அலமாதி ஊராட்சி
அலமாதி ஊராட்சி (Alamathi Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2021-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 23221 ஆகும். இவர்களில் பெண்கள் 11324 பேரும் ஆண்கள் 11897 பேரும் உள்ளனர்.
அலமாதி | |||
— ஊராட்சி — | |||
ஆள்கூறு | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருவள்ளூர் | ||
வட்டம் | பொன்னேரி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | த. பிரபுசங்கர், இ. ஆ. ப [3] | ||
ஊராட்சி மன்ற தலைவர் | கெ. தமிழ்வாணன் | ||
மக்களவைத் தொகுதி | திருவள்ளூர் | ||
மக்களவை உறுப்பினர் | |||
சட்டமன்றத் தொகுதி | மாதவரம் | ||
சட்டமன்ற உறுப்பினர் | |||
மக்கள் தொகை | 9,221 | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
அடிப்படை வசதிகள்
தொகுதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2022ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
அடிப்படை வசதிகள் | எண்ணிக்கை |
---|---|
குடிநீர் இணைப்புகள் | 1535 |
தெருவிளக்குகள் | 5328 |
சிறு மின்விசைக் குழாய்கள் | 16 |
விசைப்பம்புகள் | 62 |
கைபம்புகள் | 3 |
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் | 20 |
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் | 5 |
உள்ளாட்சிக் கட்டடங்கள் | 9 |
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் | 5 |
கோவில்கள் | 19 |
ஏரிகள் | 3 |
ஊரணிகள் அல்லது குளங்கள் | 4 |
விளையாட்டு மையங்கள் | 2 |
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் | 13 |
ஊராட்சிச் சாலைகள் | 243 |
சந்தைகள் | 0 |
பேருந்து நிலையங்கள் | 3 |
அங்கன்வாடிகள் | 4 |
ஆரம்ப சுகதாரா நிலையங்கள் | 1 |
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் | 9 |
சிற்றூர்கள்
தொகுஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
- வேட்டைக்காரன் பாளையம்
- அலமாதி எ-காலனி
- அலமாதி பி-காலனி
- அலமாதி பி-நியூ காலனி
- அலமாதி
- அம்பேத்கர் நகர்
- பசும்பொன் நகர்
- வெண்மணி நகர்
- விக்னேஷ்வர் நகர்
- விஜயலக்ஷ்மி நகர்
- அலமாதி சி காலனி
- பாலாஜி கார்டன்
- எடப்பாளையம் காமராஜ் நகர்
- கிராவல்மேடு
- இந்திரா நகர்
- கோவிந்தாபுரம்
- பால் பண்ணை
- புதிய எடப்பாளையம்
- பழைய அலமாதி
- உப்பரப்பாளையம்
இயற்கை அமைப்பு[தொகு]
தொகுமிகக் கடினமான கிராவல் வகை மண் இப்பகுதியில் மிக அதிகமாக உள்ளது. இவ்வகை மண் விவசாயத்திற்கு ஏற்புடையதல்ல எனவே, இங்கு பெரும்பகுதி வறண்ட நிலமாகவே உள்ளது. எனினும், வறட்சி தாங்கி வளரும் "முந்திரி மரங்கள்" சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்தது. அரசுக்கு சொந்தமான முந்திரி தோப்புகளும் இங்கு இருந்தது. தற்போது இந்த முந்திரி தோப்புகள் முற்றிலும் அழிக்கப்பட்டு, சட்டத்திற்கு புறம்பான குடியேற்றங்கள் ஏற்பட்டுவிட்டது.
