ஆர். எஸ். தனேந்திரன்
டத்தோ ஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் (ஆங்கிலம்; R.S. Thanenthiran; மலாய்: R.S. Thanenthiran; சீனம்: R.S. 他恩提兰; (பிறப்பு: 4 சூலை 1963) என்பவர் ஒரு மலேசிய இந்திய அரசியல்வாதி மற்றும் ஒரு தொழிலதிபர் ஆகும்.[1]
பிறப்பு | சூலை 4, 1963 (61 ஆண்டுகள், 172 நாட்கள்) சுங்கை பட்டாணி, கெடா, மலாயா கூட்டமைப்பு (மலேசியா) |
---|---|
தேசியம் | மலேசியர் |
பணி | ஆசிரியர் (1985 - 1993) தொழிலதிபர் (1993 - தற்சமயம்) |
அரசியல் கட்சி | மலேசிய மக்கள் சக்தி கட்சி (Malaysia Makkal Sakti Party) (MMSP) |
வாழ்க்கைத் துணை | டத்தின் ஸ்ரீ வாணி மணியம் (தி. 1990) |
பிள்ளைகள் | 3 |
வலைத்தளம் | |
makkalsakti |
இவர் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் (Malaysia Makkal Sakti Party) நிறுவனர் மற்றும் தற்போதைய தலைவரும் ஆவார்.
பொது
தொகுதனேந்திரன் 1963-ஆம் ஆண்டு சூலை 4-ஆம் தேதி கெடாவில் உள்ள சுங்கை பட்டாணியில் (Sungai Petani) பிறந்தார். 1990-ஆம் ஆண்டு, அவர் வாணி மணியம் (Vaney Maniam) என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
கெடா பத்து பெக்காக்கா தேசியப் பள்ளியில் (SK Batu Pekaka) தன் தொடக்கக் கல்வியைப் பெற்ற இவர், பின்னர் தன் உயர்நிலைக் கல்வியை பத்து பெக்காக்கா உயர்நிலைப் பள்ளியில் (SMK Kuala Ketil) மெற்கொண்டார். பின்னர் ஈப்போ உலுகிந்தா ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில் (Maktab Perguruan, Ulu Kinta, Ipoh) தம் ஆசிரியர்ப் பயிற்சியைப் பெற்றார்.[2]
அரசியலுக்கு வருவதற்கு முன்பு தனேந்திரன், சில ஆண்டுகள் ஓர் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தனேந்திரன் கோரிக்கை
தொகுதனேந்திரன் அவர்களின் கொள்கைப்பாடும்; மற்றும் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் முக்கிய சித்தாந்தமும்; மலேசிய இந்தியர்களின் கல்வி நிலையை மேம்படுத்துவதாகும்.
மலேசியாவில் உள்ள இந்திய அரசியல் தலைவர்கள் குறைந்தபட்சம் ஒரு தமிழ்ப்பள்ளியைத் தத்தெடுக்க வேண்டும் என்று தனேந்திரன் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.[3]
தேர்தல் முடிவுகள்
தொகு2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் நிபோங் திபால் மக்களவை தொகுதியில் ஆர்.எஸ். தனேந்திரன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
தனேந்திரனுக்கு 10,660 வாக்குகள் கிடைத்தன. பாக்காத்தான் கூட்டணியின் மக்கள் நீதிக் கட்சி வேட்பாளர் பாட்லினா சீடேக் (Fadhlina Sidek) என்பவருக்கு 42,188 வாக்குகள் கிடைத்தன.
ஆண்டு | தொகுதி | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | மொத்த வாக்குகள் |
பெரும் பான்மை |
வாக்குகள் % | |||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2022 | P047 நிபோங் திபால் | தனேந்திரன் ராமன்குட்டி (Thanenthiran Ramankutty) (மக்கள் சக்தி கட்சி) |
10,660 | 13.44% | பாட்லினா சீடேக் (Fadhlina Sidek) (பி.கே.ஆர்) |
42,188 | 53.20% | 79,308 | 16,293 | 79.26% | ||
மன்சோர் ஒசுமான் (Mansor Othman) (பெர்சத்து) |
25,895 | 32.65% | ||||||||||
கோ கெங் உவாட் (Goh Kheng Huat) (சுயேச்சை) |
565 | 0.71% |
மேற்கோள்கள்
தொகு- ↑ Loh, Makkal Sakti website (10 October 2009). "President of Malaysia Makkal Sakti Party Datuk R.S. Thanenthiran". Makkal Sakthi Party. பார்க்கப்பட்ட நாள் 30 April 2015.
- ↑ "Presiden Parti Makkal Sakti Malaysia". பார்க்கப்பட்ட நாள் 15 June 2023.
- ↑ HJane Tan, Ng Sii Hooi (24 July 2013). "Adopt Tamil schools, political leaders urged". The Star (Malaysia). http://www.thestar.com.my/news/nation/2013/07/24/adopt-tamil-schools-political-leaders-urged/. பார்த்த நாள்: 21 July 2011.