அல்தாப்ரா கரிச்சான்

அல்தாப்ரா கரிச்சான் (Aldabra drongo)(டைகுருசு அல்டாப்ரானஸ் ) என்பது டைக்ரூரிடே என்ற கரிச்சான் குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது சீசெலசின் அல்டாப்ரா தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இங்கு சுமார் 1000 பறவைகள் வரை காணப்படுகிறது.[2]

அல்தாப்ரா கரிச்சான்
அல்தாப்ரா கரிச்சான், செசல்சு தீவுகளில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. aldabranus
இருசொற் பெயரீடு
Dicrurus aldabranus
(ரிட்ஜ்வே, 1893)

தோற்றம்

தொகு

இந்த சிற்றினத்தின் தோற்றம் கரிச்சான்களுக்குப் பொதுவானது. முழுக்க முழுக்க கருப்பு நிற இறகுகள், தடித்த அலகு மற்றும் சிவப்பு கண்களுடன் நீளமான பிளவுபட்ட வாலுடன் காணப்படும். இளவயதுப் பறவைகள் சாம்பல் நிற முதுகுடன், மங்கலான அடிப்பகுதி மற்றும் பழுப்பு நிற கண்ணுடன் காணப்படும்.[2]

வாழிடம்

தொகு

இதன் இயற்கையான வாழ்விடங்கள் வெப்பமண்டல சதுப்புநில காடுகள் மற்றும் சவுக்கு வனப்பகுதி மற்றும் அடர்ந்த புதர்கள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Dicrurus aldabranus". IUCN Red List of Threatened Species 2016: e.T22706943A94098323. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706943A94098323.en. https://www.iucnredlist.org/species/22706943/94098323. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 Skerrett A, Bullock I & Disley T (2001) Birds of Seychelles.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்தாப்ரா_கரிச்சான்&oldid=3477014" இலிருந்து மீள்விக்கப்பட்டது