விவசாயம் செய்ய தகுதியான ஒரு சில இடங்களும், குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டுவிட்டது. எனினும் மிகச்சிறிய "அலமாதி" ஏரி இவ்வூரின் இயற்கை வளத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
மக்கள்[தொகு]
தொகுசென்னை நகரதிற்கு அருகில் இவ்வூர் இருந்தாலும், புதிய குடியேற்றங்கள் ஏற்பட்டாலும், இன்றும் பெரும்பான்மையான மக்கள் பழமை சிந்தனையிலேயே இருப்பது மாற்றமடையும் என்றே காத்திருக்க வேண்டும். பழைய அலமாதி பகுதியில் ஒரு குறிப்பிட்ட சாதி மக்களும், புதிய அலமாதி பகுதி வேறுஒரு சாதி மக்களும், இந்த இரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் பெருமளவில் தலித் இன மக்களும் தத்தம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.மக்களில் பெரும்பான்மையானவர்கள் கூலி வேலை செய்பவர்கள்.
தொழில் வளர்ச்சி[தொகு]
தொகுஇயற்கையாக அமைந்த நிலத்தடி நீர்வளம், இவ்வூரில் மிக அதிக அளவில் "குடிநீர்" வியாபாரம் பெருக வகை செய்துள்ளது. இவ்வூரில் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்ட பெரிய குடிநீர் சுத்தீகரிப்பு ஆலைகளும் கணக்கில்லாத சிறிய ஆலைகளும் உள்ளது. இன்று சென்னை நகர மக்கள் பலரின் தாகத்தை அலமாதி தண்ணீர் தனித்துவருகின்றது.
மேலும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மிளகாய், வெங்காயம் போன்ற உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதற்கான கிடங்குகளும், அவற்றை தரம் பிரிக்கும் தொழிலும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.
வழிபாட்டுத் தலங்கள்[தொகு]
தொகுபழைய அலமாதியில் உள்ள "அலர்மதீஈஸ்வரம்" சிவன் கோயிலும், அதன் அருகில் உள்ள முருகன் கோயிலும் இப்பகுதியில் மிகப்பிரபலம்.
கல்வி நிலையங்கள்[தொகு]
தொகுபழைய அலமாதியில் ஒரு அரசு தொடக்கப் பள்ளியும், புதிய அலமாதியில் ஒரு அரசு தொடக்கப் பள்ளி மற்றும் ஒரு மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. மேலும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தின், உணவு பதப்படுத்துதல் பயிற்சி கல்லூரியும் அலமாதியில் உள்ளது.
போக்குவரத்து[தொகு]
தொகுஅலமாதி, செங்குன்றம்-திருவள்ளுர்-திருபெரும்பூதூர்-சிங்க பெருமாள் கோயில் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. செங்குன்றம் அருகில் உள்ள பெரிய நகரமாகும். அரசு போக்குவரத்து பேருந்துக்கள் மட்டுமல்லாது, அதிகமான ஷேர் ஆட்டோக்களும் அலமாதியை செங்குன்றத்தோடு இணைக்கின்றது.
பேருந்து வழித்தடம்
57D பூச்சி அத்திப்பேடு - அலமாதி (வழி) - செங்குன்றம் - பாரிமுனை
57M அலமாதி - செங்குன்றம் - பாரிமுனை
65H ஆவடி - திருநின்றவூர் - தாமரைப் பாக்கம் - அலமாதி (வழி) - செங்குன்றம்
505 செங்குன்றம் - அலமாதி (வழி) - தாமரைப் பாக்கம் - ஈக்காடு - திருவள்ளூர்
505P செங்குன்றம் - அலமாதி (வழி) - தாமரைப் பாக்கம் - வெங்கல் - பெரியபாளையம்
105 செங்குன்றம் - அலமாதி (வழி) - தாமரைப் பாக்கம் - ஈக்காடு - திருவள்ளூர்
73A கோயம்பேடு - செங்குன்றம் - அலமாதி (வழி) - தாமரைப் பாக்கம் - வெங்கல் - மெய்யூர்
111D கோயம்பேடு - செங்குன்றம் - அலமாதி (வழி) - தாமரைப் பாக்கம் - ஈக்காடு - திருவள்ளுர்
சான்றுகள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "சோழவரம் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.