ஆஸ்திரேலியாவில் அரசியல்
ஆஸ்திரேலியாவில் அரசியல், 1 சனவரி 1901 அன்று பிரித்தானியப் பேரரசின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த ஆஸ்திரேலியாவில் கூட்டமைப்பு உருவானது. எழுதப்பட்ட அரசியலமைப்பின் கீழ் ஒரு அரசியலமைப்பு முடியாட்சியாக செயல்படுகிறது.. இது ஐக்கிய இராச்சியம் போன்று நாடாளுமன்ற முறையில் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு அதிகாரம், ஆத்திரேலியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும், மாநிலங்களுக்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ளது .
தற்போது மூன்றாம் சார்லஸ் ஆஸ்திரேலியா நாட்டிற்கும் மன்னராக உள்ளார். மன்னரின் பிரதிநிதியாக ஆஸ்திரேலியாவின் தலைமை ஆளுநர் செயல்படுகிறார். அதே நேரத்தில் ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் தலைவர் பிரதம அமைச்சர் ஆவார். தற்போதைய பிரதம அமைச்சர் அந்தோனி அல்பானீஸ் ஆவார் .
ஆஸ்திரேலியா உலகின் ஆறாவது பழமையான தொடர்ச்சியான ஜனநாயகம் மற்றும் வாக்களிப்பது கட்டாயமான இரு கட்சி அமைப்பாக பெரும்பாலும் செயல்படுகிறது.[1][2]
ஆஸ்திரேலியாவை நிர்வகிப்பது நாடாளுமன்றம் (பிரதமர் , அமைச்சரவை மற்றும் அரசாங்கத் துறைகள்), நீதித்துறை (ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் மற்றும் மாநில நீதிமன்றங்கள்) மற்றும் மாநில சட்டமன்றங்கள் ஆகும். ஆத்திரேலியப் பிரதிநிதிகள் அவை எனும் கீழவையில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட கட்சி அல்லது கூட்டணியே ஆட்சி அமைக்கிறது.
ஆஸ்திரேலியாவின் கூட்டாட்சி பாராளுமன்றம் (அரசியலமைப்பின் பிரிவு 1ல் வரையறுக்கப்பட்டுள்ளது) பிரதிநிதிகள் சபை (கீழ் சபை) மற்றும் செனட் சபை (மேலவை) என இரண்டு அவைகள் கொண்டது.[3] பிரதிநிதிகள் சபை 151 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதி சுமார் 1,65,000 மக்களைக் கொண்ட ஒரு தனிப்பட்ட தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.[4] செனட் சபை 76 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது: ஆஸ்திரேலியாவின் ஆறு மாகாணங்களிலிருந்து தலா 12 பேர் மற்றும் ஆஸ்திரேலியாவின் உள் பிரதேசங்களான ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசம் மற்றும் ஆத்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்திலிருந்து தலா 2 பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். .நாடாளுமன்றம் இயற்றும் ஒரு சட்டம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதா இல்லையா என்பதை ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் மட்டுமே பரிசீலிக்க முடியும். [5][6]
ஆஸ்திரேலிய அரசாங்க அமைப்பு, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ( கூட்டாட்சி , எழுதப்பட்ட அரசியலமைப்பு , வலுவான இருசபை) ஆகியவற்றின் அரசியல் அமைப்புகளிலிருந்து பெறப்பட்ட கூறுகளை தனித்துவமான உள்ளூர் அம்சங்களுடன் ஒருங்கிணைக்கிறது.
ஆஸ்திரேலியா அரசியலமைப்பின் மூன்று கிளைகள்
தொகு- ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்
- மாநிலங்களின் நாடாளுமன்றம்
- ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம்
கூட்டாட்சி முறை
தொகுஆஸ்திரேலியா ஒரு கூட்டாச்சி முறையில் இயங்கும் நாடாகும். இது மூன்று நிலை அரசாங்கங்களுக்கு வெவ்வேறு அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளைக் கொண்டுள்ளது: கூட்டாட்சி நாடாளுமன்றம், மாநிலங்களின் சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகும். .
