ஆரத்தி அங்கலிகர் திகேகர்
ஆரத்தி அங்கலிகர் திகேகர் ( Arati Ankalikar Tikekar ) (பிறப்பு: ஜனவரி 27, 1963) ஓர் இந்திய பாரம்பரிய இசைப் பாடகர் ஆவார். இவர் பெரும்பாலும் மராத்தி, கொங்கணி மற்றும் பாலிவுட் திரைப்படத் துறையில் பல புகழ் பெற்ற பாடல்களை பாடியுள்ளார். மேலும் இவர் ஆக்ரா மற்றும் குவாலியர் மற்றும் செய்ப்பூர் பாணியில் பாடுவதற்கு பெயர் பெற்றவர். சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான இரண்டு முறை தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் சங்கீத நாடக அகாடமி விருதையும் பெற்றுள்ளார்.
ஆரத்தி அங்கலிகர் திகேகர் | |
---|---|
ஒரு இசை நிகழ்ச்சியில் ஆரத்தி அங்கலிகர் திகேகர் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 27 சனவரி 1963 பிஜாப்பூர், கருநாடகம், இந்தியா |
பிறப்பிடம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) |
|
இசைத்துறையில் | 1975–தற்போது வரை |
இணையதளம் | AratiAnkalikar.com |
பல ஒலிவடிவ இசைத்தட்டுகளை பதிவு செய்வதன் மூலம் அங்கலிகர் திகேகர் அறியப்படுகிறார். சியாம் பெனகலின் சர்தாரி பேகம் திரைப்படத்தின் முக்கிய பின்னணி பாடகியாக இருந்தார். இவர் தேஜோமாய் நட்பிரம், ராக்-ரங், மற்றும் அந்தர்நாத், தே தாக்கா, சாவ்லீ மற்றும் ஹிட் சர்தாரி பேகம், ஏக் ஹசராச்சி நோட் ஆகிய திரைப்படங்களுக்கான பின்னணிப் பாடல் தொகுப்புகளுக்காக அறியப்படுகிறார். இருபதுகளின் நடுப்பகுதியில் இருக்கும் இவரது மகள் சுவாநந்தி திகேகரும் ஒரு நடிகை ஆவார். பிரபல இந்துஸ்தானி சங்கீத பாடகர் பத்மவிபூஷன் கிஷோரி அமோன்கர் இவரது குரு ஆவார்.
குடும்பம்
தொகுஆரத்தி அங்கலிகர் திகேகர், ஜனவரி 27, 1963 அன்று பிஜாப்பூரில் பிறந்தார். இவர் இந்தியத் திரைப்பட நடிகரான உதய் திகேகர் என்பவரை மணந்தார்.[1] இவரது மகள் சுவநந்தி திகேகரும் ஒரு பிரபலமான மராத்தி தொலைக்காட்சி மற்றும் நாடக நடிகை ஆவார்.
தொலைக்காட்சி தோற்றங்கள்
தொகுதொலைக்காட்சி நேர்காணல்கள், உண்மை நிகழ்ச்சிகள் மற்றும் பல இசை நிகழ்ச்சிகளில் விருந்தினர் நடுவராக அங்கலிகர் திகேகர் தோன்றியுள்ளார்.
நிகழ்ச்சிகள்
தொகுஇராக-மாலா இசைச் சங்கத்திற்காக 2019 இல் கனடாவின் தொராண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகம் உட்பட, உலகெங்கிலும் உள்ள மதிப்புமிக்க இடங்களில் அங்கலிகர் திகேகர் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.[2]
சாதனைகள் மற்றும் விருதுகள்
தொகு2006 ஆம் ஆண்டுக்கான பாரம்பரிய பாடகரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஆண்டர்நாடு என்ற கொங்கணி திரைப்படத்திற்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தனது முதல் தேசிய திரைப்பட விருதை]] அங்கலிகர் திகேகர் பெற்றுள்ளார்.[3]
மராத்தி திரைப்படமான தே தக்காவுக்காக இவர் மகாராட்டிர மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றார். பின்னர், 2013 இல், சம்ஹிதாஎன்ற மராத்தி திரைப்படத்தில் இரண்டாவது முறையாக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pune's Arati Ankalikar-Tikekar bags National Award for second time. டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்.
- ↑ "Stree Shakti: Celebrating Women in Music | Aga Khan Museum (7 September 2019)". Aga Khan Museum (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 November 2020.
- ↑ "Directorate of Film Festival" (PDF). iffi.nic.in. Archived from the original (PDF) on 28 September 2011. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
- ↑ "National Film Awards 2013". dff.nic.in. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.