அலைசு இசுபிரிங்சு
அலைசு இசுபிரிங்சு (Alice Springs) ஆஸ்திரேலியாவின் வடக்கு ஆட்சிப்பகுதியில் அமைந்துள்ள மூன்றாவது பெரிய நகரமாகும். மிகப் பரவலாக "த அலைசு" என்றும் அல்லது எளிதாக "அலைசு" என்றும் அழைக்கப்படும் அலைசு இசுபிரிங்சு ஆஸ்திரேலியாவின் புவிப்பரப்பு மையத்தில் வட ஆட்புலத்தின் தெற்கு எல்லைக்கு அருகே அமைந்துள்ளது.[2] இந்த இடம் இம்பார்ன்ட்வே என தொல்குடி மக்களான, அர்ரெர்ன்ட்டுகளால் அழைக்கப்படுகிறது. இவர்கள் தற்போது அலைசு இசுபிரிங்சு என அழைக்கப்படும் இடத்தை சூழ்ந்திருந்த மத்திய ஆத்திரேலிய பாலைவனத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த இடத்திற்கு நிலமதிப்பீட்டாளர் டபுள்யூ.டபுள்யூ. மில்ஸ் அலைசு என ஆங்கிலப் பெயரிட்டார். அலைசு இசுபிரிங்சின் மக்கள்தொகை 25,186 ஆக உள்ளது. இது வட ஆட்புல மக்கள்தொகையில் 12 விழுக்காடு ஆகும்.[3] நகரம் சராசரியாக கடல்மட்டத்திலிருந்து 576 மீட்டர்கள் (1,890 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
அலைசு இசுபிரிங்சு வட ஆட்புலம் | |||||||
இந்த நகருக்கு பெயர் கொடுத்துள்ள "ஊற்று" | |||||||
மக்கள் தொகை: | 25,186 (2011 கணக்கெடுப்பு) [1] | ||||||
• அடர்த்தி: | 178/கிமீ² (461.0/சதுர மைல்) | ||||||
அமைப்பு: | 1872 | ||||||
அஞ்சல் குறியீடு: | 0870-0872 | ||||||
பரப்பளவு: | 148 கிமீ² (57.1 சது மைல்) | ||||||
நேர வலயம்: | UTC+9:30 (UTC+9:30) | ||||||
நகர முதல்வர்: | தாமியன் ரியான் | ||||||
அமைவு: |
| ||||||
உள்ளூராட்சி: | அலைசு இசுபிங்சு நகர மன்றம் | ||||||
|
வரலாறு
தொகுமுதுகுடி வரலாறு
தொகுஉள்ளூர் அர்ரென்ட் பழங்கதைகளின்படி, அலைசு இசுபிரிங்கைச் சுற்றியுள்ள நிலப்பகுதி கம்பளிப் புழுக்கள், காட்டு நாய்கள், சுற்றுலா சிறுவர்கள் இரு சகோதரிகள் (ஐரோக்கள்) மற்றும் பல மரபுவழி முன்னோர்களால் வடிவமைக்கப்பட்டதாக கூறுகின்றனர். இத்தகைய மரபுவழியில் முக்கியமான பல இடங்கள் இங்குள்ளன. குறிப்பாக, அந்த்வெர்க்கு (எமிலி கேப்), அக்கெயுல்லெர் (பில்லி கோட் குன்று), ந்டாரிப் (ஹெவிட்ரீ கேப்), அட்னெல்கென்ட்யார்லிவெக்கு (அன்சாக் குன்று) மற்றும் அல்ஹெகுல்யெல் (மவுண்ட். கிலென்) போன்றவற்றைக் கூறலாம்.
நகர வரலாறு
தொகுஜான் மெக்டூவல் இசுடூவர்ட்டு என்பவர் 1862இல் மத்திய ஆத்திரேலியாவிற்கு புதுநிலத்தேடல் பயணம் மேற்கொண்டார். அவரது கண்டுபிடிபான இப்பகுதிக்கு அவரது பெயரையே சூட்டி 1930கள் வரை இசுடூவர்ட்டு என்ற நகரமாக இருந்தது. அடிலெயிட்டையும் டார்வினையும் பெரிய பிரித்தானியாவையும் இணைத்த ஆத்திரேலிய தரைவழி தந்தி இணைப்பு 1872இல் போடப்பட்டது. இது இசுடூவர்ட்டு வழியாகச் சென்றது. இதன்மூலம் இங்கு ஐரோப்பியர்களின் குடியிருப்புக்கள் தோன்றலாயின. இங்கிருந்து 100 கிமீ தொலைவிலுள்ள அரிதுங்காவில் வண்டல் மணல் பரப்பிலேயே தங்கம் இருப்பதை கண்டறிந்தபிறகு 1887இலிருந்து திரளான மக்கள் வரத் துவங்கினர்.
