ஆர்தர் கிலிகன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஆர்தர் கிலிகன் (Arthur Gilligan,பிறப்பு: டிசம்பர் 23, 1894, இறப்பு: செப்டம்பர் 5, 1976) இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 337 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1922 - 1925 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஆர்தர் கிலிகன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 11 337
ஓட்டங்கள் 209 9140
மட்டையாட்ட சராசரி 16.07 20.08
100கள்/50கள் 0/0 12/26
அதியுயர் ஓட்டம் 39* 144
வீசிய பந்துகள் 2404 42650
வீழ்த்தல்கள் 36 868
பந்துவீச்சு சராசரி 29.05 23.20
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 42
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 4
சிறந்த பந்துவீச்சு 6/7 8/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/0 181/0
மூலம்: [1]

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

கிலிகன்டென்மார்க் ஹில், [1] லண்டனில் கேம்பர்வெல்லின் ஒரு பகுதியில் பிறந்தார். [2] வில்லி ஆஸ்டின் கிலிகன் மற்றும் ஆலிஸ் எலிசா கிம்ப்டன் ஆகியோருக்கு பிறந்த மூன்று மகன்களில் இவர் இரண்டாவது மகன் ஆவார். இவரது சகோதரர்கள் பிராங்க் மற்றும் ஹரோல்ட் ஆகியோர் உயர் மட்ட துடுப்பாட்டத்திலும் விளையாடினர். [2] குடும்பத்திற்கு சசெக்சு துடுப்பாட்ட அணியுடன் ஒரு பிணைப்பு இருந்தது. கிலிகன் ஒரு குழந்தையாக இருந்தபோது சசெக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட சங்கத்தில் நடக்கும் போட்டிகளைப் பார்க்கச் சென்றார். பின்னாளில் இவர் அந்த அணிக்காகத் துடுப்பாட்டம் விளையாடினார். [3] ஃபேர்ஃபீல்ட் பள்ளியில் படித்த பிறகு, 1906 முதல் 1914 வரை டல்விச் கல்லூரியில் கல்வி கற்றார், அங்கு தடகள மற்றும் துடுப்பாட்டத்தில் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். துடுப்பாட்டத்தில் இவர் தனது சகோதரர்களைப் போலவே பள்ளியில் முதல் லெவன் அணியில் விளையாடினார்; 1913 இல், மூன்று சகோதரகளும் ஒரே அணியில் விளையாடினர். [2] கிலிகன்1911 மற்றும் 1914 க்கு முதல் லெவனில் வீரராகவும் இவரது இறுதி இரண்டு ஆண்டுகளில் அணியின் தலைவராகவும் இருந்தார். [4] 1914 ஆம் ஆண்டில், பள்ளியின் மட்டையாட்ட சராசரி மற்றும் பந்துவீச்சு சராசரிகளில் முதலிடம் பிடித்தார். 1914 இல் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் பள்ளி துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மொத்தம் பத்து இழப்புகளை வீழ்த்தி இரண்டு போட்டிகளிலும் அரைநூறு ஓட்டங்கள் எடுத்தார். [5] 1913 மற்றும் 1914 பள்ளி விடுமுறை நாட்களில் சர்ரே துடுப்பாட்ட அணி இவர்களின் இரண்டாவது லெவனில் விளையாட அழைத்தது.இவரது தந்தை அந்த மாவட்டக் குழுவில் உறுப்பினராக இருந்தார், மேலும் கிலிகன் லண்டனில் பிறந்ததால் இவர் அந்த அணி சார்பாக விளையாடத் தகுதி பெற்றார். [2] [6]

1914 ஆம் ஆண்டில், கிலிகன்கேம்பிரிட்ஜ், பெம்பிரோக் கல்லூரியில் நுழைந்தார். ஆனால் பல்கலைக்கழகத்தில் இவரது துடுப்பாட்ட வாழ்க்கை முதல் உலகப் போரினால் தடைபட்டது. இவர் 1915 முதல் பிரான்சில் லங்காஷயர் ஃபுசிலியர்ஸுடன் சண்டையிட்டார். 11 வது பட்டாலியனில் தலைவராக பணியாற்றினார். [2] [6] போர் முடிந்ததும், கிலிகன்பெம்பிரோக்கிற்குத் திரும்பி தனது துடுப்பாட்ட வாழ்க்கையை மீண்டும் தொடங்கினார். [4]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

