணந்தார். இவர் ஆக்சிஸ் வங்கியின் துணைத் தலைவர் பதவியை வகிக்கிறார்.[1][2]
அம்ருதா பட்னாவிசு | |
---|---|
அம்ருதா பட்னாவிசு பாடல் ஒலிப்பதிவின் போது | |
பிறப்பு | 9 ஏப்ரல் 1979 நாக்ப்பூர், மகாராட்டிரம், இந்தியா |
பணி | வங்கியாளர், நடிகை, பாடகர், சமூக சேவகர் |
வாழ்க்கைத் துணை | தேவேந்திர பத்னாவிசு |
பிள்ளைகள் | 1 |
இவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டோனால்ட் டிரம்ப் தலைமையிலான பன்னாட்டு அமைதி முயற்சியான தேசியக் காலை உணவு பிரார்த்தனை 2017-இல் இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.[3][4][5][6]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅம்ருதா பத்னாவிசு 1979ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி மகாராட்டிராவின் நாக்பூரில் ஒரு கண் மருத்துவரான சரத் இரானடே மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரான சாருலதா இரானடே ஆகியோருக்கு அம்ருதா இரானடே மகளாகப் பிறந்தார். இவர் ஆரம்பத்தில் நாக்பூரில் உள்ள தூய ஜோசப் கன்னிமாடப் பள்ளியில் படித்தார். இவர் 16 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான வரிப்பந்தாட்டம் வீராங்கனை ஆவார்.[7] நாக்பூரில் உள்ள ஜி. எஸ். வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் இவர் நிதித்துறையில் முதுகலை வணிக மேலாண்மை படித்தார். புனேவில் உள்ள சிம்பயோசிஸ் சட்டப் பள்ளியில் வரிவிதிப்பு சட்டங்களைப் படித்தார்.[8]
பட்னாவிசு 2003-இல் ஆக்சிஸ் வங்கியில் நிர்வாக காசாளராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் நாக்பூரில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் வணிகக் கிளைக்குத் தலைமை தாங்கினார்.[9]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅம்ருதா திசம்பர் 2005 இல் தேவேந்திர பத்னாவிசுவினை மணந்தார்.[10] இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.[11]
தொழில்
தொகுவங்கியாளராக
தொகுவங்கியாளராக, பட்னாவிசு கடந்த 17 ஆண்டுகளாக ஆக்சிஸ் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் ஒரு நிர்வாக காசாளராகச் சேர்ந்தார். தற்பொழுது பரிவர்த்தனை வங்கித் துறையில் துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார். இவர் சனவரி 2015-இல் மும்பையின் வொர்லியில் உள்ள பெருநிறுவன அலுவலகத்திற்கு மாற்றலானார். இவரது கணவர் மகாராட்டிராவின் முதலமைச்சரான பிறகும் ஆக்சிஸ் வங்கியில் தொடர்ந்து பணியாற்றினார்.[12]
பாடகராக
தொகுஆறாவது வயதிலிருந்தே பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்ற பட்னாவிசு, பல்வேறு சமூக நிகழ்ச்சிகளிலும், பல வணிக மற்றும் சமூகப் படங்களிலும் பாடியுள்ளார்.[13][14] பிரகாஷ் ஜாவின் ஜெய் கங்காஜலில் "சப் தன் மதி" என்ற பாடலின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். பிஜேபி தலைவர் கோபிநாத் முண்டேவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட சங்கர்ஷ் யாத்ராவில் ஒரு பாடலைப் பாடினார்.[15]
டி-சீரிஸ் வெளியிட்ட பத்னாவிசின் முதல் இசை காணொளி "ஃபிர் சே" அமிதாப் பச்சன் நடித்தது. ஒரே நாளில் 700,000 முறை பார்க்கப்பட்டு 14 இலட்சம் பார்வையினை மூன்று நாட்களில் பெற்றது.[16][17]
2018ஆம் ஆண்டில், இவரது பாடல் "மும்பை ஆற்றின் கீதம்" மும்பை-போய்சர், தகிசார், ஓசிவாரா மற்றும் மிதி ஆகிய நான்கு ஆறுகளைக் காப்பாற்றுவதாக இருந்தது.[18] 2020ஆம் ஆண்டில், இவர் அமில வீச்சுக்கு ஆளானவர்களுக்காக "அலக் மேரா யே ரங் ஹை" பாடலையும்,[19] கொரோனா வீரர்களுக்காக "து மந்திர் தூ ஷிவாலா"[20] மற்றும் பெண்களின் அதிகாரத்திற்காக "திலா ஜகு தியா" பாடலையும் பாடினார்.[21]
