ஆர்வம் (திரைப்படம்)

2010 திரைப்படம்

ஆர்வம் (Aarvam) என்பது 2010 ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். ஆதித்யன் இயக்கிய இப்படத்தில், முன்னணி வேடங்களில் சத்யா ஆர் சஞ்சய், மீனு கார்த்திகா ஆகியோர் நடித்தனர்.கஞ்சா கறுப்பு, பொன்னம்பலம், கராத்தே ராஜா, சிசர் மனோகர், போண்டா மணி, வடிவுக்கரசி ஆகியோ் பிற பாத்திரங்களில் நடித்தனர். டி. அனில் தயாரித்த இந்த படத்திற்கு, ரோனி ரபேலின் இசை அமைத்தார். படமானது 22 அக்டோபர் 2010 அன்று வெளியானது.[1]

ஆர்வம்
இயக்கம்ஆதித்யன்
தயாரிப்புடி. அனில்
கதைஆதித்யன்
எல். ஜி. இரவிச்சந்தர் (உரையாடல்)
இசைரோனி ரபேல்
நடிப்பு
  • சத்யா
  • ஆர். சஞ்சை
  • மீனு கார்த்திகா
ஒளிப்பதிவுமோகன் புதுசேரி
படத்தொகுப்புமுருகாரம்
கலையகம்மூவிடிரீம்ஸ்
வெளியீடுஅக்டோபர் 22, 2010 (2010-10-22)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

வணிக ரீதியாக பாடகசாலை (2010) படம் மோசமாக தோல்வியடைந்த பிறகு, மூவி ட்ரீம்ஸ் என்ற பதாகையின் கீழ் திரைப்பட தயாரிப்பாளர் அனில் ஆர்வம் படத்தின் வழியாக திரைப்படத் தயாரிப்புக்கு மீண்டும் திரும்பினார். பாடகசாலை படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சத்யா, ஆர். சஞ்சய் மீண்டும் தயாரிப்பாளருடன் கைகோர்த்தனர். கேரளாவைச் சேர்ந்த மீனு கார்த்திகா கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.[2][3] ஆர்வம் பட இயக்குனர் ஆதித்யன் தவிர, நாயகன் சத்யா, படத்தின் தயாரிப்பாளர் அனில், இசை அமைப்பாளர் ரோனி ரபேல், கலை இயக்குனர் அனில் ஸ்ரீரகம், ஒப்பனைக் கலைஞர் பினாய் ஆகிய அனைத்து கலைஞர்களும் மலையாளிகள் ஆவர்.[4][5] இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது, இப்படம் தென்காசி, குற்றாலம், மதுரை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.[6][7]

திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் ரோனி ரபேல் அமைத்தார். இசைப்பதிவில் ஆறு பாடல்கள் உள்ளன.[8][9]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "செல்லக் கட்டியே"  அனில் ராம், இராஜலட்சுமி 4:25
2. "பால் மனசு"  கிருபா, அன்வர் 5:22
3. "விண்ணோடு சேரடி"  சந்நிதானந்தன் 4:21
4. "தேவதையைக் கண்டேன்"  விது பிரதாப் 4:56
5. "முத்து முத்து"  ஜாசி கிஃப்ட், அனிதா ஷேக் 4:13
6. "முதல் முதலை"  கே. கே. நிஷாட், இராஜலட்சுமி 6:21
மொத்த நீளம்:
29:38

வெளியீடு

தொகு

இந்த படம் 22 அக்டோபர் 2010 அன்று நான்கு படங்களுக்கு போட்டியாக வெளியிடப்பட்டது.[10][11]

மேற்கோள்கள்

தொகு
  1. "Find Tamil Movie Aarvam". jointscene.com. Archived from the original on 2 May 2012. பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.
  2. "It's all because of 'Aarvam'". indiaglitz.com. 30 April 2010. பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.
  3. "New Girl from God's own country". ayngaran.com. 8 August 2010. பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.
  4. "Malayali newcomers taste success in Tamil movi". The New Indian Express. 6 April 2011. பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.
  5. "Satya's confident about Aarvam". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.
  6. "Aarvam - A suspense thriller". ayngaran.com. 15 March 2010. பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.
  7. "And Did They Live Happily Everafter?". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 25 September 2011. பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.
  8. "Aarvam (2010) - Ronni Raphael". mio.to. Archived from the original on 6 ஏப்ரல் 2022. பார்க்கப்பட்ட நாள் 13 September 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Aarvam Songs". jiosaavn.com. பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.
  10. "Friday Fury - October 22". சிஃபி. 22 October 2010. Archived from the original on 31 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.
  11. "Tamil Movie Today's releases". ayngaran.com. 22 October 2010. பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்வம்_(திரைப்படம்)&oldid=3827407" இலிருந்து மீள்விக்கப்பட்டது