ஜெரால்ட் டெம்பிளர்
சர் ஜெரால்ட் டெம்பிளர் (Sir Gerald Templer, 11 செப்டம்பர் 1898 – 25 அக்டோபர் 1979) என்பவர் இரண்டு உலகப் போர்களில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு மூத்த பிரித்தானிய இராணுவ அதிகாரி; மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர்; 1952 - 1954-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் பொதுவுடைமை கிளர்ச்சிகளை முறியடித்ததில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார்.
![]() மலாயாவில் சர் ஜெரால்ட் டெம்பிளர், 1953 | |
பட்டப்பெயர்(கள்) | மலாயாவின் புலி[1] |
பிறப்பு | கோல்செஸ்டர், எசெக்ஸ், இங்கிலாந்து | 11 செப்டம்பர் 1898
இறப்பு | 25 அக்டோபர் 1979 செல்சி, இலண்டன், இங்கிலாந்து | (அகவை 81)
அடக்கம் | சாலிஸ்பரி, இங்கிலாந்து[2] |
சார்பு | ஐக்கிய இராச்சியம் |
சேவை/ | பிரித்தானிய இராணுவம் |
சேவைக்காலம் | 1916–1958 |
தரம் | படைத்துறை உயர்தர தளபதி |
போர்கள்/யுத்தங்கள் |
1951-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி, பிரேசர் மலைக்கு அருகே உள்ள கோலா குபு பாரு சாலை, 90.4-ஆவது கி.மீட்டரில், மலாயா பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்த பொதுவுடைமை கிளர்ச்சியாளர்களால், என்றி கர்னி எனும் உயர் ஆணையர் கொல்லப்பட்டார். அவருக்குப் பதிலாக 1952-இல் டெம்பிளர், மலாயாவிற்கான உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
மலாயாவில் பொதுவுடைமை ஆதரவாளர்களை எதிர்த்துப் போராட பிரிக்ஸ் திட்டம் எனும் ஒரு மறுமலர்ச்சி திட்டத்தைத் தீவிரப்படுத்தியவரும் இவரே ஆகும்.[3]
மலேசிய அரசாங்கம் இவரின் அரிய சேவைகளை நினைவுகூரும் வகையில்,1960 ஆகத்து 1-ஆம் தேதி, மலேசியாவின் மிக உயரிய விருதான துன் விருதை வழங்கிச் சிறப்பு செய்தது.[4]
மேலும் கோலாலம்பூர், சுங்கை பீசியில் உள்ள உள்ள அரச மலேசிய இராணுவக் கல்லூரியில் உள்ள முதன்மை மண்டபத்திற்கு 'துன் டெம்பிளர் மண்டபம்' என்று அவரின் நினைவாகப் பெயரிட்டுள்ளது.[5] அத்துடன் அவரை மேலும் கௌரவிக்கும் வகையில், சிலாங்கூர், கோம்பாக் மாவட்டம், ரவாங்கில் 1,214 எக்டர் பரப்பளவு கொண்ட தாவரவியல் பூங்காவிற்கு டெம்பிளர் பூங்கா என்றும் பெயரிட்டுள்ளது.[6][7]
பொது
தொகுமலாயாவில் அவசர கால நிலையின் போது மலாயா தேசிய விடுதலை இராணுவத்தின் தோல்விக்குப் பெரிதும் உதவிய உத்திகளைச் செயல்படுத்துவதில் டெம்ப்ளர் ஒரு முன்னோடியாக விளங்கினார். அவரின் "இதயங்களும் மனங்களும்" எனும் உத்திகள், வெற்றிகரமான எடுத்துக்காட்டுகள் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் கருத்துரைக்கின்றனர்.[8] பல சர்ச்சைக்குரிய கொள்கைகளுக்கு டெம்பிளர் உத்தரவிட்டார் என்றும்; தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்தார் என்றும் அறியப்படுகிறது.