2022ஆம் ஆண்டு மகா சிவராத்திரியின் போது, பத்னாவிசு சமசுகிருத பாடலான சிவ தாண்டவ தோத்திரத்தின் ஒரு புதிய பாடலை அறிமுகப்படுத்தினார்.[22] டைம்ஸ் மியூசிக் மூலம் இப்பாடல் வெளியிடப்பட்டது. இது 14 ஏப்ரல் 2022[update] யூடுபேயில் 12 மில்லியனுக்கும் அதிகமானனோட்களால் பார்க்கப்பட்டது.[23]
ஒரு சமூக ஆர்வலராக
தொகு2017ஆம் ஆண்டில், பத்னாவிசு, வொர்லியில் உள்ள தேசிய விளையாட்டு குழுமம், இந்தியாவில் "அமிலத் தாக்குதலுக்குள்ளானவர்கள்" என்று அழைக்கப்படும் அமிலத் தாக்குதலிலிருந்து தப்பியவர்களின் அலங்கார அணிவகுப்பினை ஏற்பாடு செய்தார். மகாராட்டிர மாநில மகளிர் ஆணையத்துடன் இணைந்து திவ்யாஜ் அறக்கட்டளை இந்த நிகழ்ச்சியை நடத்தியது.[11][24][25] இதில் கலந்து கொண்ட மகாராட்டிர முதல்வர் தேவேந்திர பத்னாவிசு, அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை ₹ 300,000 லிருந்து ₹ 500,000ஆக உயர்த்தி அறிவித்தார்.[26]
2019ஆம் ஆண்டில், பத்னாவிசு மற்றும் திவ்யாஜ் அறக்கட்டளை மும்பையின் குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த 7 முதல் 15 வயதுக்குட்பட்ட தாழ்த்தப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்காக மிட்டி கே சிதாரே என்ற தலைப்பில் ஓர் இசைத் திறமை நிகழ்ச்சியை நடத்தியது.[27][28]
மற்ற நடவடிக்கைகள்
தொகுஅம்ருதா பத்னாவிசு 2015-இல் இந்திய-சீன அமைதியை மேம்படுத்துவதற்காக மானசரோவருக்கான தூதுக்குழுவை வழிநடத்தினார்.[29][30]
மகாராட்டிர மாநில புல்வெளி வரிப்பந்தாட்டத்துச் சங்கம் புனேவில் நடத்திய இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான 2017 டேவிசு கோப்பை போட்டியின் தலைமை புரவலராக பத்னாவிசை அறிவித்தது[31] நவம்பர் 2018இல் நடந்த எல் & டி மும்பை ஓபன் வரிப்பந்தாட்டத்து போட்டியின் தலைமை புரவலராக மீண்டும் அறிவிக்கப்பட்டார்.[32][33]
பத்னாவிசைப் பற்றிய ஆவணப்படமான தி வாய்ஸ் 2019-இல் இண்டிபெசுட் (IndieFEST) சிறந்த திரைப்பட ஆவணப்படப் பரிசினை வென்றது.[34] இதை எழுதி, இயக்கி, தயாரித்தவர் சாகர் பகர்.[34]
சர்ச்சைகள்
தொகுஅக்டோபர் 2018-இல், அம்ருதா பத்னாவிசு இந்தியாவின் முதல் சொகுசுக் கப்பல் கப்பலான 'ஆங்கிரியா'வின் தொடக்கப் பயணத்தில் கலந்து கொண்டார். பத்னாவிசு கப்பலின் விளிம்பில் அமர்ந்து தாமி எடுக்க உயிரை பணயம் வைத்து எடுத்த காணொளி இணையத்தில் வெளியானதை அடுத்து இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. கப்பலின் பாதுகாப்பான பகுதிகளுக்குத் திரும்புமாறு பாதுகாப்புப் பணியாளர்களின் பல கோரிக்கைகளை பத்னாவிசு புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. தாமி எடுப்பதற்காகத் தேவையற்ற முயற்சிகளை மேற்கொண்டு இளைஞர்களுக்கு ஒரு மோசமான முன்மாதிரியாக அமைந்ததற்காகப் பின்னர் மன்னிப்பு கேட்டார்.[35][36]
செப்டம்பர் 2019-இல், பத்னாவிசு பிரதமர் நரேந்திர மோதியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது, " நமது நாட்டின் தந்தை " என்று அழைத்ததற்காகச் சர்ச்சையில் சிக்கினார்.[37]
விருதுகள்
தொகு- பெண்கள் சிறப்பு விருதுகள் 2017.[38]
- நான் பெண் விருதுகள் 2017[39]
- ஆல் லேடீஸ் லீக் மற்றும் டிவைன் வைப்ரேஷன்ஸ் மூலம் பெண்கள் அதிகாரமளித்தலில் சிறந்து விளங்கியதற்காக 2017ஆம் ஆண்டுக்கான சிறப்புக்கான விருது.
