அல்லு சிரிஷ்
அல்லு சிரிஷ் என்பவர் ஓர் இந்திய நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தெலுங்கு படங்களில் பணியாற்றுகிறார். இவர் ஒரு முன்னணி நடிகராக கௌரவம் (2013) படத்தில் அறிமுகமானார். பின்னர் கொத்த ஜண்ட (2014), ஸ்ரீராஸ்து சுபமஸ்து (2016), ஒக்க க்ஷணம் (2017) போன்ற படங்களில் நடித்தார்.
அல்லு சிரிஷ் | |
---|---|
பிறப்பு | 30 மே 1985[1] இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை |
கல்வி | ஆர். டி. தேசிய கல்லூரி, மும்பை |
பணி | நடிகர் |
உறவினர்கள் | அல்லு அர்ஜுன் (சகோதிரர்) |
தொழில்
தொகுதெலுங்கு பார்வையாளர்களுக்காக ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் விளம்பரத்தில் தமன்னாவுடன் சிரீஷ் தோன்றினார்.[2] பிரபலமான லுலு பேஷன் விருதுகளில் 2019 இல் இவருக்கு "ஆண்டின் சிறந்த கிராஸ்ஓவர் நட்சத்திரம்" என்ற விருது வழங்கப்பட்டது.[3]
பிரகாஷ் ராஜ் தயாரித்து ராதா மோகன் இயக்கிய. தெலுங்கு-தமிழ் இருமொழி படமான கௌரவம் (2013) படத்தில் அல்லு சிரீஷ் நடித்தார். இவருக்கு ஜோடியாக, யாமி கௌதம் நடித்தார் [4] அப்படம் வணிக ரீதியான தோல்வி அடைந்தது என்றாலும், அதன் கருப்பொருளுக்காக விமர்சகர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றது. அடுத்து மாருதி தசரி இயக்கிய கொத்த ஜண்ட என்ற காதல் நகைச்சுவை படத்தில் நடித்தார். அது இரண்டு வித்தியாசமான எண்ணம் கொண்ட சக ஊழியர்கள் காதலிப்பதைப் பற்றியதாக இருந்தது..[5] செயற்கைக்கோள் திரையிடல் மூலம் திரையிடப்பட்ட அந்த ஆண்டின் படங்களில் அதிகம் பார்க்கப்பட்ட மூன்றாவது தெலுங்குத் திரைப்படம் இதுவாகும். இது குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படத்தின் ஒரு சாதனையாகும்.[6] அடுத்து பரசுரம் இயக்கிய ஸ்ரீரஸ்து சுபமாஸ்து, குடும்ப நாடகக் காதல் கதை.[7] இப்படத்தின் காலைக் காட்சியில் இருந்து நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது. இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது. படம் ரூ .20.2 கோடியை வசூலித்தது.[8] மேஜர் ரவி இயக்கும் படமான 1971 பியண்ட் பார்டர்ஸ், படத்தில் மோகன்லாலுக்கு அடுத்து இரண்டாவது முக்கிய பாத்திரத்தில் சிரீஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. , இதன் வழியாக சிரீஷ் மலையாளத்தில் அறிமுகமானார்.[9] 2017 ஆம் ஆண்டில், இவர் ஒக்க க்ஷணம் என்ற படத்தில் நடித்தார், இது ஒரு அறிவியல் புனைகதையாகும்.[10] படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.[11][12] 2019 ஆம் ஆண்டில், ஏபிசிடி - அமெரிக்கன் பார்ன் கன்ஃபுஸ் தேசி என்ற படத்தில் நடித்தார், இது துல்கர் சல்மான் நடித்த இதே பெயரிலான மலையாள படத்தின் தெலுங்கு மறுஆக்கம் ஆகும். இந்த படத்தில் சிரீஷ் நடிப்பானது மீண்டும் பாராட்டப்பட்டது.[13]
திரைப்படவியல்
தொகுகுழந்தை நட்சத்திரமாக
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1990 | பிரதிபந்த் | மறை நிலை | இந்தி | குழந்தை நட்சத்திரம் |
1995 | மாயா பஜார் | மறை நிலை | தமிழ் | குழந்தை நட்சத்திரம் |
முன்னணி பாத்திரத்தில்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2013 | கௌரவம் | அர்ஜுன் | தமிழ் | முன்னணி நடிகராக அறிமுகம் |
தெலுங்கு | ||||
2014 | கொத்த ஜண்ட | சிரிஷ் | தெலுங்கு | |
2016 | ஸ்ரீரஸ்து சுபமஸ்து | சிரிஷ் | தெலுங்கு | |
2017 | 1971: பியண்ட் பார்டர்ஸ் | லெப்டினென்ட் சின்மய் | மலையாளம் | மலையாள அறிமுகம் |
2017 | ஒக்க க்ஷணம் | ஜீவா | தெலுங்கு | |
2019 | ஏபிசிடி - அமெரிக்கன் பார்ன் கன்ஃபுஸ் தேசி | அவி / அரவிந்த் பிரசாத் | தெலுங்கு | அதே பெயரிலான மலையாள படத்தின் மறுஆக்கம் |
இசை கானொளிகள்
தொகுஆண்டு | பாடல் | பாடகர்கள் | மொழி |
---|---|---|---|
2021 | விலாயதி ஷராப் அடி ஹெலி தாருவாலா | தர்ஷன் ராவல், நீத்தி மோகன் | இந்தி |
தொலைக்காட்சி
தொகுஆண்டு | தலைப்பு | மொழி | பங்கு |
---|---|---|---|
2016 | ஐஃபா உட்சம் | தெலுங்கு | தொகுப்பாளர் |
2017 | தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் | தெலுங்கு | தொகுப்பாளர் |
2017 | சைமா விருதுகள் | தெலுங்கு | தொகுப்பாளர் |
குறிப்புகள்
தொகு- ↑ "Allu Sirish News". Archived from the original on 11 May 2020. பார்க்கப்பட்ட நாள் 23 August 2020.
- ↑ "HEAD & SHOULDERS - TAMANNAAH BHATIA". YouTube. Archived from the original on 3 October 2019. பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
- ↑ "Allu Sirish gets "Crossover Star" Award in Kerala". Tollywood. Archived from the original on 27 July 2020. பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
- ↑ "Allu Sirish to debut with Gauravam". Rediff. Archived from the original on 9 October 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "Tollywood 2014 : The 'Hit' List". Andhra Box Office.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Kotha Janta gets good TRP ratings". Times of India.
- ↑ "Srirastu Subhamastu: The 'family' hangover". The Hindu.
- ↑ "Srirasthu Shubhamasthu Final Total WW Collections". Andhra Box Office. Archived from the original on 25 July 2020. பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
- ↑ "Allu Sirish set for grand Malayalam debut with Mohanlal". International Business Times. Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2 September 2019.
- ↑ "Okka Kshanam: Can you change destiny?". The Hindu. Archived from the original on 2 June 2018. பார்க்கப்பட்ட நாள் 2 September 2019.
- ↑ "Box Office Report: Allu Sirish's 'Okka Kshanam' shines at overseas markets". Pinkvilla. Archived from the original on 27 July 2020. பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
- ↑ "Box office clash: Allu Sirish's Okka Kshanam claims victory over Akhil Akkineni's movie Hello". Times Now. Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
- ↑ "ABCD: AMERICAN BORN CONFUSED DESI MOVIE REVIEW". Times of India. Archived from the original on 11 September 2019. பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.