அ. ஜெ. கனகரத்னா
அலோசியசு ஜெயராஜ் கனகரத்னா[1][2] அல்லது ஏ. ஜே. கனகரத்னா (A. J. Canagaratna, ஆகத்து 26, 1934 - அக்டோபர் 11, 2006) ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் உழைத்தவரும் தலைசிறந்த விமர்சகரும் ஈழத்து எழுத்தாளரும் ஆவார். ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், இலக்கிய விமர்சனம், நவீன இலக்கியம், நாடகம் என்று பல்துறை ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தவர். பல இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும், ஆசானாகவும் அடக்கமான தொண்டு செய்த இவர் பொதுவாக ஏஜே என்றே அழைக்கப்பட்டார்.
ஏ. ஜே. கனகரத்னா A. J. Canaragatna | |
---|---|
பிறப்பு | அலோசியஸ் ஜெயராஜ் கனகரத்தினா 26 ஆகத்து 1934 ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம் |
இறப்பு | அக்டோபர் 11, 2006 கொழும்பு, இலங்கை | (அகவை 72)
கல்வி | யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம் |
பணி | ஆங்கிலப் போதனாசிரியர், பத்திரிகையாளர் |
பணியகம் | யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, தம்பிலுவில் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட அலோசியஸ் ஜெயராஜ் கனகரத்னா யாழ்ப்பாணத்தில் வளர்ந்தவர். யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியின் பழைய மாணவராவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றுத் தேறினார். யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, மட்டக்களப்பு தம்பிலுவில் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியராக இருந்த ஏ.ஜே. பின்னர்யாழ் பல்கலைக்கழகத்தில் சுமார் 18 ஆண்டு காலம் ஆங்கில போதனாசிரியராகப் பணிபுரிந்தார்.
பத்திரிகைத் துறையில்
தொகுசிலோன் டெய்லி நியூஸ் (Ceylon Daily News) பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் கடமையாற்றிய ஏ.ஜே, பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த Co-Operatur இன் ஆசிரியராகவும் Saturday Review பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் பணியாற்றினார். திசை பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
பல தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, உள்நாட்டு ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிட்ட பெருமைக்கு உரியவர். இலங்கையின் மற்றொரு சிறந்த விமர்சகரான றெஜி சிறிவர்த்தனாவின் ஆக்கங்களை 2 தொகுதிகளாக வெளியிட்டார்.
விருதுகள்
தொகுசாகித்திய அக்கடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற இவர் 2004 ஆம் ஆண்டில், சிறந்த தமிழறிஞர் விருதையும் பெற்றார். கனடாவில் இருந்து வெளியாகும் ""காலம் இலக்கிய சஞ்சிகை ஏ.ஜே.சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்நாட்டின் இலக்கியத் தோட்டம் அமைப்பு அண்மையில் அவருக்கு ஐம்பதினாயிரம் ரூபா வழங்கிக் கௌரவித்தது.
மறைவு
தொகுஅவர் சிறிது காலம் சுகவீனமுற்று மருத்துவ சிகிச்சைக்காகக் கொழும்பு சென்றிருந்தவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அக்டோபர் 11, 2006 அன்று காலமானார்.
வெளியான நூல்கள்
தொகு- மத்து, (கட்டுரைத் தொகுதி, மித்ர பதிப்பகம், சென்னை, 2000)
- செங்காவலர் தலைவர் யேசுநாதர் (கட்டுரைத் தொகுதி, மித்ர பதிப்பகம், சென்னை, 2000)
- மாக்ஸிசமும் இலக்கியமும்
- Selected Writings of Regi Siriwardena: Vol 1 & Vol 2 - Edited by A. J. Canagaratna'
மேற்கோள்கள்
தொகு- ↑ "Demist of a Great Scholar and Veteran Tamil writer- Alosious Jeyaraj Canagaratna". http://www.ticonline.org/. பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ Sathiamanai (2013-06-02). "සත්යමනායි SATHIAMANAI சத்தியமனை: AJ Canagaratna ஏ. ஜே. கனகரத்னா (A. J. Canagaratna, ஆகத்து 26, 1934 - அக்டோபர் 11, 2006)". සත්යමනායි SATHIAMANAI சத்தியமனை. பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.
வெளி இணைப்புக்கள்
தொகுநூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்
தொகு- மார்க்சியமும் இலக்கியமும் பரணிடப்பட்டது 2007-06-01 at the வந்தவழி இயந்திரம்
- எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும் (மொ.பெ.) பரணிடப்பட்டது 2006-12-09 at the வந்தவழி இயந்திரம்
படைப்புக்கள்
தொகு- மௌனி வழிபாடு - சரஸ்வதி இதழ் (1961)[தொடர்பிழந்த இணைப்பு]
- தேசிய இலக்கியம்: சில சிந்தனைகள் (மரகதம் இதழ் (1961) பரணிடப்பட்டது 2006-11-04 at the வந்தவழி இயந்திரம்
- செங்காவலர் தலைவர் யேசுநாதர் பரணிடப்பட்டது 2006-11-05 at the வந்தவழி இயந்திரம்
- The ‘Magic’ Gobbles up the ‘Realism’[தொடர்பிழந்த இணைப்பு]
பிற இணைப்புக்கள்
தொகு- ஏ.ஜே. கனகரத்னா: பல்துறை இணைவுப் பார்வையை நோக்கி - யமுனா ராஜேந்திரன்
- ஏஜே: பேராசிரியர் சிவத்தம்பியின் நினைவுப்பகிர்வு - ஒலி வடிவில்
- ஏ.ஜே. கனகரட்னா (26/8/34 - 11/10/06) பரணிடப்பட்டது 2006-11-05 at the வந்தவழி இயந்திரம்
- ஏ. ஜே: சில நினைவுச் சிதறல்கள் - மு. புஷ்பராஜன்
- நான் அறிந்த ஏ. ஜே. கனகரத்னா - யோகி தம்பிராசா[தொடர்பிழந்த இணைப்பு]
- எனக்குள் இருக்கும் ஏஜே[தொடர்பிழந்த இணைப்பு] - எம். ஏ. நுஃமான்
- ஈழத்து இலக்கிய செழுமைக்கு பணிபுரிந்த விமர்சக அறிஞன் ஒருவனின் மறைவு - கா. சிவத்தம்பி பரணிடப்பட்டது 2006-11-08 at the வந்தவழி இயந்திரம்
- ஏ. ஜே. என்றொரு மனிதன் - மு. பொ. பரணிடப்பட்டது 2006-11-06 at the வந்தவழி இயந்திரம்
- தினக்குரல் பத்திரிகையில் மறைவுச் செய்தி[தொடர்பிழந்த இணைப்பு]
- உதயன் பத்திரிகையில் மறைவுச் செய்தி
- Ceylon Daily News பத்திரிகையில் மறைவுச் செய்தி பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
- A.J. Kanagarathna, a pioneer journalist
- ஏ.ஜே. கனகரட்னாவின் இரு நூல்கள் - தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு
- மாறிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் மாறாத ஒரு மனிதன் - சுப்ரமணியம் சிவநாயகம்
- ஏ.ஜே. என்ற ஆளுமைமிக்க ஆகிருதி - மேமன்கவி
- இலண்டன் நகர் அஞ்சலிக்கூட்டம்
- 'காலம்' சஞ்சிகை சார்பில் நினைவஞ்சலிக் கூட்டம்
- 'காலசுவடு' சஞ்சிகைகையில் அரிதான உயிர்ராசி - ஜி.ரி. கேதாரநாதன் பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்