- வங்கி மற்றும் நிதித் துறையில் சிறந்து விளங்கியதற்காக சூர்யதத்தா தேசிய விருது-2016.[40]
- சமுதாயத்தில் பெண்ணின் கண்ணியம் மற்றும் சமத்துவத்திற்கான சேவைக்காக தரைப்படை, விமானப்படை, கடற்படை மூலம் 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்மணி விருது வழங்கப்பட்டது.
- லோக்மத் மோஸ்ட் ஸ்டைலிஷ் ஐகான் – பவர் வுமன் விருது 2016 [41]
- ஜெயின் பன்னாட்டு வர்த்தக அமைப்பின் சக்தி பெண் விருது[சான்று தேவை]
- நெல்[ விவரங்கள் தேவை ]சன் மண்டேலா மனிதாபிமான விருது மற்றும் அங்கீகாரச் சான்றிதழ்[42]
மேற்கோள்கள்
தொகு- ↑ Mehta, Tejas (1 March 2016). "This New Singer Debuting In Bollywood Is A Chief Minister's Wife". NDTV. https://www.ndtv.com/mumbai-news/this-new-singer-debuting-in-bollywood-is-a-chief-ministers-wife-1282919.
- ↑ Mathur, Barkha (29 October 2014). "Fadnavis's banker wife to seek transfer from Nagpur" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/nagpur/Fadnaviss-banker-wife-to-seek-transfer-from-Nagpur/articleshow/44966058.cms.
- ↑ "Amruta Fadnavis attends 'National Prayer Breakfast' in the US". பிசினஸ் ஸ்டாண்டர்ட். Press Trust of India. 8 February 2017. http://www.business-standard.com/article/pti-stories/amruta-fadnavis-attends-national-prayer-breakfast-in-the-us-117020800589_1.html.
- ↑ "Amruta Fadnavis attends National Prayer Breakfast in the US". India Today. 8 February 2017. https://www.indiatoday.in/pti-feed/story/amruta-fadnavis-attends-national-prayer-breakfast-in-the-us-871648-2017-02-08.
- ↑ "Amruta Fadnavis talks on drought in US". The Indian Express. 7 February 2017. https://indianexpress.com/article/cities/mumbai/amruta-fadnavis-talks-on-drought-in-us/.
- ↑ "Trump event was a learning experience: Amruta Fadnavis". The Times of India. 10 February 2017. https://timesofindia.indiatimes.com/entertainment/marathi/amruta-fadnavis-at-trump-event/articleshow/57080928.cms.
- ↑ "I used to call him sir, have never demanded his time: Amruta Fadnavis" (in en). தி இந்தியன் எக்சுபிரசு. 31 அக்டோபர் 2014. https://indianexpress.com/article/india/politics/i-used-to-call-him-sir-have-never-demanded-his-time/.
- ↑ "How my life changed in 24 hours: Maharashtra Chief Minister Devendra Fadnavis' wife speaks" (in en). DNA India. 2 November 2014. https://www.dnaindia.com/mumbai/report-how-my-life-changed-in-24-hours-maharashtra-chief-minister-devendra-fadnavis-wife-speaks-2031366.
- ↑ "Like being a Banker but love being a Mom more - Amruta Fadnavis". Nagpur Today. 14 January 2015. https://www.nagpurtoday.in/love-being-a-banker-but-love-being-a-mom-more-amruta-fadnavis/01141759.
