ஆர்த்தி வெங்கடேஷ்

இந்திய நடிகை

ஆர்த்தி வெங்கடேஷ் ( Arthi Venkatesh ) ஒரு இந்திய வடிவழகியும் சென்னையைச் சேர்ந்த சமூகவாதியுமாவார்.[1][2] 2000 களின் பிற்பகுதியில் விளம்பரங்களில் தோன்றிய பிறகு, பிஜாய் நம்பியாரின் இருமொழித் திரைப்படமான சோலோ (2017) மூலம் திரையுலகில் அறிமுகமானார்.[3]

ஆர்த்தி வெங்கடேஷ்
பிறப்பு23-நவம்பர்-1989
சென்னை, இந்தியா
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள்ஆர்த்தி அனிருத்தா
கல்விகாட்சித் தொடர்பியலில் துறை
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, சென்னை
பணிவடிவழகி, நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008–தற்போது வரை
உயரம்5ft 9in
வாழ்க்கைத்
துணை
அனிருத்தா சிரிகாந்த் (2012-2015)

தொழில் தொகு

ஆர்த்தி வெங்கடேஷ், சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர். சென்னை இலயோலாக் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்ற பின்னர் பெங்களூரில் உட்புற வடிவமைப்பில் படிப்பைத் தொடர்ந்தார்.[4] பெங்களூரில் இருந்த காலத்தில், அழகுக் கலை ஒப்பனையாளர் பிரசாத் பிடாபாவுடன் பழகினார். அவர் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து ஆர்த்தி அதில் ஈடுபட்டார்.[4][5]

அழகுக் கலைத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடர சிலகாலம் நியூயார்க்கிற்குச் சென்றார்.[6] சர்வதேச அழகுக் கலைத்துறையில் இவரது முதல் அறிமுகம் நியூயார்க் ஃபேஷன் வீக்கின் போது நடந்தது.[7] சென்னையில் ஒரு சமூகவாதியாக கருதப்படுகிறார்.[8][9][10][11] 2017 ஆம் ஆண்டு வரை, ஆர்த்தி சுமார் 250 ஓடுபாதை நிகழ்ச்சிகளையும் 350 க்கும் மேற்பட்ட புகைப்பட நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார்.[7][12]

மணிரத்னம் மற்றும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஷானூ சர்மாவின் போன்றவர்களிடமிருந்து நடிப்பு வாய்ப்புகளைப் பெற்ற போதிலும், ஆர்த்தி தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் திரைப்படத் துறையில் நுழைய தயங்கினார்.[13] 2016 ஆம் ஆண்டில், இயக்குனர் பிஜாய் நம்பியாரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஆர்த்தி, படத்தில் பணியாற்றுவதற்காக நடிப்புப் பயிற்சி எடுத்தார். படம் கிடப்பில் போடப்பட்டாலும், பின்னர் அவர் தமிழ்-மலையாளம் இருமொழித் திரைப்படமான சோலோவில் (2017) துல்கர் சல்மானுக்கு இணையாக நடிக்க வாய்ப்பளித்தார். கொச்சியில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்தது.[14][15] 2018 இல், சதீஷ் கிருஷ்ணனுடன் "காதலிக்க நேரமில்லை" என்ற உண்மைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக தோன்றினார்.

சொந்த வாழ்க்கை தொகு

இந்தியத் துடுப்பாட்டக்காரர் அனிருத்தா சிரிகாந்த்தைத் திருமணம் செய்து கொண்டார்.[16][17][18]

சான்றுகள் தொகு

  1. "Arthi Venkatesh A Heroine Is Born". https://www.magzter.com/article/Womens-Interest/Women-Exclusive/Arthi-Venkatesh-A-Heroine-Is-Born. 
  2. "The Storyteller - Arthi Venkatesh :)". thestoryteller-india.com.
  3. "Arthi Venkatesh excited about working with Dulquer Salmaan in Solo". http://www.hindustantimes.com/regional-movies/arthi-venkatesh-excited-about-working-with-dulquer-salmaan-in-solo/story-q9RKkq5NoP0P8GaAuUQtFI.html. 
  4. 4.0 4.1 "Arthi Venkatesh A Heroine Is Born". https://www.magzter.com/article/Womens-Interest/Women-Exclusive/Arthi-Venkatesh-A-Heroine-Is-Born. "Arthi Venkatesh A Heroine Is Born". Magzter. Retrieved 16 January 2018.
  5. Rathnam, Shilpa (August 15, 2011). "Clean bowled". India Today.
  6. "Feature". NOBE Creative.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. 7.0 7.1 "Arthi Venkatesh – Visitors at #Sector16 | Alegria 2020 | The Festival Of Joy | 04 Feb 2020 to 08 Feb 2020 | Pillai College Festival | Dreamland | One Of India's Biggest College Festivals". 25 February 2017. Archived from the original on 23 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  8. "Arthi Venkatesh looked pretty at the launch of Charles & Keith festive collection at Express Avenue". The Times of India.
  9. "Magnum's Limited-edition Pop-up is the Ultimate Destination for a Luxurious Experience this Festive Season". HospiBuz. 28 October 2019.
  10. "Move aside plaits, say hello to pixies". Deccan Chronicle. 29 July 2014.
  11. https://www.pressreader.com/india/deccan-chronicle/20130306/282544425728181 – via PressReader. {{cite web}}: Missing or empty |title= (help)
  12. "Arthi Venkatesh Talks Beauty and Makeup". website. 12 February 2018.
  13. Sunder, Gautam (23 November 2016). "Arthi walks beyond the ramp". Deccan Chronicle.
  14. "Chennai Model Arthi to debut in Bejoy Nambiar's bilingual - Times of India". The Times of India.
  15. "Provoke Lifestyle". Archived from the original on 2023-03-26. பார்க்கப்பட்ட நாள் 2023-03-26.
  16. "Peek into the home of cricketer Anirudha Srikkanth & model Arthi : MagnaMags". http://magnamags.com/society-interiors/at-home-with/peek-into-the-home-of-cricketer-anirudha-srikkanth-model-arthi/4264. 
  17. "Meet Arti Venkatesh - The beauty with brains that you didn't know about!". 16 September 2017.
  18. "When Bollywood and Cricket collide!".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தி_வெங்கடேஷ்&oldid=3927530" இலிருந்து மீள்விக்கப்பட்டது