வழக்கமாக வறண்டிருக்கும் டோட் ஆற்றின் நீர்நிலை ஒன்றின் அருகே தந்தி நிலையம் கட்டப்பட்டது. இது நிரந்தரமான நீர்நிலையாகக் கருதப்பட்டது. தெற்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் அஞ்சல்துறை தலைமை மேலாளராக இருந்த சார்லசு டோட்டின் மனைவி அலைசின் பெயரையொட்டி இவ்விடம் அலைசு இசுபிரிங்கு எனப் பெயரிடப்பட்டது. மற்றும் டோட் ஆறும் அவரது பெயரையேப் பெற்றது.
இங்கு வருவதற்கான பயணமுறையாக ஒட்டக வண்டிகளே இருந்தன. இந்த ஒட்டக வண்டிகளை இந்தியா மற்றும் பாக்கித்தானின் வடமேற்கு பகுதி பஷ்தூன் மக்கள் குடியினர் இயக்கினர். இவர்கள் தவறாக ஆஸ்திரேலியாவின் ‘ஆப்கன்கள்’ என்றழைக்கப்படுகின்றனர்.
1929இல் டார்வினிலிருந்து வட ஆட்புலத்தின் பிர்தும் வரை பாமர்சுடன் மற்றும் பைன் கிரீக் தொடர்வண்டி கட்டமைக்கப்பட்டது. பெரும் வடக்கு தொடர்வண்டி கட்டமைப்பு தெற்கு ஆத்திரேலியாவின் அகஸ்டா துறைமுகத்திலிருந்து ஊட்னடட்டா வரை அமைக்கப்பட்டது. இவை இரண்டும் 2003இல் தான் இணைக்கப்பட்டன. பெப்ரவரி 4, 2004இல் முதல் பயணியர் தொடர்வண்டி டார்வினை அடைந்தது.
1960களில் அலைசு இசுபிரிங் முதன்மையான படைத்துறைத் தளமாக விளங்கியது. பைன் கேப்பில் அமெரிக்க ஐக்கிய நாடு/ஆஸ்திரேலிய கூட்டு பாதுகாப்புப் படை செயற்கைக்கோள் அறிகுறி தேடல் மையம் உள்ளது. இங்கு 700 நபர்கள் பணிபுரிகின்றனர்.
இப்பகுதியில் அண்மையில் வளர்ந்துள்ள தொழிலாக சுற்றுலாத்துறை உள்ளது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ Australian Bureau of Statistics (23 April 2009). 7'!A1 "Regional Population Growth". http://www.ausstats.abs.gov.au/ausstats/subscriber.nsf/0/057C7AB6661166CDCA2575A0001802DC/$File/32180ds0002_2001-08.xls#'Table 7'!A1. பார்த்த நாள்: 13 January 2009.
- ↑ Geoscience Australia Centre of Australia, States and Territories updated July 2006 "அலுவல்முறையில், ஆத்திரேலியாவின் மையப்பகுதி என எதுவும் இல்லை. புவியின் மேற்பரப்பினால் வளைந்து, ஒழுங்கில்லாத வடிவத்தில் உள்ள ஆத்திரேலியப் புவிப்பரப்பின் மையமாக, சிக்கலான ஆனால் ஒவ்வொன்றும் சரியான பல கணித செயல்முறைகள் மூலம் பல மையங்களை அடையாளம் காணவியலும்." மேல் விவரங்களுக்கு புவி அறிவியல் ஆத்திரேலியாவின் பக்கத்தைப் பார்க்கவும்.
- ↑ Australian Bureau of Statistics (30 October 2012). "2011 Census Quick Stats - Alice Springs". http://www.censusdata.abs.gov.au/census_services/getproduct/census/2011/quickstat/IREG701?opendocument&navpos=220. பார்த்த நாள்: 7 November 2012.
வெளி இணைப்புகள்
தொகு- Alice Springs Town Council (local government) web site
- Official Tourism web site for Alice Springs and surrounds பரணிடப்பட்டது 2014-08-23 at the வந்தவழி இயந்திரம்
- Photographs of Alice Springs in 1994, National Library of Australia
- [1] பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் (Link to TV transmission frequencies list from ACMA website).
- History of the stratospheric balloon launch base located in the Alice Spring airport and records of balloons launched there
- Alice Springs பரணிடப்பட்டது 2012-12-19 at the வந்தவழி இயந்திரம் - Tourism Australia