அருந்தினா
Arundina graminifolia | |
---|---|
Arundina graminifolia in கேரளம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
துணை சிற்றினம்: | |
பேரினம்: | Arundina |
இனம்: | A. graminifolia
|
இருசொற் பெயரீடு | |
Arundina graminifolia (D.Don) Hochr. | |
மாதிரி இனம் | |
Arundina speciosa[2] (synonym of A. graminifolia) Blume | |
வேறு பெயர்கள் [3][4] | |
|
அருந்தினா எனப்படும் அருந்தினா கிராமினிபோலியா (Arundina graminifolia); என்பது ஆர்க்கிட் இன மலர்களின் ஓர் வகையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இனமாகும். பூக்கும் தாவரமான இவ்வகை ஆர்க்கிட் மலர்கள் ஒரு வித்திலைத் தாவரத்தைச் சேர்ந்தவை. இந்த வெப்பமண்டல ஆசிய இனமானது இந்தியா, இலங்கை, நேபாளம், தாய்லாந்து, வியட்நாம், ரியுக்யு தீவுகள், மலேசியா, சிங்கப்பூர், சீனா முதல் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் நியூ கினியா வரை பரவியுள்ளது. இது ரியூனியன், பிஜி, பிரெஞ்சு பாலினீசியா, மைக்ரோனேஷியா, மேற்கிந்திய தீவுகள், கோஸ்டாரிகா, பனாமா மற்றும் ஹவாய் ஆகிய நாடுகளில் இயல்பான வாழிடம் கொண்ட இயற்கை மலராக உள்ளது. [3] [5] இது மூங்கில் ஆர்க்கிட் என்றும் அழைக்கப்படுகிறது. [6]
விளக்கம்
தொகுஅருண்டினா கிராமினிபோலியா என்பது ஒரு பிராந்திய, நிலையான நாணல் தண்டுகளுடன் கூடிய ஆர்க்கிட் வகை ஆகும், இது 70 சென்டிமீட்டர் முதல் 2 மீட்டருக்கும் இடையிலான உயரத்திற்கு வளரும் பெரிய கொத்துகளாக தாவரத்தண்டுகளுடன் உருவாகிறது]]
பின்னப்பட்ட நேரியல்புடைய இலைகள் நீளமான ஈட்டி வடிவமாக இருக்கும். இதன் இலைகளின் நீளம் 9 செ.மீ முதல் 19 செ. மீ வரை இருக்கும். மேலும் அகலம் 0.8 செ.மீ முதல் 1.5 செ.மீ வரை இலைகளின் உச்சி ஊசி வடிவ இலைகளாக இருக்கும். இலையடிச் செதில் எனப்படும் வகையில் இலையின் அடிப்பகுதி தண்டுகளுடன் இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருக்கும் .
இந்த ஆர்க்கிட் தாவரமானது கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் பூக்கும். இது முனையக் கொத்துக்களில் பூத்துள்ள பகட்டான திறந்த மலர்களுடன் காட்சியளிக்கிறது. அதிகபட்சம் பத்து மலர்கள் கொத்தாகக் கானப்படும். அவை 7 முதல் 16 வரையிலான முனையக் கொத்துகளில் அடுத்தடுத்து பூக்கின்றன. இந்த பூக்கள், 5 முதல் - 8 செ.மீ விட்டம் கொண்டவை. ஒரு வெண்மை நிறத்துடன் கூடிய ரோஜா நிற வட்டு அடிப்பகுதியாகவும் ஊதா இதழ்களை மேல்பகுதியாகவும் கொண்ட மலராக இவை இருக்கும். இதன் பூவடிச் செதிலானது அகன்ற முக்கோண வடிவில் மலர்க் கொத்துகளின் பிரதான தண்டுகளை சுற்றி இருக்கும். மேலு சிறிய தாவரங்களில் பெரும்பாலும் கணு முனைகளுக்குப் பிறகு பூக்கள் உருவாகின்றன. அவ்வப்போது கருவுறும் விதைக்காய்களில் மிகச்சிறிய தூள் விதைகள் உள்ளன. இதனால் விதைகள் மண்ணை அடைய அனுமதித்து இனப்பெருக்கத்திற்கு இவை உதவக் கூடும்.
சிங்கப்பூரில் இயற்கையாக வளர்ந்து வரும் ஆர்கிட் தாவரங்களில் 200 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வகை ஆர்கிட் இனங்கள் அங்கு அழிவுக்கு அருகில் உள்ளன. பெரும்பாலும் அதன் இயற்கை வாழ்விடங்கள், அதாவது மழைக்காடுகள் மற்றும் சதுப்புநில காடுகள் அழிக்கப்படுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள தாவரங்கள், பொதுவாக தபா களைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை இரண்டாம் நிலை காடுகளில் அல்லது வன விளிம்புகளில் காணப்படுகின்றன. இருப்பினும் கிழக்கு மலேசியாவின் சரவாக் நகரில் முழு வெப்பமன்டல இடங்களிலும் சாலையோரப் பகுதிகளிலும் இது மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது. இது பெரும்பாலும் சாலையோரங்களில் காணப்படும் மிகவும் பொதுவான பூச்செடி ஆகும்.
வகைகள்
தொகுதற்போது இரண்டு வகைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன (மே 2014): [3] அவை அருந்தினா கிராமினிபோலியா வர் . கிராமினிபோலியா மற்றும் அருந்தினா கிராமினிபோலியா வர் . ரெவோலுட்டா - அசாம் மற்றும் இலங்கையிலிருந்து கிழக்கிலிருந்து வியட்நாமிற்கும் தெற்கே ஜாவா வரை இவ்வகைத் தாவர இனங்கள் கானப்படுகின்றன.
குறிப்புகள்
தொகு- ↑ Blume, Carl (Karl) Ludwig von. 1825. Bijdragen tot de flora van Nederlandsch Indië 8: 401
- ↑ lectotype designated by Garay et Sweet, Orchids S. Ryukyu Islands 52. 1974
- ↑ 3.0 3.1 3.2 Kew World Checklist of Selected Plant Families, Arundina graminifolia
- ↑ Kew World Checklist of Selected Plant Families, Arundina graminifolia subsp. graminifolia
- ↑ US Department of Agriculture Plants profile
- ↑ See e.g. Das, S & Duttachoudhury, Manabendra & Mazumder, Pranab. (2013). In vitro propagation of Arundina graminifolia D. Don. Hochr - A bamboo orchid. Asian Journal of Pharmaceutical and Clinical Research. 6. 156-158.
வெளி இணைப்புகள்
தொகு- டேவ்ஸ் கார்டன், மூங்கில் ஆர்க்கிட், பறவை ஆர்க்கிட், புல் போன்ற இலை அருந்தினா, அருந்தினா கிராமினிபோலியா
- ஆர்க்கிட் பராமரிப்பு குறிப்புகள் அருந்தினா கிராமினிபோலியா
- IOSPE ஆர்க்கிட் புகைப்படங்கள் அருந்தினா கிராமினிபோலியா
- நியோட்ரோபிகல் சவன்னா (பனாமாவில்), மூங்கில் ஆர்க்கிட், அருந்தினா கிராமினிபோலியா
- கார்டினோ நர்சரி (டெல் ரே பீச் புளோரிடா அமெரிக்கா), அரிய மற்றும் அசாதாரண தாவரங்கள், மூங்கில் ஆர்க்கிட், அருந்தினா கிராமினிபோலியா