மலாயா புதுக்கிராமங்கள் என்று அழைக்கப்படும் தடுப்பு முகாம்களின் பயன்பாடு; சிறுபான்மை இனத்தவர்களைக் கட்டாயமாக இடமாற்றம் செய்தல்;[9]கட்டாய ஆட்சேர்ப்பு,[10]குடிமக்களுக்கு எதிரான கூட்டுத் தண்டனை; சந்தேகத்திற்குரிய பொதுநலவாதிகளின் தலைகளைத் துண்டிக்க சிறப்பு இபான்-தலை வேட்டையாடுபவர்களைப் பணியில் அமர்த்தியது போன்றவை சர்ச்சைக்குரிய கொள்கைகளாக அவற்றில் அடங்கும்.[11][12]
அவர் செயல்படுத்திய பல உத்திகள், பின்னர் காலத்தில் வியட்நாமில், ஐக்கிய அமெரிக்காவினால் செயல்படுத்தப்பட்டன.[13]
மலாயாவில் டெம்பிளர்
தொகு22 சனவரி 1952-இல், மலாயாவில் அவசர கால நிலையைச் சமாளிக்க டெம்ப்ளரை மலாயாவிற்கான பிரித்தானிய உயர் ஆணையராக, வின்ஸ்டன் சர்ச்சில் நியமித்தார்.[14] மலாயாவுக்கு டெம்ப்ளர் வந்த போது மலாயா பொதுவுடைமைவாதிகளின் செயல்பாடுகள் வளர்ச்சி பெறும் நிலையில் இருந்தன. அந்தச் செயல்பாடுகளைக் கட்டம் கட்டமாகத் தோறகடிக்கும் உத்திகளை டெம்ப்ளர் கையாளத் தொடங்கினார்.
அந்த வகையில், மலாயா தேசிய விடுதலை இராணுவத்திற்கு எதிரான டெம்பளரின் உத்திகள் "பிரித்தானிய இராணுவத்தின் கிளர்ச்சி-எதிர்ப்புப் பிரசாரங்களில் மிகவும் வெற்றிகரமான ஒன்றாகக் கருதப்படுகிறது.[15] டெம்பிள்ர் தம் முயற்சிகளை, முதலில் உளவுத்துறையில் கவனம் செலுத்தினார்.[16] அவரின் உத்திகளில் ஒன்றான; 'காட்டுக்குள் அதிகமான படைவீரர்களை அனுப்புவதில் பொருள் இல்லை, மாறாக மக்களின் இதயங்களில்தான் மாற்றங்கள் உள்ளன' எனும் உத்தி இன்றளவும் பிரபலமாக அறியப்படுகிறது.[17]
ஊரடங்குச் சட்டங்கள்
தொகுசரணடைய விரும்பும் கிளர்ச்சியாளர்களுக்கும்; அவர்களைச் சரணடைய ஊக்குவித்தவர்களுக்கும் வெகுமதிகள் வழங்குதற்கான ஊக்கத் திட்டங்களை டெம்பிளர் நிறுவினார்.[18] அது மட்டும் அல்லாமல், கடுமையான ஊரடங்குச் சட்டங்களையும், உணவுப் பொருட்களின் மீது வலுவான கட்டுப்பாடுகளையும் விதித்தார். அந்த வகையில் கிளர்ச்சியாளர்களைக் காடுகளில் இருந்து அப்புறப்படுத்தும் ஒரு கட்டாயநிலை ஏற்பட்டது.[19]
கிளர்ச்சியாளர்களுக்கு உணவு வகைகள் போய்ச் சேராதவாறு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த வகையில் கிளர்ச்சியாளர்கள் பயிரிட்ட பயிர்கள் மீது களைக்கொல்லி மற்றும் இலை உதிர்ப்பி மருந்துகளைப் பயன்படுத்தி அழித்தார். டெம்பளரின் இந்த நடைமுறைதான், பின்னர்க் காலத்தில் வியட்நாம் போரில் 'ஆரஞ்சு ஏஜண்ட்' (Agent Orange) எனும் நச்சுக் கலவையை ஐக்கிய அமெரிக்கா பயன்படுத்துவதற்கான வழிமுறைக்கும் தயார்படுத்தியது.[20]
மலாயாவின் புலி
தொகுஏப்ரல் 1952 இல், 'தி டெய்லி வோர்க்கர்' என்ற பிரித்தானிய பொதுவுடைமைச் செய்தித்தாள், கிளர்ச்சிக்காரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டது.[11][21] அந்தப் படங்கள் பன்னாட்டு அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின. அதற்கு பதில் அளித்த டெம்பிளர், சந்தேகத்திற்குரிய மலாயா தேசிய விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்களின் தலைகளைத் துண்டிப்பதற்கு டயாக் மக்களை பிரித்தானியத் துருப்புக்கள் பயன்படுத்தும் நடைமுறை சரியானது என்றார்.[12]
மலாயாவில் இருந்த காலத்தில், பொதுவாக "மலாயாவின் புலி" என்று டெம்பிளர் அறியப்பட்டார். இந்தப் பட்டத்தை முன்பு, 1942-இல், சிங்கப்பூர், மலாயாவைக் கைப்பற்றிய சப்பானிய தளபதி தோமோயுகி யமாசிதா பெற்று இருந்தார்.[22] டெம்பிளர், 25 அக்டோபர் 1979 அன்று ஐக்கிய இராச்சியம், செல்சி எனும் இடத்தில் உள்ள அவரின் வீட்டில் நுரையீரல் புற்றுநோயால் காலமானார்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Cloake, John (1985). Templer, Tiger of Malaya. London: Harrap Limited. p. 399. ISBN 0245542043.
