அவீச்சி
டிம் பெர்குலிங் (Tim Bergling; 8 செப்டம்பர் 1989 – 20 ஏப்ரல் 2018),[1] பரவலாக அவரது திரைப் பெயர் அவீச்சி (Avicii; ə-VEE-chee; வணிகமுறையில் ΛVICII மற்றும் ◢ ◤) ஓர் சுவீடிய இசைக்கலைஞரும் இசைத்தட்டாளரும் கலப்பிசைக் கலைஞரும் ஆவார். இசைத்தட்டுத் தயாரிப்பாளராகவும் விளங்கினார்.[2]
அவீச்சி | |
---|---|
2014இல் அவீச்சி | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | டிம் பெர்குலிங் |
பிற பெயர்கள் |
|
பிறப்பு | ஸ்டாக்ஹோம், சுவீடன் | 8 செப்டம்பர் 1989
இறப்பு | 20 ஏப்ரல் 2018 மஸ்கத், ஓமான் | (அகவை 28)
இசை வடிவங்கள் |
|
தொழில்(கள்) |
|
இசைக்கருவி(கள்) |
|
இசைத்துறையில் | 2006–2018 |
வெளியீட்டு நிறுவனங்கள் |
|
இணைந்த செயற்பாடுகள் |
|
இணையதளம் | avicii |
பெர்குலிங்கின் அறிமுகத் தொகுப்பில், இட்ரூ (மெய்) (2013), இலத்திரனியல்சார் இசையில் பல்வேறுவகை இசைநடைகளும் கலந்து வெளியானது; இது இசை விமரிசகர்களிடம் பொதுவான நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. பதினைந்தும் மேற்பட்ட நாடுகளில் இது விரைவிலேயே முதல் பத்திடங்களில் ஒன்றாக இடம் பிடித்தது. ஆத்திரேலியா, சுவீடன், டென்மார்க்கு,ஐக்கிய அமெரிக்க நடனவிசை பட்டியல்களில் முதலிடம் பிடித்தது.[3][4][5][6] 2015இல் தனது இரண்டாவது கலைக்கூடத் தொகுப்பான இஸ்டோரீசு (கதைகள்) வெளியிட்டார். ஆகத்து 10, 2017இல் அவீச்சி (01) என்ற இசைத்தட்டை வெளியிட்டார்.[7] ஏப்ரல் 20, 2018 இல் ஓமான் நாட்டில் மரணமடைந்தார்.[8]
அவீச்சி 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இசைத்தட்டாளர்களுக்கான இதழால் (DJ Magazine) ஆண்டுதோறும் வெளியிடப்படும் முதல் 100 இசைத்தட்டாளர்கள் பட்டியலில் மூன்றாவதாக குறிப்பிடப்பட்டிருந்தார்.[9] 2012ஆம் ஆண்டில் டேவிட் கெத்தாவுடன் அவர் ஆற்றிய படைப்பு "சன்ஷைன்" (கதிரொளி)க்காகவும் [10] 2013இல் தனது பாட்டு "லெவல்சு" (நிலைகள்)க்காவும் இருமுறை கிராமி விருதுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ குட் பி தி ஒன் (நிக்கி ரோமெரோவுடன்), "வேக் மீ அப்!" (அமெரிக்கப் பாடகர் அலோ பிளாக்குடன்), "யூ மேக் மீ", "ஏய் பிரதர்", "அடிக்டக்டு டு யூ", மற்றும் "கொல்லைடு" (பிரித்தானியப் பாடகர் லியோனா லெவிசுடன்) பரவலாக அறியப்பட்ட இவரது பாடல்களில் சிலவாகும்.
வாழ்க்கை வரலாறு
தொகுபிறப்பு
தொகுஅவீச்சி செப்டம்பர் 8, 1989 இல் ஸ்டாக்ஹோம், சுவீடனில் பிறந்தார். அவரது பிறந்த பெயர் டிம் பெர்லிங்; இருப்பினும் அவர் தொழில் ரீதியாக அவீச்சி, டிம் பெர்கு என்ற பெயர்களால் அறியப்படுகிறார்; டிம் லைடென், டாம் ஹேங்சு, டிம்பர்மேன் என்பன இவரது பிற புனைபெயர்களாகும்.
