ஆண்ட்ரூ பால்பிர்னி

அயர்லாந்து துடுப்பாட்ட வீரர்

ஆன்ட்ரூ பால்பீர்னி (Andrew Balbirnie, பிறப்பு: டிசம்பர் 28, 1990) ஒரு அயர்லாந்துத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஒரு வலது கை மட்டையாளர். அயர்லாந்து அணியின் ஒரு குச்சக் காப்பாளர் ஆவார். டப்ளினில் பிறந்த இவர் புனித ஆண்ட்ரூ கல்லூரியில் கல்வி பயின்றார்.[1] மே 2018 இல் பாக்கித்தானுக்கு எதிரான அயர்லாந்தின் முதல் தேர்வுப் போட்டியில் விளையாடிய பதினொரு வீரர்களில் பால்பிர்னியும் ஒருவராக இருந்தார். டிசம்பர் 2018 இல், அயர்லாந்துத் துடுப்பாட்ட வாரியத்தால் ஒப்பந்தம் வழங்கப்பட்ட பத்தொன்பது வீரர்களில் ஒருவராக இருந்தார்.[2] [3]

ஆண்ட்ரூ பால்பிர்னி
Andrew Balbirnie
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கைப் புறத்திருப்பம்
பங்குதுடுப்பாட்ட வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 1)11 மே 2018 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வு24 சூலை 2019 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 35)5 சூலை 2010 எ. இசுக்காட்லாந்து
கடைசி ஒநாப7 சூலை 2019 எ. சிம்பாப்வே
இ20ப அறிமுகம் (தொப்பி 35)19 சூன் 2015 எ. இசுக்காட்லாந்து
கடைசி இ20ப12 சூலை 2019 எ. சிம்பாப்வே
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011–2015மிடில்செக்சு அணி (squad no. 15)
2011–2013கார்டிஃப் அணி
2013–இன்றுலைன்சுட்டர் லைட்னிங்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா.ப மு.த ப.அ
ஆட்டங்கள் 3 64 28 91
ஓட்டங்கள் 146 1,813 1,213 2,927
மட்டையாட்ட சராசரி 24.33 31.80 32.78 37.05
100கள்/50கள் 0/2 5/8 2/7 9/12
அதியுயர் ஓட்டம் 82 145* 205* 205*
வீசிய பந்துகள் 60 609 96
வீழ்த்தல்கள் 2 13 2
பந்துவீச்சு சராசரி 34.00 18.84 56.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/26 4/23 1/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 20/– 25/– 28/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, சூலை 27 2019

பன்னாட்டு விளையாட்டுகளில்

தொகு

இவர் இசுக்காட்லாந்திற்கு எதிராக தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியை சந்தித்தார். அவர் இத்தொடரில் மேலும் மூன்று ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடினார்.[4]

2015 சூன் 19 அன்று இசுக்காட்லாந்துக்கு எதிரான இருபது20 போட்டியில் அறிமுகமானார். எனினும் அப்போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது.[5]

சனவரி 2019 இல், இந்தியாவின் தேராதூனில் ஆப்கானித்தானுக்கு எதிராக அயர்லாந்து விளையாடிய தேர்வுப் போட்டி அணியில் அவர் இடம் பெற்றார்.[6] [7] மே 2019 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2019 அயர்லாந்து முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டம், பல்பீர்னியின் 100 வது சர்வதேச போட்டியாக அமைந்தது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Player profile: Andrew Balbirnie". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 1 January 2012.
  2. "19 men's central player contracts finalised ahead of busy 2019". Cricket Ireland. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
  3. "Ireland women to receive first professional contracts". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
  4. "One-Day International Matches played by Andrew Balbirnie". CricketArchive. Archived from the original on 4 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 1 January 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "Scotland tour of Ireland, 2nd T20I: Ireland v Scotland at Bready, Jun 19, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 June 2015.
  6. "Ireland announce squads for Afghanistan series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 January 2019.
  7. "Stirling to captain Ireland T20 squad, new faces named for upcoming Oman and Afghanistan series". Cricket Ireland. பார்க்கப்பட்ட நாள் 28 January 2019.
  8. "West Indian openers break records in win over Ireland". Cricket Ireland. பார்க்கப்பட்ட நாள் 5 May 2019.

வெளி இணைப்புகள்

தொகு
  • Andrew Balbirnie at ESPNcricinfo
  • Andrew Balbirnie at CricketArchive (subscription required)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ரூ_பால்பிர்னி&oldid=3542503" இலிருந்து மீள்விக்கப்பட்டது