அலாசி ( Halasi ) முந்தைய காலங்களில் "அலாசிகே" என்றும் அழைக்கப்பட்ட இது இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள பெல்காம் மாவட்டத்திலுள்ள கானாபூர் வட்டத்திலுள்ள ஒரு நகரமாகும் இது கானாபூரிலிருந்து 14 கி.மீ தொலைவிலும், கிட்டூரிலிருந்து 25 கி.மீ தொலைவிலும் உள்ளது. நகரத்தின் பண்டைய பெயர் "பலாசிகா" என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது .[1] ஆரம்பகால (சுமார் 350 பொ.ச.) கதம்ப வம்சத்தின் மையமாக இருந்த இது, கோவா கதம்பர்களின் (980-1025) ஒரு சிறிய தலைநகராகவும் இருந்தது.[2] மேற்குத் தொடர்ச்சி மலையின் பின்னணியில் அமைந்துள்ள ஒரு அழகான இடமாகும்.

அலாசி
அலாசி (பலாசிகா)
பண்டைய இந்தியாவின் அரச குலங்களில் ஒன்றான கதம்பர் வம்சம்
அலாசியிலுள்ள பூவராக நரசும்மர் கோயில்
அலாசியிலுள்ள பூவராக நரசும்மர் கோயில்
அலாசி is located in கருநாடகம்
அலாசி
அலாசி
கருநாடகாவில் அலாசியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°32′24″N 74°35′27″E / 15.54°N 74.59083333333332°E / 15.54; 74.59083333333332
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெல்காம்
ஏற்றம்649 m (2,129 ft)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்591120
தொலைபேசி இணைப்பு எண்08336
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐஎன்-கேஏ
வாகனப் பதிவுஅருகிலுள்ள நகரம்

கோயில்கள் தொகு

தொடர்ச்சியான இடைக்கால கோயில்களுக்கு இந்த நகரம் குறிப்பிடத்தக்கது. இந்த ஊரில் பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் உள்ளன. பூவராக நரசிம்மர் கோயில் என்ற ஒரு கோயில் இங்கு அமைந்துள்ளது.[3] இந்த கோவிலில் இந்துக் கடவுளான விஷ்ணுவின் அவதாரங்களான் வராகம், நரசிம்மர், விஷ்ணு, சூரிய தேவன் ஆகிய கடவுள்களின் உருவங்கள் உள்ளன . சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோகர்னேசுவரர், கபிலேசுவரர், சுவர்னேசுவரர், கடகேசுவரர் கோயில்களும் இங்கு உள்ளன. அலாசியில் ஒரு சமண ஆலயமும் பள்ளிவாசலும் தர்காவும் உள்ளன. குறிப்பாக ஹஸ்ரத் நூர் அல்-தின் ஷா காத்ரியின் தர்கா. ஈத் தொழுகைக்காக ஒதுக்கப்பட்டுள்ள பொதுவான் இடம் நகரின் தெற்கே அமைந்துள்ளது. இது ஆண்டின் பிற நேரங்களில் பிரார்த்தனைக்கு பயன்படுத்தப்படாது.[4]

பலாசிகா தொகு

 
கர்நாடகாவின் அலாசி நகரைச் சேர்ந்த ஹரிவர்மனின் செப்பு-தகடு சாசனம் (பொ.ச. 500-515), நிலம் வழங்கப்பட்டதைப் பதிவுசெய்துள்ளது. https://siddham.network/inscription/ob01057/ ஐப் பார்க்கவும்

பலாசிகாவின் பண்டைய குடியேற்றத்தில் கட்டடக்கலை எச்சங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சுந்தரா நகரின் மேற்குப் பகுதியில் உள்ள கல்லேசுவரர் கோயிலுக்கு (காலமேசுவர் என்றும் அழைக்கப்படுகிறது) அருகே செங்கல் கட்டுமானங்களின் தடயங்களைக் காணலாம்.[5] ஆரம்பகால பலாசிகாவின் முக்கிய சான்றுகளாக ஒரு செப்பு தகடுகள், "சக்ரத்தீர்த்தம்" என்று அழைக்கப்பட்ட இடத்தில் 1850களில் கண்டுபிடிக்கப்பட்டன.[6][7] இந்த சாசனங்கள் அனைத்தும் சைன மானியங்களையும், இப்பகுதியை ஆண்ட ககுத்ஸ்தவர்மன் காலத்திலிருந்து (405-430 வரை) இரவிவர்மன் (465-500) மற்றும் ஹரிவர்மன் (500-15) காலங்களை குறிக்கிறது.[8]

வராக நரசிம்மர் கோயில் தொகு

 
விஷ்ணுவின் வராக அவதாரம், வராகர் நரசிம்ம கோவிலுக்கு உள்ளே, அலாசி, கர்நாடகா
 
பூவராக நரசிம்மர் கோயில் அலாசி, கர்நாடகா

இந்த கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் பாதுகாப்பில் உள்ளது. மேலும், பெல்காம் மாவட்டத்தில் தேசிய முக்கியத்துவத்தின் நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறிப்பிடப்பட்ட மரபுகள் அதன் கட்டுமானத்தை ஜெகனாச்சாரியார் கட்டியதாகக் கூறுகின்றன.[2][2]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. SIDDHAM: the asia inscriptions database: Halsi Grant of Ravivarman, https://siddham.network/inscription/in01055/
  2. 2.0 2.1 2.2 James M. Campbell, Gazetteer of The Bomaby Presidency, vol. 21 Belgaum (Bombay: Central Government Press, 1884), 565
  3. "Kadamba glory". பார்க்கப்பட்ட நாள் 2008-09-03.
  4. "Special prayers in Idgah seeking divine blessings, eternal peace". தி இந்து. 2010-09-10 இம் மூலத்தில் இருந்து 19 செப்டம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100919193933/http://www.hindu.com/2010/09/10/stories/2010091057440200.htm. 
  5. A. Sundara and K G. Bhatsoori. Archaeology in Karnataka: Papers Presented at the National Seminar on Archaeology, 1985 (Mysore: Directorate of Archaeology & Museums, 1990).
  6. J. F. Fleet, Sanskrit and Old-Canarese Inscriptions, The Indian Antiquary 6 (1877): 25-7, see SIDDHAM: the asia inscriptions database, Halsi Copper Plates of Kākutsthavarman, https://siddham.network/object/ob01052/.
  7. J. F. Fleet, Sanskrit and Old-Canarese Inscriptions, The Indian Antiquary 6 (1877): 22, online at http://doi.org/10.5281/zenodo.3912038.
  8. The dates following G. S. Gai, Inscriptions of the Early Kadambas (New Delhi : Indian Council of Historical Research & Pratibha Prakashan, Delhi, 1996), online at http://doi.org/10.5281/zenodo.573689.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Halasi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாசி&oldid=3806272" இலிருந்து மீள்விக்கப்பட்டது