இசை வாழ்க்கை
தொகு2008 ஆம் ஆண்டில் தனது 18ஆம் அகவையில் இசையுலகிற்கு வெளிவந்தார்; தம்முடைய காமோதோர் 64 குறுங்கணினியில் இருந்த "சோம்பேறி ஜோன்சு" என்ற காணொளி விளையாட்டுப் பாட்டை கலப்பிசையில் மீளமைத்து வெளியிட்டார்; இது சோம்பேறி லேசு என்ற பெயரில் ஸ்ட்ரைக் ரிகார்டிங் நிறுவனத்தால் விற்பனைக்கு விடப்பட்டது.
அவீச்சி பீட் டாங் என்ற வணிகப் பெயருடன் ஏப்ரல் 2008 இல் மேன்மேன் என்ற இசைத்தொகுப்பை சொந்தமாக வெளியிடப்பட்டார். இது "பாசுட்டு டிராக்சு" என்ற போட்டியில் 70 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதலிடத்தை வென்றது. இதனைத் தொடர்ந்து அவீச்சி உலகெங்கிலும் உள்ள பல இசைத்தட்டு வெளியீட்டாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் முன்பதிவு முகமைகளைத் தொடர்பு கொண்டார்.
2011–12: "லெவல்சு" மற்றும் பன்னாட்டுப் புகழ்
தொகு2011இல் தனது "லெவல்சு" என்ற இசைத்தொகுப்பை பொதுவெளியில் வெளியிட்டார். இந்தப் பாட்டு எட்டா ஜேம்சு பாடிய கடவுள் வாழ்த்துப் பாடலான சம்திங் காட் அ ஓல்டு ஆன் மீ என்ற பாடலின் துளிகளை உள்ளடக்கியிருந்தது.[12] இத்தொகுப்பு ஆஸ்திரியா,[13] பெல்ஜியம்,[14] பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, டென்மார்க்,[15] பின்லாந்து,[16] ஜெர்மனி,[17] கிரேக்கம் (நாடு), அயர்லாந்து,[18] இத்தாலி,[19] the நெதர்லாந்து,[20] சுலோவீனியா, ஐக்கிய இராச்சியம்,[21] நாடுகளில் முதல் பத்து இடங்களுக்குள்ளாக இருந்தது; அங்கேரி,[22] நோர்வே[23] சுவீடன் நாடுகளில் முதலிடத்தைப் பிடித்தது.[24]
2012ஆம் ஆண்டில் டேவிடு கெத்தாவுடன் இணைந்து பாடிய "சன் ஷைன்" என்ற பாட்டிற்காக சிறந்த நடன இசை என்ற பகுப்பில் கிராமி விருதுக்கு நியமிக்கப்பட்டார்.[10] லியோனா லெவிசின் கொல்லைடு என்ற ஒற்றைப் பாட்டில் அவீச்சியின் "ஃபேடு இன்டூ டார்க்னசு" என்ற பாடலின் துளிகள் இடம்பெற்றது. இப்பாடலில் இதற்குரிய மூலக்குறிப்பை குறிப்பிடாததால் அவீச்சி இதற்கு தடை வாங்க முயன்றார். இருப்பினும் இச்சர்ச்சைக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணும் வண்ணம் லெவிசின் சார்பாளர் லெவிசும் அவீச்சியும் இணைந்து இப்பாடலை வெளியிடுவதாக அறிவித்தார்.[25]
இறப்பு
தொகு2016இல் அவீச்சிக்கு அதிகளவிலான குடிப்பழக்கத்தால் கடும் கணைய அழற்சி ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதன்பிறகு நேரலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நிறுத்தினார்.[26]
ஏப்ரல் 20, 2018 அன்றுபெர்குலிங்கின் தொடர்பாளர் டயானா பேரன் ஓமான் நாட்டின் மசுக்கட்டு நகரில் அவர் இறந்ததாக அறிவித்தார். இவரது விசிறிகளுக்கும் குடும்பத்தினருக்கும் கால்வின் ஆரிசு, மார்ஷ்மெல்லோ, டெட்மவுசு, மார்ட்டின் காரிக்சு, செட் போன்ற இசைத்தட்டாளர்களும் ரீட்டா ஓறா, துவா லிப்பா, மடோனா போன்ற பாடகர்களும் உட்பட பல இசைக்கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.[27]
மேற்கோள்கள்
தொகு- ↑ Aswad, Jem (20 ஏப்ரல் 2018). "Avicii Dies at 28" (in en-US). Variety. http://variety.com/2018/music/news/avicii-dead-at-28-1202772767/.
