ஆர். பாலு

ஆர்.பாலு (R. Balu) ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார். 1997இல் இவர், காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் முரளி, கௌசல்யா ஆகிய இருவரும் முன்னனி வேடத்தில் நடித்திருந்தனர். [1]

ஆர். பாலு
பிறப்புபுது தில்லி, இந்தியா
பணிதிரைப்பட இயக்குன Screen writer
செயற்பாட்டுக்
காலம்
1997 - 2003

தொழில்தொகு

இயக்குனர் அகத்தியனின் காதல் கோட்டை (1996) வெளியானதைத் தொடர்ந்து, பாலு, "உன் நினைவாக" என்ற தனது கதையை இயக்குனர் அகத்தியன் திருடியதாகக் கூறினார். பாலுவை சமாதானப்படுத்த, தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் தனது தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். [2] பாலு பின்னர் "காலமெல்லாம் காதல் வாழ்க" (1997) படத்தில் இயக்குநராக அறிமுகமானார். தனது முதல் முயற்சிக்கு பரந்த வரவேற்பைப் பெற்றார்.

"இது போன்ற நகைச்சுவைத் திரைப்படத்தை பார்த்தே வெகுநாளாகிறது என்றும், சராசரிக்கும் மேலான நல்ல இசையையும், வெகு துல்லியமான ஒளிப்பதிவையும் இதில் நாம் காணலாம்" என இந்தோலிங்க்.காம் என்ற வலைத்தளம் விமர்சனம் செய்தது."[3][4] பின்னர், இவர் "செம" என்ற பெயரில் ஒரு படத்திலும், பின்னர் விக்னேஷ் மற்றும் சாலினி இருவரும் நடிக்க "காதல் பிரார்த்தனை" என்ற படத்தையும் அறிவித்தார். ஆனால் இரு படங்களும் உருவாகவில்லை. [5] இவரது முதல் வெற்றிப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர்களுடன் சேர்ந்து "உன்னுடன்" (1998) என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்தது. இருப்பினும், இவர்களின் கூட்டனியில் வெளியான முந்தைய முயற்சியுடன் ஒப்பிடும்போது இந்த படம் குறைந்த அளவே வெற்றி பெற்றது. மேலும் சராசரி விமர்சனங்களையே பெற்றது. [6] [7] 1998 ஆம் ஆண்டில், தயாரிப்பாளர் இராமநாதனுக்காக "நியூ இயர்" என்ற ஒரு இந்தி திரைப்படத்துக்கு கதை எழுதத் தொடங்கினார், ஆனால் தயாரிப்புக் குழுவால் திட்டமிட்டிருந்த அப்போதைய அறிமுகமான அபிஷேக் பச்சன், கஜோல் அல்லது மனிஷா கொய்ராலா ஆகியோரை நடிக்க ஒப்பந்தம் செய்ய முடியாததால் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. [8] [9] [10]

இவரது அடுத்த படம் "அன்பே உன் வசம்" (2003), இதில் புதுமுகங்களான அஸ்வின் மற்றும் ரதி ஆகியோர் நடித்திருந்தனர். இதுவும் தோல்வியையேச் சந்தித்தது. இந்தப் படம் இந்தியா மற்றும் மொரிசியசு முழுவதும் படமாக்கப்பட்டது. மேலும் ஒரே வளாகத்தை அடிப்படையாகக் கொண்ட காதல் கதையாக இருந்தது. [11] 2004 ஆம் ஆண்டில், பாஸ்போர்ட் என்ற தலைப்பில் புதியவர்களைக் கொண்ட ஒரு புதிய திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார். இது கடவுச்சீட்டைப் பெற முயற்சிப்பதில் உள்ளூர் மக்கள் சந்திக்கும் கஷ்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும், படம் ஆரம்பகட்ட முயற்சிக்கு அப்பால் செயல்படத் தவறியது. இறுதியில் வெளியிடப்படவில்லை. [12] [13]

பின்னர் காட்சி தகவல்தொடர்புகள் பற்றிய வகுப்புகளை வழங்கும் விரிவுரையாளராக பணியாற்றினார். அதே நேரத்தில் திரைப்படத் திட்டங்களிலும் தொடர்ந்து பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டில், இவர் நடிகை மோனிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த டேட்டிங் வித் மோனிகா என்ற திரைப்படத்தில் பணிபுரிந்தார். இப்படமும் வெளிவரவில்லை. [14] 2010 ஆம் ஆண்டில் ஆனந்த கண்ணன், மனோச்சித்ரா மற்றும் விவேக் ஆகியோரைக் கொண்ட "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" என்ற மற்றொரு திட்டத்தில் இவர் பணியாற்றி வந்தார். இருப்பினும் இந்த படம் இன்னும் திரையரங்குக்கு வரவில்லை. [15]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பாலு&oldid=3118022" இருந்து மீள்விக்கப்பட்டது