அருணாசலப் பிரதேச சமையல்

அருணாசலப் பிரதேச மாநில சமையல்

அருணாச்சலப் பிரதேச சமையல் (Arunachalese cuisine) என்பது இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின்பழங்குடியினரின் (அபதனி, சுகி, ஆதி மற்றும் நிஷி ஆகியோரின்) உணவு வகைகள் ஆகும். இவை பிராந்தியத்திற்குள் வேறுபடுகின்றன.

சமையல்

இது சமையல் முறை
கட்டுரைத் தொடரின் பகுதியாகும்
செய்முறைகளும் சமையல் பொருள்களும்
செய்முறைகள் - சமையல் பாத்திரங்கள்
சமைத்தலில் உள்ள அளவுகள்
தமிழர் சமையல்
உணவுப் பொருட்கள் பட்டியல்கள்
பிராந்திய சமையல் முறை

உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன்
தெற்காசியா - இலத்தின் அமெரிக்கா
மத்தியகிழக்கு - வட அமெரிக்கா - ஆப்பிரிக்கா
ஏனைய உணவு முறைகள்...

See also:
பிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள்
Wikibooks: Cookbook

புளித்த அரிசி அல்லது தினையிலிருந்து தயாரிக்கப்படும் அபோங் அல்லது அரிசி பீர் அருணாச்சல பிரதேசத்தில் ஒரு பிரபலமான பானமாகும். இது ஒரு மதுபானம் ஆகும்.[1] அரிசி பீர் வகைகளில் வெவ்வேறு சுவைகள் உள்ளன.

மீன், இறைச்சி (லுக்டர்) மற்றும் பல காய்கறிகளுடன் அரிசியும் முக்கிய உணவு உள்ளது. பல்வேறு வகையான அரிசி வகைகள் கிடைக்கின்றன. கீரை, இஞ்சி, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் மற்றும் சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்துத் தயாரிக்கப்படும் மிகவும் பொதுவான மற்றும் விருப்பமான காய்கறி ஆகும். வேகவைத்த அரிசி அப்பம் இலைகளினால் மூடி சமைக்கப்படுகிறது. சமைத்த அரிசியை பொதியிட ஒரு பிரபலமான வழி இதுவாகும். திராப் மற்றும் சங்லங் போன்ற கிழக்கு மாவட்டங்களில் உள்ள உணவுகள் உணவு தயாரிக்கும் விதத்தில் சில வித்தியாசமான முறைகளைக் கொண்டுள்ளன.

பல காட்டு மூலிகைகள் மற்றும் புதர்களில் உள்ள மூலிகைகள் உணவு வகைகளின் பகுதியாக உள்ளன. உலர்ந்த மூங்கில் தளிர்கள் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. புதிய மூங்கில் தளிர்கள் மிகவும் விரும்பப்படுகின்றன.

இந்தியச் சுதந்திரத்திற்கு முன், மலைவாழ் மக்களை வடகிழக்கு எல்லைப்புற முகமை மூலம் தனிமைப்படுத்தும் பிரித்தானியக் கொள்கை நடைமுறையிலிருந்தபோது, காட்டுப் பறவைகள் மற்றும் விலங்குகள் இவர்களின் உணவில் ஒரு பெரிய பகுதியாக இருந்தன. ஆனால் வேட்டையாடுவதற்கான நவீன கட்டுப்பாடுகள் இவற்றை நீக்கியது.

மேற்கோள்கள் தொகு

  1. Edgar Thorpe and Showick Thorpe, தொகுப்பாசிரியர் (2010). The Pearson Concise General Knowledge Manual (New ). Pearson Education India. பக். 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-2766-9. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணாசலப்_பிரதேச_சமையல்&oldid=3761389" இலிருந்து மீள்விக்கப்பட்டது