- ↑ "What's the secret to Devendra and Amruta Fadnavis' happy relationship?" (in en). Mid Day. 9 April 2019. https://www.mid-day.com/mumbai-guide/famous-personalities/photo/Devendra-Fadnavis-wife-Amruta-is-a-singer-banker-and-social-activist-14594/2.
- ↑ 11.0 11.1 "Amruta Fadnavis, daughter Divija walk the ramp". mid day. 7 March 2017. பார்க்கப்பட்ட நாள் 11 April 2022.
- ↑ Jore, Dharmendra (15 January 2015). "On first day at Mumbai office, CM's wife sets out to make friends" (in en). Mid Day. https://www.mid-day.com/mumbai/mumbai-news/article/on-first-day-at-mumbai-office--cm-s-wife-sets-out-to-make-friends-15915180.
- ↑ Lohana, Avinash (4 March 2017). "CM's wife Amruta Fadnavis sings for a Marathi biopic" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/cms-wife-amruta-fadnavis-sings-for-a-marathi-biopic/articleshow/57469930.cms.
- ↑ "Amruta Fadnavis sings kirtan at Santacruz Gurudwara Sahib on gurparab" (in en). Mumbai Mirror. 11 November 2019. https://mumbaimirror.indiatimes.com/mumbai/other/amruta-fadnavis-sings-kirtan-at-santacruz-gurudwara-sahib-on-gurparab/articleshow/56406767.cms.
- ↑ Deshpande, Manasi (12 September 2015). "Amruta Fadnavis, Maharashtra CM's wife debuts as singer in Munde biopic". தி இந்து. http://www.thehindu.com/entertainment/maharashtra-cms-wife-debuts-as-singer-in-munde-biopic/article7642516.ece.
- ↑ "Amruta Fadnavis' first music video launches" (in en). The Times of India. 1 June 2017. https://timesofindia.indiatimes.com/entertainment/marathi/music/amrutas-music-video-launched/articleshow/58943695.cms.
- ↑ "Maharashtra CM's Wife Amruta's Video With Big B Goes Viral, Viewed Over 7 Lakh Times in a Single Day". Daily Bhaskar. June 2017. பார்க்கப்பட்ட நாள் 11 April 2022.
- ↑ PTI (27 February 2018). "Mumbai River Anthem: Opposition seeks clarification from CM Devendra Fadnavis" (in en). DNA India. https://www.dnaindia.com/india/report-mumbai-river-anthem-opposition-seeks-clarification-from-cm-devendra-fadnavis-2589136.
- ↑ "HLatest Hindi Song 'Alag Mera Yeh Rang Hain' Sung By Amruta Fadnavis". timesofindia.indiatimes.com. 20 March 2020. https://timesofindia.indiatimes.com/videos/entertainment/music/hindi.
- ↑ Vijayakar (15 May 2020). "T-Series Presents Amruta Fadnavis' Tribute to Corona Warriors – 'Tu Mandir Tu Shivala'" (in en). India West இம் மூலத்தில் இருந்து 31 மே 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200531075700/https://www.indiawest.com/t-series-presents-amruta-fadnavis-tribute-to-corona-warriors-tu-mandir-tu-shivala/article_ed2db1b8-9675-11ea-b819-439baacfc257.html.
- ↑ "अमृता फडणवीस का नया गाना 'तिला जगू द्या' हुआ रिलीज, मिले 39 हजार से ज्यादा डिसलाइक" (in hi). ABP. 20 November 2020. https://www.abplive.com/entertainment/more-than-39-thousand-dislikes-amrita-fadnaviss-new-song-tila-jagu-dya-1645443.
- ↑ "New Shiv Tandav Song By Amruta Fadnavis Gets Millions of Views in Few Hours". News18. 25 February 2022. https://www.news18.com/news/movies/new-shiv-tandav-song-by-amruta-fadnavis-gets-millions-of-views-in-few-hours-4810172.html.
- ↑ "Shiv Tandav Stotram | Amruta Fadnavis | Ravi Jadhav | शिव तांडव स्तोत्र | MahaShivratri Special 2022". YouTube (in ஆங்கிலம்). Times Music Spiritual. பார்க்கப்பட்ட நாள் 14 April 2022.
- ↑ "The state women's commission, in association with NGO Divyaj Foundation, has also organised a confidence walk – Saksham". Indian Express. 2 March 2017. https://indianexpress.com/article/cities/mumbai/maharashtra-womens-panel-urges-more-punishment-for-acid-attack-convicts-4550409/.