கிலிகன் ஏப்ரல் 1921 இல் தனது முதல் மனைவி சிசிலியா மேரி மேத்யூஸை மணந்தார், [7] ஆனால் இவரது முறையற்ற நடத்தை அடிப்படையில் 1933 அக்டோபரில் இவர்கள் திருமணம் முறிவு பெற்றனர். [8] இவர் 1934 ஆம் ஆண்டில் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இவர் தனது இரண்டாவது மனைவி கேதரின் மார்கரெட் ஃபாக்ஸை ஒரு பனிச்சறுக்கு பயணத்தில் சந்தித்தார். [7]

துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கிலிகன் பத்திரிகைத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். இவர் 1932 இல் சசெக்ஸ் துடுப்பாட்டத்தின் வரலாறு உட்பட பல துடுப்பாட்ட நூல்களை எழுதினார். [9] அதன் பின்னர் வானொலி துடுப்பாட்ட வர்ணனையாளர்களில் ஒருவரானார். இவர் 1947 மற்றும் 1954 க்கு இடையில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான பிபிசி வானொலி வர்ணனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். [10] 1955 ஆம் ஆண்டில், இங்கிலாந்து வென்ற 1954-55 ஆஷஸ் தொடரைப் பற்றி தி அர்ன் ரிட்டர்ன்ஸ் என்ற நூலை எழுதினார். இங்கிலாந்தில், நியூஸ் க்ரோனிகல் பத்திரிகைக்கு துடுப்பாட்டம் பற்றி எழுதினார். இரண்டாம் உலகப் போரின் போது, கிலிகன்ராயல் விமானப்படையில் ஒரு நல அலுவலராக பணியாற்றினார். [11] [12]

சான்றுகள்

தொகு
  1. "Arthur Gilligan (Cricinfo profile)". ESPNCricinfo. Archived from the original on 21 June 2012. பார்க்கப்பட்ட நாள் 17 May 2012.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Silk, D. R. W. (2011) [2004]. "Gilligan, Arthur Edward Robert (1894–1976)". Oxford Dictionary of National Biography (online ed.). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/ref:odnb/64946. பார்க்கப்பட்ட நாள் 17 May 2012. (subscription or UK public library membership required)
  3. Lee, pp. 147–48.
  4. 4.0 4.1 "Arthur Gilligan (Obituary)". Wisden Cricketers' Almanack. London: John Wisden & Co. 1977. Archived from the original on 12 March 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2012.
  5. "Player Oracle AER Gilligan". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 17 May 2012.
  6. 6.0 6.1 Lee, p. 147.
  7. 7.0 7.1 Silk, D. R. W. (2011) [2004]. "Gilligan, Arthur Edward Robert (1894–1976)". Oxford Dictionary of National Biography (online ed.). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/ref:odnb/64946. பார்க்கப்பட்ட நாள் 17 May 2012. (subscription or UK public library membership required)
  8. "Probate, Divorce and Admiralty Division: Decree Nisi Against Mr A. E. R. Gilligan". http://www.thetimes.co.uk/tto/viewArticle.arc?articleId=ARCHIVE-The_Times-1933-10-06-04-005&pageId=ARCHIVE-The_Times-1933-10-06-04. பார்த்த நாள்: 9 June 2012. 
  9. "Gilligan, Arthur Edward Robert". Who Was Who. A & C Black 1920–2008; online edn, Oxford University Press. Dec 2007. பார்க்கப்பட்ட நாள் 9 June 2012.
  10. Martin-Jenkins, Christopher (1990). Ball by Ball: The Story of Cricket Broadcasting. Grafton Books.
  11. "Arthur Gilligan in B.B.C Broadcast". http://nla.gov.au/nla.news-article48906265. பார்த்த நாள்: 9 June 2012. 
  12. Lee, p. 185.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_கிலிகன்&oldid=3583329" இலிருந்து மீள்விக்கப்பட்டது