ஆயிசி கோசு

இந்திய மாணவர் ஆர்வலர் (பிறப்பு 1995)

ஆயிசி கோசு (Aishe Ghosh) [1] இந்திய அரசியல்வாதி மற்றும் மாணவர் ஆர்வலர் ஆவார். அவர் சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் மற்றும் இந்திய மாணவர் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளார். 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் சமுரியா தொகுதியில் இருந்து இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக இருந்து கரேராம் சிங் என்பவரிடம் தோல்வியடைந்தார்.[2][3]

ஆயிசி கோசு
சூலை 2021 ஆம் ஆண்டு கோசு
சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் செயலாளர்
பதவியில்
2019–2020
முன்னையவர்என்.சாய் பாலாசி
பின்னவர்2022 சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22.10.1995 (வயது 27)
துர்காபூர், மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
கல்விதௌலத் ராம் கல்லூரி (பி.ஏ.),
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (எம்.ஏ.)
வேலைமாணவர் ஆர்வலர்
அறியப்படுவதுசவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி பிறந்த கோசு, மேற்கு வங்காளத்தின் மேற்கு வர்த்தமான் மாவட்டத்தில் உள்ள துர்காபூர் நகரில் வளர்ந்தார். டெபாசிசு கோசு மற்றும் சர்மிச்தா கோசு ஆகியோரின் மூத்த குழந்தை இவர் ஆவார். இவரது தந்தை தேபாசிசு கோசு, தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தின் ஊழியராவார். மேலும் இந்திய பொதுவுடைமை கட்சியின் (மார்க்சிஸ்ட் ) தொழிலாளர் பிரிவான இந்திய தொழிற்சங்கங்களின் மையத்துடன் (சிஐடியு) தொடர்புடையவர். இவரது தாயார் சர்மிச்தா கோசு ஒரு இல்லத்தரசி. இவருடைய இளைய சகோதரி இசிகா கோசு ஆவார். தற்போது புது தில்லியில் உள்ள சியாமா பிரசாத் முகர்சி கல்லூரியில் இளங்கலைப் படித்து வருகிறார்.[4]

டெல்லி பல்கலைக்கழகத்தின் தௌலத் ராம் கல்லூரியில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்ற பிறகு, கோசு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தற்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பள்ளியில் தத்துவ முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[5]

அரசியல் வாழ்க்கை

தொகு

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் , ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] அந்த பதவியில் கட்டண உயர்வு, நூலக நிதி வெட்டு, விடுதி பற்றாக்குறை, அதிகரித்த மின் கட்டணங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் உடை மற்றும் நேரக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டார்.[7][8] 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் மிகவும் பிரபலமான மத்திய பல்கலைக்கழகமாக மாறியது.[9] அரசுப் பல்கலைக்கழகங்கள் இலாப நோக்கற்ற நிறுவனங்களைப் போல் செயல்படக் கூடாது என்ற கருத்தை கொண்டிருந்தார்.[10] பல்கலைக்கழகத்தின் பாலின உணர்திறன் குழுவை நீக்கியதற்கும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பேராசிரியரான அதுல் சோக்ரிக்கு தண்டனை வழங்குவதற்கும் எதிரான போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.[11] கல்வி நிறுவனங்களை ஆதரிப்பதில் பாரதிய சனதா கட்சி புறக்கணிக்கப்படுவதாக அவர் விமர்சித்தார்.

2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் 5 ஆம் தேதியன்று, இந்து தேசியவாத அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிசத் நடத்தியதாகக் கூறப்படும் வளாகத்தில் நடந்த தாக்குதலின் போது தலையில் காயம் அடைந்த கோசு டெல்லி எய்ம்சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[12][13] வளாகத்தின் மீதான தாக்குதல் பரவலான முழு தழுவு அளவு பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் வளர்ந்து வரும் எதிர்ப்பு இயக்கத்தின் மத்தியில் தேசிய அங்கீகாரத்தைப் பெற்றார். அவருக்கு நடிகை தீபிகா படுகோனே மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் ஆதரவு அளித்தனர்.[14][15] இந்த சம்பவத்திற்காக ஐஷே கோசு மீது காழ்ப்புணர்ச்சி மற்றும் தாக்குதலுக்காக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த இயக்கத்தை உடைக்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியவர்கள், காவல்துறை மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக அவர் பின்னர் குற்றம் சாட்டினார்.[16] இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டங்களுக்கு எதிரான நாடு தழுவிய போராட்ட இயக்கத்தில் பங்கேற்றார்.

அவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவரின் அதிகாரத்திலும் உள்ளார். பல்கலைக்கழக நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட "தன்னிச்சையான" கட்டண உயர்வு மற்றும் அபராதங்களுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.[17]

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், கொல்கத்தாவில் உள்ள இரண்டு அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களால் வளாகத்தில் கூட்டங்களில் பேச கோசுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேற்கு வங்காளத்தில் மேற்கு பர்த்வானில் பேரணி நடத்த மாவட்ட நிர்வாகம் அவருக்கு அனுமதி மறுத்தது.[18]

2021 மேற்கு வங்க சட்டசபை தேர்தல்

தொகு

2021 ஆம் ஆண்டு மேற்கு வங்கத் தேர்தலில் சமுரியாவில் (விதான் சபா தொகுதி) இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிச்ட்) வேட்பாளராக ஆயிசி கோசு இருந்தார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு சார்பில் கரேராம் சிங் வெற்றி பெற்றார்.[19]

மேற்கோள்கள்

தொகு
  1. "Who is Aishe Ghosh? All you need to know about JNUSU president Aishe Ghosh". The Times of India (in ஆங்கிலம்). 10 January 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  2. "West Bengal polls: CPI(M) to focus on young candidates". Deccan Herald (in ஆங்கிலம்). 2021-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  3. "সম্ভাব্য বাম প্রার্থীদের চিনে নিন..." Ei Samay (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  4. "A peek into 'studious and gritty' JNU student leader Aishe Ghosh's life". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-01-08. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  5. "Meet JNUSU president Aishe Ghosh — the research scholar who became a leader to stop student body from dissolving". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  6. "After HC Order, JNUSU Results Declared: A Left Sweep Once Again". TheQuint (in ஆங்கிலம்). 2019-09-06. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  7. "JNU grinds to a halt as students call for university strike demanding revocation of new hostel rules". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  8. "The Aishe Ghosh Interview: Ever since the BJP came to power, they have attacked education in JNU". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  9. "Post fee hike, JNU to be India's most expensive central university: Students to shell out Rs 62k per year for single room-India News, Firstpost". Firstpost. 2019-11-17. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  10. "Students are being treated as customers: JNUSU president Aishe Ghosh on fee-hike protests". The Caravan (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  11. "We Are Fighting To Save Last Bits Of JNU's Essence: JNUSU President Aishe Ghosh". magazine.outlookindia.com/. Archived from the original on 2021-07-30. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  12. "JNUSU president Aishe Ghosh discharged from AIIMS". India Today (in ஆங்கிலம்). 6 January 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  13. "JNU violence: Police name masked woman in video, ABVP admits she is their member". The Indian Express (in ஆங்கிலம்). 2020-01-15. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  14. "Entire country with you, Pinarayi Vijayan tells Aishe Ghosh". The Times of India (in ஆங்கிலம்). 12 January 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  15. "Deepika Padukone Attends JNU Meet Against Violence, BJP Now Wants Her Films Boycotted". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  16. Tanushree, Pandey (6 January 2020). "Organised attack, nexus between JNU security and vandals, says JNUSU president Aishe Ghosh". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  17. "JNU students' union moves Delhi High Court against hostel fee hike, says varsity decision arbitrary". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-01-21. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  18. "Mamata Banerjee, Aishe Ghosh land in each other's crosshairs". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-02-15. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  19. "West Bengal Election Result 2021 | Jamuria Assembly Constituency: Ex-JNUSU President Aishe Ghosh Defeated By TMC's Hareram Singh". Moneycontrol (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிசி_கோசு&oldid=4109769" இலிருந்து மீள்விக்கப்பட்டது