அயோடோசில் முப்புளோரைடு

வேதிச் சேர்மம்

அயோடோசில் முப்புளோரைடு (Iodosyl trifluoride) என்பது IOF3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயோடின், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]

அயோடோசில் முப்புளோரைடு
Iodosyl trifluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
அயோடின் ஆக்சைடு முப்புளோரைடு, அயோடோசில்முப்புளோரைடு
இனங்காட்டிகள்
19058-78-7 Y
InChI
  • InChI=1S/F3IO/c1-4(2,3)5
    Key: SAHIKKKGOUDBAW-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23236028
  • F[I](=O)(F)F
பண்புகள்
F3IO
வாய்ப்பாட்டு எடை 199.90 g·mol−1
தோற்றம் நிறமற்ற ஊசிகள்
அடர்த்தி 3.95 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

அயோடின் ஐந்தாக்சைடையும் அயோடின் ஐம்புளோரைடையும் சேர்த்து வினைபுரியச் செய்தால் அயோடோசில் முப்புளோரைடு உருவாகும்.[2]

I2O5 + 3IF5 -> 5IOF3

அயோடின் மற்றும் புளோரின் வாயுக்கள் வினைபுரிவதாலும் அயோடோசில் முப்புளோரைடு உருவாகிறது:[3]

I2 + O2 + 3F2 → 2IOF3

அயோடின் ஐம்புளோரைடையும் தண்ணீரையும் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் அயோடோசில் முப்புளோரைடு உருவாகும்:

IF5 + H2O → IOF3 + 2HF

இயற்பியல் பண்புகள்

தொகு

அயோடோசில் முப்புளோரைடு நிறமற்ற நீருறிஞ்சும் ஊசி வடிவ படிகங்களாக காணப்படுகிறது. இது தண்ணீருடன் வினை புரியும்.[4]

வேதிப்பண்புகள்

தொகு

அயோடோசில் முப்புளோரைடு நிறமற்ற நீருறிஞ்சும் படிகமானதால் 110 பாகை செல்சியசு வெப்பநிலையில் IO2F மற்றும் IF5 சேர்மங்களாகச் சிதைகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Viers, Jimmy W.; Baird, H. Wallace (1 January 1967). "The crystal structure of iodine oxide trifluoride" (in en). Chemical Communications (21): 1093–1094. doi:10.1039/C19670001093. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-241X. https://pubs.rsc.org/en/content/articlelanding/1967/c1/c19670001093. பார்த்த நாள்: 24 May 2023. 
  2. Wiberg, Egon; Wiberg, Nils (2001). Inorganic Chemistry (in ஆங்கிலம்). Academic Press. p. 468. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-352651-9. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
  3. Aynsley, E. E.; Nichols, R.; Robinson, P. L. (1 January 1953). "126. Reactions of iodine pentafluoride with inorganic substances. Iodine oxytrifluoride and iodyl fluoride" (in en). Journal of the Chemical Society: 623–626. doi:10.1039/JR9530000623. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. https://pubs.rsc.org/en/content/articlelanding/1953/JR/jr9530000623. பார்த்த நாள்: 24 May 2023. 
  4. Haynes, William M. (4 June 2014). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்). CRC Press. pp. 4–67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-0868-9. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
  5. 第2版, 化学辞典. "ヨードシル塩(ヨードシルエン)とは? 意味や使い方". コトバンク (in ஜப்பானியம்). பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடோசில்_முப்புளோரைடு&oldid=3878430" இலிருந்து மீள்விக்கப்பட்டது