- ↑ "AVICII: Biography". The DJ List. Archived from the original on 2011-10-09. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2011.
- ↑ Avicii – True. Australian-charts.com. Retrieved 16 அக்டோபர் 2015.
- ↑ Avicii – True பரணிடப்பட்டது 2017-07-09 at the வந்தவழி இயந்திரம். Danishcharts.com. Retrieved 16 அக்டோபர் 2015.
- ↑ Avicii – True. Swedishcharts.com. Retrieved 16 அக்டோபர் 2015.
- ↑ Avicii – Chart history. பில்போர்டு. Retrieved 16 அக்டோபர் 2015.
- ↑ Rishty, David (10 ஆகத்து 2017). "Avicii Breaks Musical Silence With 'Avīci' EP: Listen". பில்போர்டு. http://www.billboard.com/articles/news/dance/7897874/avicii-new-ep-avici.
- ↑ Aswad, Jem (20 ஏப்ரல் 2018). "Avicii Dies at 28". Variety. பார்க்கப்பட்ட நாள் 20 ஏப்ரல் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Top 100 DJs 2014". DJ Mag.com Ltd. ND. Archived from the original on 2 சூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 திசம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 10.0 10.1 Avicii. "Grammy Awards 2012". பார்க்கப்பட்ட நாள் 2014-12-12.
- ↑ "Avicii – Avicii added a new photo". முகநூல். 3 September 2008. பார்க்கப்பட்ட நாள் 8 March 2017.
- ↑ "Avicii's Levels – Discover the Sample Source". WhoSampled. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
- ↑ Hung, Steffen. "Avicii – Levels". austriancharts.at. Archived from the original on 24 June 2016. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
- ↑ "Avicii – Levels". ultratop.be. Archived from the original on 27 September 2016. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
- ↑ Hung, Steffen. "Avicii – Levels". danishcharts.com. Archived from the original on 8 August 2016. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
- ↑ "Musiikkituottajat – Tilastot – Suomen virallinen lista – Artistit". ifpi.fi. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
- ↑ "Die ganze Musik im Internet: Charts, Neuerscheinungen, Tickets, Genres, Genresuche, Genrelexikon, Künstler-Suche, Musik-Suche, Track-Suche, Ticket-Suche – musicline.de". musicline.de. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
- ↑ "GFK Chart-Track". chart-track.co.uk. Archived from the original on 9 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Hung, Steffen. "Avicii – Levels". italiancharts.com. Archived from the original on 29 June 2016. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
- ↑ 40, Stichting Nederlandse Top. "Avicii – Levels". Top40.nl. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
{{cite web}}
:|last=
has numeric name (help) - ↑ "Official Dance Singles Chart Top 40". officialcharts.com. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
- ↑ lightmedia.hu. "Rádiós Top 40 játszási lista – Hivatalos magyar slágerlisták". zene.slagerlistak.hu. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
- ↑ Hung, Steffen. "Avicii – Levels". norwegiancharts.com. Archived from the original on 17 June 2016. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
- ↑ Hung, Steffen. "Avicii – Levels". swedishcharts.com. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
- ↑ Halliday, Josh (16 August 2011). "Leona Lewis resolves legal dispute with Swedish DJ over new single". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 12 October 2014.
- ↑ Nevins, Jake (20 April 2018). "Avicii: chart-topping EDM star dies aged 28". The Guardian. Guardian News and Media Limited. பார்க்கப்பட்ட நாள் 20 April 2018.
In 2016, Avicii retired from live performing due to health reasons, having suffered from acute pancreatitis owing, in part, to excessive drinking. In 2014, his gallbladder and appendix had been removed.
- ↑ "Avicii's Death Mourned by Calvin Harris, Marshmello, deadmau5 & More". Billboard. https://www.billboard.com/articles/news/dance/8358400/avicii-death-reactions.