- ↑ "Field-Marshal Sir Gerald Walter Robert Templer..." www.findagrave.com.
- ↑ Hale, Christopher (2013). Massacre in Malaya: Exposing Britain's My Lai. Brimscombe Port: The History Press. p. 326. ISBN 978-0-7524-8701-4.
- ↑ "In 1952, Tun Sir Gerald Templer, then the British High Commissioner of Malaya, saw the need for leaders and captains of industries to be prepared to run the country in anticipation of impending independence". Outward Bound. Retrieved 26 April 2024.
- ↑ "Royal Military College: facilities". Geocities. Retrieved 2 January 2012.
- ↑ "Templer Forest Eco Park is located in Templar Forest Reserve, a part of the State Forest Park which is situated 13 km from Rawang via Jalan Selayang – Rawang and 21 km from Kuala Lumpur. The forest is a dipterocarp hill forest". Retrieved 26 April 2024.
- ↑ Gombak, Filed under (5 October 2020). "Templer's Park (Taman Rimba Templer)". Visit Selangor. Retrieved 26 April 2024.
- ↑ Elkins, Caroline (2022). Legacy of Violence: A History of the British Empire (in ஆங்கிலம்). Knopf Doubleday. pp. 535–536. ISBN 978-0-593-32008-2.
- ↑ Leary, John D. (1995). Violence and the Dream People: The Orang Asli in the Emergency 1948–1960. Athens: Athens: Ohio University Press. pp. 42–43. ISBN 0-89680-186-1.
- ↑ Brendon, Piers (2010). The Decline and Fall of the British Empire 1781–1997. Random House. p. 457. ISBN 9781409077961.
- ↑ 11.0 11.1 "This is the War in Malaya". The Daily Worker. 28 April 1952.
- ↑ 12.0 12.1 Peng, Chin; Miraflor, Norma; Ward, Ian (2003). Alias Chin Peng: My Side of History. Singapore: Media Masters. pp. 304–305. ISBN 981-04-8693-6.
- ↑ Tilman, Robert O. (1 August 1966). "The Non-Lessons of the Malayan Emergency". Far Eastern Survey 6 (8). https://online.ucpress.edu/as/article-abstract/6/8/407/24029/The-Non-Lessons-of-the-Malayan-Emergency?redirectedFrom=fulltext.
- ↑ "No. 39448". இலண்டன் கசெட். 25 January 1952. p. 513.
- ↑ Heathcote 1999, ப. 276.
- ↑ Lapping, Brian pg 224
- ↑ "Personality Profile: Gerald Templer". Pointer: Journal of the Singapore Armed Forces. 2003. Archived from the original on 7 ஆகஸ்ட் 2008. Retrieved 2 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Empire's Children: Hearts and Minds Campaign". Channel 4. Retrieved 2 January 2012.
- ↑ Lapping, Brian pg 224
- ↑ Newsinger, John (2013). The Blood Never Dried: A People's History of the British Empire. London: Bookmarks Publications. p. 220. ISBN 978-1-909026-29-2.
- ↑ Newsinger, John (2013). The Blood Never Dried: A People's History of the British Empire. London: Bookmarks Publications. p. 219. ISBN 978-1-909026-29-2.
- ↑ Burleigh, Michael (2013). Small Wars, Faraway Places: Global Insurrection and the Making of the Modern World 1945–1965. New York: Viking – Penguin Group. pp. 176. ISBN 978-0-670-02545-9.
நூல்கள்
தொகு- Barber, Noel (1989). The War of Running Dogs. Arrow Books. ISBN 0-09-962110-X.
- Cloake, John (1985). Templer, Tiger of Malaya: the life of field marshal Sir Gerald Templer. London, Harrap. ISBN 978-0-245-54204-6.
- Doherty, Richard (2004). Ireland's Generals in the Second World War. Four Courts Press. ISBN 9781851828654.
- Heathcote, Tony (1999). The British Field Marshals 1736–1997. Barnsley (UK): Pen & Sword. ISBN 0-85052-696-5.
- Ramakrishna, Kumar (2002). Emergency Propaganda: The Winning of Malayan Hearts and Minds 1948–1958. Curzon Press, Richmond. ISBN 978-0-7007-1510-7.