மாநிலங்களின் மாறுபட்ட மக்கள் தொகையைப் பிரதிபலிக்கும் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை (கீழவை) உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். . எனவே நாடாளுமன்றத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் 48 உறுப்பினர்களும்; குறைந்த மக்கள் தொகை கொண்ட டாஸ்மேனியாவில் ஐந்து உறுப்பினர்களும் உள்ளனர். ஆனால் மாநிலங்களுக்கிடையேயான சமத்துவத்தின் அடிப்படையில் செனட் (மேலவை) சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மக்கள் தொகையைப் பொருட்படுத்தாமல் அனைத்து மாநிலங்களும் தலா 12 செனட்டர்களைத் தேர்ந்தெடுக்கின்றது. ஆனால் ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசம் மற்றும் வடக்கு பிரதேசத்திலிருந்து மேலவைக்கு (செனட் சபை) ஒவ்வொன்றும் இரண்டு உறுப்பினர்களை மட்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா கூட்டாட்சி அரசு பணத்தாள் அச்சடித்தல், மத்திய வங்கி, வெளியுறவுத்துறை, மாநிலங்களுக்கு இடையே வர்த்தகம், பாதுகாப்புத் துறை போன்ற சில விஷயங்களில் மட்டுமே சட்டம் இயற்றலாம். சுகாதாரம் மற்றும் கல்விக்கான பொறுப்பு மாநில சட்டமனறங்களுக்கு மட்டுமே உள்ளது. நிர்வாகத்தின் மூன்றாவது நிலையாக உள்ள உள்ளாட்சி மன்றங்கள், நகராட்சி அமைப்பில் உள்ளது .
ஆஸ்திரேலியாவின் அரசியல் அமைப்பு
தொகுஆஸ்திரேலியா அரசியலமைப்பு முடியாட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறையில் உள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 1ன் படி, ஒரு ஜனநாயக நாடாளுமன்றத்தை உருவாக்குகிறது, இது செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என இரண்டு அவைகள் கொண்டது. . அரசியலமைப்பின் பிரிவு 51, ஆஸ்திரேலிய கூட்டாசி அரசாங்கத்திற்கும், 6 மாநில அரசாங்கங்களுக்கு சட்டமியற்றும் அதிகாரங்களை வழங்குகிறது மேலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த அரசியலமைப்பு உள்ளது. இதனால் ஆஸ்திரேலியா 7 சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றங்களைக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம், ஆஸ்திரேலியா கூட்டாட்சி அரசாங்கம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே எழும் வழக்குகளை தீர்த்து வைக்கிறது.
ஐக்கிய ஐராச்சியத்தின் மன்னர் ஆஸ்திரேலியாவின் குறியீட்டுத் தலைவராக உள்ளார். ஆஸ்திரேலியா தலைமை ஆளுநரை மன்னர் நியமிக்கிறார். அரசியலமைப்பு ஜனநாயகமாக, பங்கு அரசியலமைப்பு மற்றும் சடங்கு கடமைகளுக்கு மட்டுமே. தலைமை ஆளுநர் மன்னரின் பிரதிநிதியாக இருந்தாலும், தலைமை ஆளுநர் பெயரில் பல்வேறு அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தினாலும், மற்ற அதிகாரங்களை அவர்கள் சுதந்திரமாக தங்கள் சொந்த உரிமையில் பயன்படுத்துகின்றனர். தலைமை ஆளுநர் ஆஸ்திரேலியாவை சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஆஸ்திரேலியாவில் முடியாட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆஸ்திரேலிய குடியரசு இயக்கம் செயல்படுகிறது.1999ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பில் , ஆஸ்திரேலிய மக்கள் அரசியலமைப்பை மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு வாக்களித்தனர். இந்த முன்மொழிவு அரசியலமைப்பில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் இராணியை பற்றிய குறிப்புகளை நீக்கி , தலைமை ஆளுநருக்குப் பதிலாக பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட குடியரசுத் தலைவரை நியமிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால் நாடாளுமன்றத்தில் இந்த பரிந்துரை தோற்கடிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா நாடாளுமன்றம்
தொகுஆஸ்திரேலிய நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை ஒத்தது. ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் செனட் சபை (மேலவை) மற்றும் ஆத்திரேலியப் பிரதிநிதிகள் அவை (கீழவை) எனும் ஈரவை முறைமை கொண்டது. செனட் சபை 76 உறுப்பினர்களையும்; பிரதிநிதிகள் சபை 151 உறுப்பினர்களையும் கொண்டது. ஆத்திரேலியக் கூட்டமைப்பு அரசாங்கம் கொண்டது.
மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
தொகுஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 6 பெரிய மாநிலங்களான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மோனியா மட்டுமே தனி நாடாளுமன்றங்களையும், அரசியலமைப்பையும் கொண்டுள்ளது.[7]
கூட்டமைப்பு அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே ஏற்படும் தாவாக்களையும், மாநிலங்களுக்கிடையே ஏற்படும் தாவக்களையும், பிரதேசங்கள் தொடர்பான தாவாக்களையும் ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் தீர்த்து வைக்கும்.[8]மேலும் இந்த 6 மாநிலங்களுக்கு மட்டும் ஆளுநர் உள்ளார். மீதமுள்ள ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசம் மற்றும் வட மண்டலம் ஆஸ்திரேலியா அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில முதல் அமைச்சர் அரசாங்கத்தின் தலைவராக இருப்பார். ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த உயர் நீதிமன்றமங்கள் கொண்டுள்ளது. மேல்முறையீடு செய்ய ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.
ஆஸ்திரேலியாவில் உள்ளாட்சி அரசாங்கத்தின் அதிகாரம் குறைந்த அளவே ஆகும். உள்ளூர் அரசாங்கங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு உட்பட்டவை. உள்ளாட்சி அமைப்புகள் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்
தொகுநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டாட்சி நாடாளுமன்றம், மாநில நாடளுமன்றங்கள் மற்றும் உள்ளாட்சிகளுக்கு தேர்தல்கள் நடைபெறுகிறது. (தாஸ்மேனியாவைத் தவிர, தேர்தல் தேதியை பிரதமர் தீர்மானிக்கிறார்). மக்கள்தொகை அடிப்படையில் மிகப்பெரிய மாநிலமான நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா அரசியல் வளமை மிக்க மாநிலங்களாகக் கருதப்படுகிறது. மாறாக மேற்கு ஆஸ்திரேலியா, அரசியல்ரீதியாக மிகவும் கொந்தளிப்பானதாக உள்ளது. இது சமீபகாலமாக நாட்டின் மிகவும் இடதுசாரி சாய்வு கொண்ட மாநிலங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியா பொதுநலவாய இராச்சியங்களில் ஒன்றாக உள்ளது.
அரசியல் கட்சிகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hardgrave, Gary (2 March 2015). "Commonwealth Day 2015". Department of Infrastructure and Regional Development, Government of Australia. பார்க்கப்பட்ட நாள் 1 September 2015.
- ↑ "Is voting compulsory?". Voting within Australia – Frequently Asked Questions. Australian Electoral Commission. 2015. பார்க்கப்பட்ட நாள் 1 September 2015.
- ↑ "Bicameral representation" (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). Parliament of Australia. Archived from the original on 2023-03-17. பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.
- ↑ "Members" (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). Parliament of Australia. Archived from the original on 2023-03-09. பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.
- ↑ Australian Constitution (Cth) s 64
- ↑ Williams, George; Brennan, Sean; Lynch, Andrew (2018). Blackshield and Williams Australian constitutional law and theory: commentary and materials (7th ed.). Sydney: The Federation Press. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-76002-151-1.
Under the Westminster system of government which Australia has inherited from the United Kingdom ... there is no similar strict separation between legislative and executive power. On the contrary, the executive is integrated into the legislature by the requirement that the ministers responsible for the departments of government must be Members of Parliament accountable to it through such mechanisms as question time.
- ↑ "Three levels of government: governing Australia". Parliamentary Education Office (in ஆங்கிலம்). 19 July 2022. Archived from the original on 7 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2023-07-08.
- ↑ "Arbitration and international arbitration" (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). Federal Court of Australia. 2022-08-16. Archived from the original on 26 June 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-07-08.
பொதுக் குறிப்புகள்
தொகு- "Parliamentary Education Office". Commonwealth of Australia.
- Elder, D.R.; Fowler, P.E., eds. (2018). House of Representatives Practice (in ஆங்கிலம்) (7th ed.). Canberra: Department of the House of Representatives. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74366-654-8.
- Pyke, John (2020). Government powers under a Federal Constitution: Constitutional Law in Australia (in ஆங்கிலம்) (2nd ed.). Pyrmont, NSW: Lawbook Co (Thomas Reuters). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-455-24415-0. இணையக் கணினி நூலக மைய எண் 1140000411.
மேலும் படிக்க
தொகு- Perche, Diana; et al., eds. (2024-01-31). Australian Politics and Policy: 2024. Sydney University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.30722/sup.9781743329542. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74332-954-2.
- Robert Corcoran and Jackie Dickenson (2010), A Dictionary of Australian Politics, Allen and Unwin, Crows Nest, NSW
- Department of the Senate, 'Electing Australia's Senators', Senate Briefs No. 1, 2006, retrieved July 2007
- Rodney Smith (2001), Australian Political Culture, Longman, Frenchs Forest NSW