நிபோங் திபால் மக்களவைத் தொகுதி
நிபோங் திபால் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Nibong Tebal; ஆங்கிலம்: Nibong Tebal Federal Constituency; சீனம்: 高渊国会议席) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், தென் செபராங் பிறை மாவட்டத்தில் (Central Seberang Perai District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P047) ஆகும்.[3]
நிபோங் திபால் (P047) மலேசிய மக்களவைத் தொகுதி பினாங்கு | |
---|---|
Nibong Tebal (P047) Federal Constituency in Penang | |
பினாங்கு மாநிலத்தில் நிபோங் திபால் மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | தென் செபராங் பிறை மாவட்டம்; பினாங்கு |
வாக்காளர் தொகுதி | நிபோங் திபால் தொகுதி |
முக்கிய நகரங்கள் | நிபோங் திபால் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | 2022 |
மக்களவை உறுப்பினர் | பட்லினா சிடேக் (Fadhlina Sidek) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 100,062[1] |
தொகுதி பரப்பளவு | 178 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
நிபோங் திபால் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து நிபோங் திபால் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), நிபோங் திபால் மக்களவைத் தொகுதி 25 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4]
பொது
தொகுநிபோங் திபால் நகரம்
தொகுநிபோங் திபால் (Nibong Tebal) நகரம், பினாங்கு மாநிலத்தில் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்றுவரும் ஒரு நகரமாக அறியப்படுகிறது. இந்த நகரத்திற்கு அருகாமையில் பத்து காவான் நகரம்; பேராக் மாநிலத்தின் பாரிட் புந்தார் நகரம்; கெடா மாநிலத்தின் செர்டாங் நகரம் ஆகிய நகரங்கள் உள்ளன.
இந்த நகரம் ஓர் அமைதியான நகரம். இந்த நகரத்தைச் சுற்றிலும் செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. முன்பு இந்தத் தோட்டங்கள் ரப்பர் தோட்டங்களாக இருந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் அந்தத் தோட்டங்களில் வேலை செய்தனர்.
நிபோங் திபால் தமிழர்கள்
தொகுநில மேம்பாட்டுத் திட்டங்களின் காரணமாக, அங்கு வேலை செய்த தமிழர்கள், வேறு இடங்களுக்கு மாறிச் சென்று விட்டனர். தோட்டப்புறங்களில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறையினர், உயர்க்கல்வி பெற்றதும் நகர்ப் புறங்களுக்கு மாறிச் சென்றனர். சிலர் நிபோங் திபால் நகருக்கு அருகாமையில் உள்ள தொழில்பேட்டைகளில் வேலை செய்கின்றனர். இங்கு அதிகமாகச் சீனர்கள் வாழ்கின்றனர்.
நிபோங் திபால் நகரின் அருகில் கிரியான் ஆறு செல்கிறது. இந்த ஆறு மலாக்கா நீரிணையில் கலக்கிறது. ஆற்றின் முகத்துவாரத்தில் பல மீன்பிடி கிராமங்கள் உள்ளன. அங்கு பெரும்பாலும் மலாய்க்காரர்களும் சீனர்களும் வாழ்கின்றனர்.
