ஆர்த்தோ- சைலீன்
ஆர்த்தோ-சைலீன் (o-Xylene) என்பது C6H4(CH3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒர் அரோமாட்டிக் ஐதரோகார்பன் ஆகும். பென்சீன் அரோமேடிக் வளையத்தில் இரண்டு மெத்தில் தொகுதிகள் அடுத்தடுத்த கார்பன் அணுக்களில் ஆர்த்தோ நிலையில் பதிலீடு செய்யப்பட்டுள்ளன. மெட்டா-சைலீன், பாரா-சைலீன் ஆகியனவற்றின் கட்டமைப்பு மாற்றியனாக இது கருதப்படுகிறது. இவற்றின் கலவை பொதுவாக சைலீன் அல்லது சைலீன்கள் என்றழைக்கப்படுகின்றன. ஆர்த்தோ- சைலீன் நிறமற்றும் இலேசான எண்ணெய்ப் பசையுடனும் தீப்பற்றி எரியக்கூடிய திண்மமாகவும் காணப்படுகிறது [5].
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,2-சைலீன் | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில் தொலுயீன் | |||
வேறு பெயர்கள்
'ஆ-சைலீன்
| |||
இனங்காட்டிகள் | |||
95-47-6 | |||
ChEBI | CHEBI:28063 | ||
ChEMBL | ChEMBL45005 | ||
ChemSpider | 6967 | ||
DrugBank | DB03029 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C07212 | ||
வே.ந.வி.ப எண் | ZE2450000 | ||
| |||
UNII | Z2474E14QP | ||
பண்புகள் | |||
C8H10 | |||
வாய்ப்பாட்டு எடை | 106.17 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 0.88 கி/மி.லி | ||
உருகுநிலை | −24 °C (−11 °F; 249 K) | ||
கொதிநிலை | 144.4 °C (291.9 °F; 417.5 K) | ||
0.02% (20°செல்சியசு)[1] | |||
எத்தனால்-இல் கரைதிறன் | கரையும் | ||
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் | கரையும் | ||
ஆவியமுக்கம் | 7 மி,மீபாதரசம் (20°செல்சியசு)[1] | ||
-77.78•10−6 செ.மீ3/மோல் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.50545 | ||
பிசுக்குமை | 1.1049 cP 0 °செல்சியசில் 0.8102 cP 20 °செல்சியசில் | ||
கட்டமைப்பு | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0.64 D [2] | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
ஈயூ வகைப்பாடு | தீங்கானது (Xn) தீப்பற்றும் (F) | ||
R-சொற்றொடர்கள் | R11 R20 R21 R38 | ||
S-சொற்றொடர்கள் | S25 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 32 °C (90 °F; 305 K) | ||
Autoignition
temperature |
463 °C (865 °F; 736 K)[3] | ||
வெடிபொருள் வரம்புகள் | 0.9%-6.7%[1] | ||
Threshold Limit Value
|
மில்லியனுக்கு 100 பகுதிகள் [3] (TWA), மில்லியனுக்கு 150 பகுதிகள்[3] (STEL) | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LCLo (Lowest published)
|
மில்லியனுக்கு 6125 பகுதிகள் (எலி, 12 மணி) மில்லியனுக்கு 6125 பகுதிகள் (மனிதன், 12 மணி)[4] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 100 ppm (435 மி.கி/மீ3)[1] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
தாங்கும் அளவு மில்லியனுக்கு 100 பகுதிகள் (435 மி.கி/மீ 3) எசு.டி அளவு மில்லியனுக்கு 150 பகுதிகள் (655 மி.கி/மீ3)[1] | ||
உடனடி அபாயம்
|
மில்லியனுக்கு 900 பகுதிகள்[1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரிப்பு
தொகுபெட்ரோலியத்தில் ஓர் எடை சதவீதம் அளவுக்கு சைலீன்கள் உள்ளன. பெரும்பாலும் ஆர்த்தோ-சைலீன் பெட்ரோலியத்தை சிதைத்தே தயாரிக்கப்படுகிறது. சைலீன் மாற்றியன்கள் உள்ளிட்ட பல அரோமாட்டிக் சேர்மங்கள் இதிலிருந்து கிடைக்கின்றன. மெட்டா-சைலீனை ஆர்த்தோ-சைலீனாக மாற்ற முடியும். 2000 ஆம் ஆண்டில் மட்டும் 500,000 டன் சைலீன்கள் நிகரமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
பயன்
தொகுபல வேதிப்பொருள்கள், மருந்துகள் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமான தாலிக் நீரிலி உற்பத்தியில் ஆர்த்தோ-சைலீன் பெருமளவு பயன்படுகிறது [5].
நச்சுத்தன்மை
தொகுசைலின்கள் நச்சுத்தன்மை கொண்டவை அல்ல, எடுத்துக்காட்டாக இவற்றின் உயிர் கொல்லும் அளவு எலிகளுக்கு வாய்வழியாக கொடுக்கும் அளவு 4300 மி.கி / கிலோ,கிராம் ஆகும். விலங்கு மற்றும் சைலீன் மாற்றியன்களுக்கு ஏற்ப இந்த அளவு மாறுபடும். சைலீன்கள் போதைப் பொருள் விளைவுகளில் பங்குபெறுகின்றன. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0668". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Rudolph, H.D.; Walzer, K.; Krutzik, Irmhild (1973). "Microwave spectrum, barrier for methyl rotation, methyl conformation, and dipole moment of ortho-xylene". Journal of Molecular Spectroscopy 47 (2): 314. doi:10.1016/0022-2852(73)90016-7. Bibcode: 1973JMoSp..47..314R.
- ↑ 3.0 3.1 3.2 "o-Xylene". International Chemical Safety Cards. ICSC/NIOSH. July 1, 2014.
- ↑ "Xylene (o-, m-, p-isomers)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 5.0 5.1 5.2 "Xylenes]". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2000). Wiley-VCH. DOI:10.1002/14356007.a28_433. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730.