ஆலம்பாளையம்
ஆலாம்பாளையம் (ஆங்கிலம்:Alampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி ஈரோடு மாநகராட்சியின் மேற்கு புறத்தில் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பேரூராட்சியின் வட்டாரத்தில் சேஷசாயி காகித ஆலை நிறுவனமும் [3], காவேரி ரயில் நிலையமும்[4] உள்ளது. இப்பேரூராட்சியின் பெரும்பான்மையான தொழிலாக கருதப்படுவது விவசாயமும், நெசவும் ஆகும்
ஆலாம்பாளையம் | |||||
ஆள்கூறு | |||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | நாமக்கல் | ||||
வட்டம் | திருச்செங்கோடு | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | எஸ். உமா, இ. ஆ. ப | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
20,286 (2011[update]) • 1,966/km2 (5,092/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 10.32 சதுர கிலோமீட்டர்கள் (3.98 sq mi) | ||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | www.townpanchayat.in/aalampalayam |
அமைவிடம்
தொகுஆலம்பாளையம் பேரூராட்சி, திருச்செங்கோடு - ஈரோடு செல்லும் சாலையில், நாமக்கல்லிருந்து 48 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் திருச்செங்கோடு 15 கிமீ; மேற்கில் ஈரோடு 7 கிமீ; வடக்கில் பரமத்தி-வேலூர் 45 கிமீ; தெற்கில் குமாரபாளையம் 15 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு10.32 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி குமாரபாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,785 வீடுகளும், 20,286 மக்கள்தொகையும் கொண்டது. [6]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-12-18. பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
- ↑ https://indiarailinfo.com/arrivals/cauvery-cv/6598
- ↑ "ஆலம்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-04-10. பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
- ↑ Alampalayam Population Census 2011