நிபோங் திபால் வாக்குச் சாவடிகள்
தொகு2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), நிபோங் திபால் மக்களவைத் தொகுதி 25 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[5]
சட்டமன்ற தொகுதி | தேர்தல் வட்டாரம் | குறியீடு | வாக்குச் சாவடி |
---|---|---|---|
ஜாவி (Jawi) (N19) |
Changkat | 047/19/01 | SK Keledang Jaya |
Perkampungan Jawi | 047/19/02 | SJK (C) Kampung Jawi | |
Taman Desa Jawi | 047/19/03 |
| |
Ladang Caledonia | 047/19/04 | SJK (C) Pai Teik | |
Ladang Byram | 047/19/05 | SJK (T) Ldg Byram | |
Ladang Victoria | 047/19/06 | SMK Seri Nibong | |
Taman Sentosa | 047/19/07 | SK Nibong Tebal | |
Nibong Tebal | 047/19/08 | SMK Methodist | |
Jalan Bukit Panchor | 047/19/09 | Kolej Vokesional Nibong Tebal | |
Taman Helang Jaya | 047/19/10 | SMK Tunku Abdul Rahman | |
சுங்கை பாக்காப் (Sungai Bakap) (N20) |
Padang Lalang | 047/20/01 | SMK Tasek |
Puteri Gunong | 047/20/02 |
| |
Tasek Junjong | 047/20/03 | SK Seri Tasek | |
Sungai Duri | 047/20/04 | SK Sungai Duri | |
Sungai Bakap | 047/20/05 |
| |
Ladang Sempah | 047/20/06 | SK Jawi | |
Sungai Kechil | 047/20/07 | SK Sungai Kechil | |
Kampung Besar | 047/20/08 | SK Sungai Kechil | |
சுங்கை அச்சே (Sungai Acheh) (N21) |
Sungai Udang | 047/21/01 | Madrasah Al-Irsyadiah Sungai Acheh |
Sungai Setar | 047/21/02 | SK Sungai Setar | |
Sungai Acheh | 047/21/03 | SK Sungai Acheh | |
Sungai Bakau | 047/21/04 | SK Sungai Bakau | |
Tanjong Berembang | 047/21/05 | SMK Sungai Acheh | |
Permatang To' Mahat | 047/21/06 |
| |
Taman Transkrian | 047/21/07 | SMK Saujana Indah |
நிபோங் திபால் மக்களவைத் தொகுதி
தொகுநிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
செபராங் செலாத்தான் (Seberang Selatan) தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
4-ஆவது மக்களவை | 1974–1978 | கோ செங் தெயிக் (Goh Cheng Teik) |
பாரிசான் (கெராக்கான்) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | ||
7-ஆவது மக்களவை | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | டொமினிக் ஜோசப் புதுச்சேரி (Dominic Joseph Puthucheary) | |
9-ஆவது மக்களவை | 1995–1999 | கோ செங் தெயிக் (Goh Cheng Teik) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | கோ கெங் உவாட் (Goh Kheng Huat') |
ஜசெக |
11-ஆவது மக்களவை | 2004–2008 | சைனல் அபிடின் ஒசுமான் (Zainal Abidin Osman) |
பாரிசான் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2010 | தான் தி பெங் (Tan Tee Beng) |
பி.கே.ஆர் |
2010–2013 | சுயேச்சை | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | மன்சூர் ஒசுமான் (Mansor Othman) |
பி.கே.ஆர் |
14-ஆவது மக்களவை | 2018–2020 | பாக்காத்தான் (பி.கே.ஆர்) | |
2020–2022 | பெரிக்காத்தான் (பெர்சத்து) | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | பட்லினா சிடேக் (Fadhlina Sidek) |
பாக்காத்தான் (பி.கே.ஆர்) |
நிபோங் திபால் தேர்தல் முடிவுகள்
தொகுபொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
100,062 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
80,477 | 80.4% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
79,308 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
148 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
1,021 | - |
பெரும்பான்மை (Majority) |
16,293 | 20.55% |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | |
Source: Results of Parliamentary Constituencies of Penang |
நிபோங் திபால் வேட்பாளர் விவரங்கள்
தொகுவேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% | |
---|---|---|---|---|---|
பட்லினா சிடேக் (Fadhlina Sidek) |
பாக்காத்தான் | 42,188 | 53.20% | -3.72 ▼ | |
மன்சூர் ஒசுமான் (Mansor Othman) |
பெரிக்காத்தான் | 25,895 | 32.65% | +32.65 | |
ஆர். எஸ். தனேந்திரன் (Thanenthiran Ramankutty) |
பாரிசான் | 10,660 | 13.44% | -18.05 ▼ | |
கோ கெங் உவாட் (Goh Kheng Huat) |
சுயேச்சை | 565 | 0.71% | +0.71 |
நிபோங் திபால் சட்டமன்ற தொகுதிகள்
தொகுநாடாளுமன்ற தொகுதி | சட்டமன்ற தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
P047 நிபோங் திபால் (Nibong Tebal) |
புக்கிட் தம்பூன் | ||||||
ஜாவி | |||||||
சுங்கை அச்சே | |||||||
சுங்கை பாக்காப் |
நிபோங் திபால் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
தொகு# | சட்டமன்ற தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N19 | ஜாவி (Jawi) |
இங் மூய் லாய் (H’ng Mooi Lye) |
பாக்காத்தான் (ஜசெக) |
N20 | சுங்கை பாக்காப் (Sungai Bakap) |
அமார் பிரிட்பால் அப்துலா (Amar Pritpal Abdullah) |
பாக்காத்தான் (பி.கே.ஆர்) |
N21 | சுங்கை அச்சே (Sungai Acheh) |
காலி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 10. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 16 ஜூன் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11 (5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 16 ஜூன் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)