ஆதித்தன் கனவு

திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் இயக்கத்தில் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆதித்தன் கனவு 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், எம். ஜி. சக்கரபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

ஆதித்தன் கனவு
1949 சனவரி பேசும்பஃடம் இதழில் வெளிவந்த விளம்பரம்
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
இசைஜி. ராமநாதன்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
அஞ்சலிதேவி
எம். ஜி. சக்கரபாணி
காளி என். ரத்னம்
சி. டி. ராஜகாந்தம்
ஆர். ஜெயகௌரி
நடன அமைப்புவழுவூர் பி. இராமையா பிள்ளை, சின்கா
கலையகம்மாடர்ன் தியேட்டர்ஸ்
வெளியீடுதிசம்பர் 11, 1948 (1948-12-11)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதை,

தொகு

இத்திரைப்படத்துக்கான வசனங்களை எழுதியவர் ப. கண்ணன்.[3]

ஓர் அரசனிடம் சேனாதிபதிகளாக இருக்கும் இரண்டு வீரர்கள் தாங்கள் மணம் செய்து கொண்டால், தங்களுக்கு ஆணும் பெண்ணுமாகக் குழந்தைகள் பிறந்தால், அவர்கள் இருவருக்கும் திருமணம் முடித்து வைப்பதானால் என்ன சீர் செய்ய வேண்டும் என்ற விளையாட்டில் இறங்கி, அடுத்த நிமிடத்திலேயே இருவரும் விரோதிகளாக மாறி, பிரிகிறார்கள். ஆண், பெண் அழகுப் போட்டியில் கலந்துகொண்ட இரண்டு கந்தர்வர்கள், சேனாதிபதிகளின் புதல்வி ஞானவடிவும், புதல்வன் ஆதித்தனும் சந்தித்து, ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்கிறார்கள். இரு குடும்பங்களும் ஒன்று சேர்கின்றன.[3]

நடிகர்கள்

தொகு

நடன அமைப்பு: வழுவூர் பி. இராமையா பிள்ளை[1][2]

பாடல்கள்

தொகு

பாடல்களுக்கான இசையை ஜி. ராமநாதன் வழங்கியிருந்தார். பாடல்களை பாபநாசம் சிவன், அவரது சகோதரர் பாபநாசம் ராஜகோபால ஐயர் ஆகியோர் எழுதியிருந்தனர்.[2] அஞ்சலிதேவிக்கான பாடல்களுக்கு குமாரி ரத்தினம் பின்னணி பாடியுள்ளார்.[3]

  • மதுரமான ருசி உள்ளதே (டி. ஆர். மகாலிங்கம்)
  • மாயப்பிரபஞ்சமடி தங்கமே தங்கம் (டி. ஆர். மகாலிங்கம்)[4]
  • இன்பம் தருமணமோ (டி. ஆர். மகாலிங்கம்)
  • உள்ளம் குளிர (டி. ஆர். மகாலிங்கம்)
  • வண்ணப் பொற்சித்திரமே (குமாரி ரத்னம்)
  • மணங்கமழ் வாழ்வை (குமாரி ரத்னம்)
  • என்னென்று சொல்வேனடி (குமாரி ரத்னம்)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 பிலிம் நியூஸ் ஆனந்தன் (23-10-2004). சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 2017-02-15. பார்க்கப்பட்ட நாள் 2017-12-18. {{cite book}}: Check date values in: |date= (help)CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 2.2 Guy, Randor (22 மே 2009). "Adithan Kanavu 1948". தி இந்து. Archived from the original on 25 நவம்பர் 2016.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "ஆதித்தன் கனவு". பேசும் படம்: பக். 127-129. சனவரி 1949. 
  4. "மாயப்பிரபஞ்சமடி தங்கமே தங்கம்". யூடியூப்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்தன்_கனவு&oldid=3949886" இலிருந்து மீள்விக்கப்பட்டது