ஆண்ட்ரு கிளார்க்
சர் ஆண்ட்ரு கிளார்க் (Sir Andrew Clarke) (27 சூலை 1824 - 29 மார்ச் 1902) என்பவர் மூத்த பிரித்தானிய இராணுவ அதிகாரி; நீரிணை குடியேற்றங்களின் 9-ஆவது ஆளுநர்; ஐக்கிய இராச்சியத்திற்கும் பேராக் சுல்தானுக்கும் இடையே 20 சனவரி 1874-இல் கையெழுத்திடப்பட்ட பங்கோர் உடன்படிக்கை 1874 நிகழ்வில் முதன்மையாகச் செயல்பட்டவர் ஆவார்.[1]
நீரிணை குடியேற்றங்களின் 9-ஆவது ஆளுநர் | |
---|---|
பதவியில் 4 நவம்பர் 1873 – 8 மே 1875 | |
ஆட்சியாளர் | விக்டோரியா அரசி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சவுத் சி, ஏம்சையர், இங்கிலாந்து | 27 சூலை 1824
இறப்பு | இலண்டன் | 29 மார்ச்சு 1902
துணைவர் | மேரி மார்கெரட் மெக் கிலோப் |
பொது
தொகுநீரிணை குடியேற்றங்களின் ஆளுநர்
தொகுசர் ஆண்ட்ரு கிளார்க், சிங்கப்பூரின் ஆளுநராகவும்; 1873 நவம்பர் 4 முதல் 1875 மே 8 வரை நீரிணை குடியேற்றங்களின் ஆளுநராகவும்; பணியாற்றினார். மலாய் மாநிலங்களான பேராக், சிலாங்கூர் மற்றும் சுங்கை ஊஜோங் ஆகியவற்றுக்கு சிங்கப்பூரை முக்கியத் துறைமுகமாக மாற்றி அமைப்பதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
அவரின் பங்களிப்புகளுக்காக, சிங்கப்பூரின் கிளார்க் குவே (Clarke Quay) அவரின் பெயரால் பெயரிடப்பட்டது. மற்றும் 1896-இல் கிளார்க் சாலை (Clarke Street) அதிகாரப்பூர்வமாகவும் பெயரிடப்பட்டது. தற்போது அது சிங்கப்பூரில் பிரபலமான நடைபாதை ஆகும்.
பங்கோர் உடன்படிக்கை
தொகு20 சனவரி 1874-இல், ஐக்கிய இராச்சியத்திற்கும் பேராக் சுல்தானுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட பங்கோர் உடன்படிக்கை 1874 நிகழ்வில், ஆண்ட்ரு கிளார்க் முதன்மையாகச் செயல்பட்டவர் ஆவார்.
அதே ஆண்டில், மலாயாவின் முக்கிய சீனத் தலைவர்கள்; மற்றும் ஐரோப்பிய வணிகர்களின் ஆதரவுடன், கூலியாட்களின் மீதான முறைகேடான அதிகாரப் பயன்பாட்டை அகற்றினார். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பாரம்பரிய ஆட்சியைக் கொண்ட சுங்கை ஊஜோங் நிர்வாகத்தின் தலைவர்கள் பிரச்சினைகளைத் தன் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்து வைத்தன் மூலம் புகழ் பெற்றார்.[2][3]
ஜேம்ஸ் பர்ச்
தொகுபேராக் மாநிலத்தின் முதல் பிரித்தானிய அறிவுரைஞர் (British Resident) ஜேம்ஸ் பர்ச்சின் மரணத்திற்கு ஆண்ட்ரு கிளார்க் குற்றம் சாட்டப்பட்டார். ஜேம்ஸ் பர்ச் மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிராக முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாகப் பேராக் சுல்தான் அப்துல்லா, ஆண்ட்ரு கிளார்க்கிற்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த நேரத்தில் ஆண்ட்ரூ கிளார்க் ஓய்வு பெறவிருந்தார்.
அதனால் சுல்தான் அப்துல்லாவின் கடிதத்தைப் பெரிதுபடுத்தவில்லை. மேலும் அந்தக் கட்டத்தில் ஆண்ட்ரு கிளார்க், சிறந்த காலனித்துவ நிர்வாகிகளில் ஒருவராகப் பெயர் பெற்று இருந்தார். அந்த நற்பெயரை ஆண்ட்ரு கிளார்க் குறைக்க விரும்பவில்லை.
கிள்ளான் போர்
தொகு1867 முதல் 1874 வரை நடந்த கிள்ளான் போரின் முடிவைத் தீர்மானிப்பதிலும்; சிலாங்கூரை பிரித்தானிய பாதுகாப்பின் கீழ் கொண்டு வருவதிலும், சர் ஆண்ட்ரு கிளார்க் முக்கிய பங்காற்றினார்.
நீரிணை குடியேற்றங்கள், சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதாரத்தைச் சார்ந்து வளர்ச்சி பெற்று வந்தன. சிலாங்கூர் மாநிலம் 19-ஆம் மற்றும் 20=ஆம் நூற்றாண்டுகள் வரை உலகின் முக்கிய ஈய உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருந்தது. சிலாங்கூர் மாநிலத்தின் பாதுகாப்பு ஈய வணிகத்தின் பாதிப்பால் தேக்கம் அடைந்தது. அதன் காரணமாகச் சிலாங்கூர் அரசியலில் தலையிடுவது சரியாக அமையும் என்று பிரித்தானியர் கருதினர்.
தெங்கு குடின்
தொகுதெங்கு குடின் என்பவரைச் சிலாங்கூர் அரசின் அடுத்தப் பயணச் சீட்டாகப் பிரித்தானியர் பார்த்தனர். எனவே, கிள்ளான் போரில், சர் ஆண்ட்ரு கிளார்க் தலைமையிலான நீரிணை குடியேற்றங்கள், தெங்கு குடினை மறைமுகமாகப் ஆதரித்தன.
கிள்ளான் போரில், கெடா, பகாங்கில் இருந்து போர்ப் படையினரையும்; நீரிணை குடியேற்றங்கள் பகுதிகளில் இருந்து பிரித்தானிய துணைப் படையின் வீரர்களையும் தெங்கு குடின்; அழைத்து வந்து போரில் ஈர்டுபட்டார். இறுதியில் கிள்ளான் போரில் தெங்கு குடின் வெற்றி பெற்றார். அதன் பின்னர் சிலாங்கூர் மாநிலம் பிரித்தானியரின் கண்காணிப்பின் கீழ் வந்தது.[4][5]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Andaya, B.W. (1984). A History of Malaysia. Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-38121-9.
- ↑ "Clarke, Sir Andrew". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 6. (1911). Cambridge University Press.
- ↑ Richards, George Henry; Clarke, Andrew (1869). "Report on the Suez Canal". Proceedings of the Royal Geographical Society of London 14 (3): 259–273. doi:10.2307/1799058.
- ↑ Parkinson, C. Northcote. British Intervention in Malaya 1867-1877. Singapore: University of Malaya Press. p. 208.
- ↑ "No. 27399". இலண்டன் கசெட். 21 January 1902. p. 453.