அரசு மகளிர் கல்லூரி, (நவகடல், சிறிநகர்)

அரசு மகளிர் கல்லூரி (நவகடல் சிறிநகர்), என்பது காசுமீரின் சிலம் ஆற்றின் தென்கரையில் 1961 ஆம் ஆண்டில் கல்வியின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கத்துக்காக நிறுவப்பட்ட மகளிர் கல்லூரியாகும்.

அரசு மகளிர் கல்லூரி, (நவகடல், சிறிநகர்)
گورنمنٹ کالج خواتین سرینگر
வகைஅரசு இளங்கலை மகளிர் கல்லூரி
உருவாக்கம்1961; 63 ஆண்டுகளுக்கு முன்னர் (1961)
சார்புகாசுமீர் பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
துணை வேந்தர்தலாத் அகமது
முதல்வர்முனைவர் முகமது பாரூக் மிர்
அமைவிடம், ,
190002

34°05′36″N 74°47′51″E / 34.0932102°N 74.7974332°E / 34.0932102; 74.7974332
வளாகம்நகர்ப்புறம்
மொழிஆங்கிலம், உருது, இந்தி, அரபு, பாரசீகம் மற்றும் காஷ்மீரி
நிறங்கள்        
இணையதளம்gcwnk.ac.in/%20கல்லூரி%20இணையதளம்
அரசு மகளிர் கல்லூரி, (நவகடல், சிறிநகர்) is located in ஜம்மு காஷ்மீர்
அரசு மகளிர் கல்லூரி, (நவகடல், சிறிநகர்)
Location in ஜம்மு காஷ்மீர்
அரசு மகளிர் கல்லூரி, (நவகடல், சிறிநகர்) is located in இந்தியா
அரசு மகளிர் கல்லூரி, (நவகடல், சிறிநகர்)
அரசு மகளிர் கல்லூரி, (நவகடல், சிறிநகர்) (இந்தியா)

காசுமீர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியானது பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டப்பிரிவு 2பி மற்றும் 12எஃப் கீழ் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலைக் கல்லூரியாகும். காசுமீர் பள்ளத்தாக்கில் வணிகம் மற்றும் மேலாண்மை படிப்புகளை வழங்கும் ஒரே மகளிர் கல்வி நிறுவனம் இதுவாகும்.[1]

இக்கல்லூரியானது தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் 'ஏ' தரம் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [2]

அமைவிடம் தொகு

சிறிநகரின் பழைய நகரத்தில் உள்ள ஷெர்-இ-காஸ் என்று அழைக்கப்படும் நவகதல் பாலத்திற்கு அருகில் சிலம் ஆற்றின் தெற்கு கரையில் இந்த நவகதல் மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. சிறிநகரின் பழைய நகரத்தில் அமைந்துள்ள பெண்களுக்கான ஒரே உயர்கல்வி நிறுவனம் இதுவாகும். [3] இக்கல்லூரி, சிறிநகர் நகர மையமான லால் சவுக்கின் தெற்கே சுமார் 6 கிமீ (3 மைல்) தொலைவிலும், வரலாற்று சிறப்புமிக்க ஜாமியா மஸ்ஜித்திற்கு மேற்கே சுமார் 1.5 கிமீ (0.93 மைல்) தூரத்திலும் அமைந்துள்ளது.

உருவாக்கம் தொகு

ஜம்மு-காஷ்மீரின் அப்போதைய பிரதமர் பக்சி குலாம் முகமது ஆட்சியின் போது 1961 ஆம் ஆண்டில் கலை மற்றும் அறிவியல் பாடங்களை பெண்களுக்கு கற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் இக்கல்லூரியை வெறும் 50 மாணவர்களுடன் 19 ஆசிரியர்களுடனும் நிறுவியுள்ளது.

வரலாறு தொகு

இக்கல்லூரி, வரலாற்றுச் சிறப்புமிக்க மகாராஜ் குஞ்ச் என்ற டோக்ரா வம்ச அரசர்களின் அரண்மனை வளாகத்தின் அருகில் அமைந்துள்ளது, ஷெர்-இ-காஸ் என்று அழைக்கப்படும் சிறிநகரின் வரலாற்றுச் சிறப்பியல்பு கொண்ட வர்த்தக மைய பகுதியும் இதன் அருகிலேயே உள்ளது.1890 ஆம் ஆண்டில் மகாராஜா பிரதாப் சிங்கால் நிறுவப்பட்ட மருத்துவமனை வளாகமே தற்போது இம்மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. முதலில் அந்த மருத்துவமனை உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. பின்னர் கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டது.

1952 ஆண்டில் சம்மு-காசுமீரின் அப்போதைய பிரதமர் ஷேக் முகமது அப்துல்லா இதை மகளிர் கல்லூரிக்கு உயர்த்த உத்தரவிட்டார், அதன்படி 1961 ஆம் ஆண்டில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் அப்பொதைய பிரதமராக இருந்த பக்சி குலாம் முகமது காலத்தில் கல்லூரி திறக்கப்பட்டது.

படிப்புகள் தொகு

கலை, அறிவியல், வணிகவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் பல்வேறு இளங்கலை படிப்புகளையும், தொழிற்கல்வி மற்றும் தொழிற்கல்வி படிப்புகளையும் பயிற்றுவிக்கப்படுகிறது.

  • இளங்கலை-கலைப் பாடங்கள்
  • இளநிலை அறிவியல் (மருத்துவம்)
  • இளநிலை அறிவியல் (மருத்துவம் அல்லாத பிரிவுகள்)
  • இளங்கலை வணிகவியல் (கணினிமயமாக்கப்பட்ட கணக்கியல்)
  • இளங்நிலை வணிக நிர்வாகவியல்
  • இளங்கலை சமூக அறிவியல்[4]

அங்கீகாரம் தொகு

தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அவையால் 2015ஆம் ஆண்டில் நவகதல் அரசு மகளிர் கல்லூரிக்கு "ஏ" தரத்தினை வழங்கியது.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள்".
  2. "Govt. College for Women Nawakadal Srinagar". பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.
  3. "Govt. College For Women Nawakadal, Srinagar Srinagar - Jammu And Kashmir". பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.
  4. "Government College for Women, Nawakadal". பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.