- ↑ "Divyaj Foundation's Fashion show with 'Confidence Walk' by Acid Attack Victors attended by CM presided by wife Amruta Fadnavisaccess-date=11 April 2022". marathicineyug.com.
- ↑ "Amruta Fadnavis leads confidence walk for acid attack survivors; compensation increased to Rs 5 lakh". maharashtratoday.in. Archived from the original on 21 April 2017. பார்க்கப்பட்ட நாள் 14 April 2017.
- ↑ "Mumbai: Young stars to sing for Mitti ke Sitare honours". dna. 27 February 2019. பார்க்கப்பட்ட நாள் 27 February 2019.
- ↑ "Music reality show 'Mitti Ke Sitare' for underprivileged kids announced". Zee News. 1 February 2019. பார்க்கப்பட்ட நாள் 27 February 2019.
- ↑ "Sustainable Development Accelerator awards presented" (in en). 17 April 2018. https://www.thehindubusinessline.com/news/sustainable-development-accelerator-awards-presented/article23576667.ece.
- ↑ "Amruta Fadnavis Crowned As World Peace Ambassador". 17 August 2019. https://thisweekindia.news:443/article/amruta-fadnavis-crowned-as-world-peace-ambassador/20750.
- ↑ "From fashionable to frisky, Ms Fadnavis breaks stereotypes". asianage. 24 January 2017.
- ↑ D'Cunha, Zenia (22 August 2019). "Mumbai Open, India's only WTA tournament, won't be held in 2019" (in en-US). Scroll.in. https://scroll.in/field/934763/mumbai-open-indias-only-wta-tournament-not-to-be-held-in-2019.
- ↑ Haji, Irfan (24 November 2017). "Ankita Raina wants Bendrey as travelling coach". The Asian Age. https://www.asianage.com/sports/tennis/241117/ankita-raina-wants-bendrey-as-travelling-coach.html.
- ↑ 34.0 34.1 "Documentary On Maharashtra CM's Wife Amruta Fadnavis Wins At IndieFEST" (in en). spotboye. 29 May 2019. https://www.spotboye.com/bollywood/news/documentary-on-maharashtra-cm-s-wife-amruta-fadnavis-wins-at-indiefest/5cee0b95479c893942f9bdab.
- ↑ "Maharashtra CM's wife apologises for crossing cruise ship barricade for a selfie". Scroll.in. 22 October 2018. https://scroll.in/latest/899166/maharashtra-cms-wife-apologises-for-crossing-cruise-ship-barricade-for-a-selfie.
- ↑ "Maharashtra CM's wife Amruta Fadnavis apologises for selfie on ship, says it wasn't risky". The Hindu. 22 October 2018. https://www.thehindu.com/news/cities/mumbai/maharashtra-cms-wife-amruta-fadnavis-apologises-for-selfie-on-ship-says-it-wasnt-risky/article25284647.ece.
- ↑ "Amruta Fadnavis calls PM Modi father of the country; Twitter reminds her it is Mahatma Gandhi". Mumbai Mirror. 17 September 2019. https://mumbaimirror.indiatimes.com/mumbai/other/amruta-fadnavis-calls-pm-modi-father-of-the-country-twitter-reminds-her-it-is-mahatma-gandhi/articleshow/71168927.cms.
- ↑ "Amruta Fadnavis among WOW 2017 awardees" (in en). The Times of India. 12 June 2017. https://timesofindia.indiatimes.com/city/pune/amruta-fadnavis-receives-wow-award/articleshow/59106606.cms.
- ↑ "Amruta Fadnavis honoured with I Am Women Award 2017". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 11 April 2022.
- ↑ "Suryadatta Institute honours Mrs. Amruta Fadnavis with 2016 Suryadatta Lifetime Achievement Award". Suryadatta Group of Institutes SGI. பார்க்கப்பட்ட நாள் 11 April 2022.
- ↑ "Amruta Fadnavis: Maharashtra's Most Stylish Power Woman. Lokmat Maharashtra's Most Stylish Awards 2017 Winners". Lokmat. 13 September 2021.
- ↑ "Amruta Fadnavis honoured with Nelson Mandela Humanitarian Award". G News 18. பார்க்கப்பட்ட நாள் 11 April 2022.