இசுகைல்லா
இசுகைல்லா ( Scylla ) என்பது கிரேக்க புராணங்களில் தோன்றும் ஒரு அரக்கியாவாள். ஒரு குறுகிய நீர் கால்வாயின் ஒரு பக்கத்தில், தனது தோழியான சாரிப்டிசு என்பவளுடன் வாழ்கிறாள். கால்வாயின் இரண்டு பக்கங்களும் ஒன்றுக்கொன்று அம்புக்குறி போல இருக்கும். சாரிப்டிசை சந்திப்பதைத் தவிர்க்க முயற்சிக்கும் மாலுமிகள் இசுகைல்லா இருக்கும் வழியில் ஆபத்தான முறையில் கடந்து செல்வார்கள்.
இசுகைல்லா முதன்முதலில் ஓமரின் ஒடிசியில் தோன்றினாள். அங்கு ஒடிசியசு மற்றும் அவரது குழுவினர் இவளையும் சாரிப்டிசையும் தங்கள் பயணங்களில் சந்திக்கின்றனர். பிற்கால புராணம் ஒரு அழகான கன்னி போன்ற தோற்றக் கதையை இவளுக்கு வழங்குகிறது. பின்னர் இவள் ஒரு அரக்கியாக மாறுகிறாள். [1]
வேர்ஜிலின் இதிகாசமான அனீட் என்ற நூலில் [2] தெற்கு இத்தாலியின் ஒரு பகுதியான கலபிரியா மற்றும் சிசிலிக்கு இடையே உள்ள மெசினா காய்வாயுடன் இசுகைல்லா வசிக்கும் கால்வாயை தொடர்புபடுத்துகிறது. கலபிரியாவில் உள்ள கடலோர நகரமான இசுகில்லா, இசுகைல்லாவின் புராண உருவத்திலிருந்து அதன் பெயரைப் பெற்றது. மேலும் இது கன்னியின் வீடு என்று கூறப்படுகிறது.
“இசுகைல்லா மற்றும் சாரிப்டிசு இடையே” என்ற பழமொழியானது இதேபோன்ற இரண்டு ஆபத்தான சூழ்நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் என்று பொருள்படும்.
பெற்றோர்
தொகுஇசுகைல்லாவின் பெற்றோர் பற்றிய தகவல்கள் ஆசிரியரைப் பொறுத்து மாறுபடுகிறது. [3] ஓமர், ஆவிட், பிப்லியோதோகோ, இலக்கண அறிஞர் சர்வியஸ் போன்ற அனைவரும் இசுகைல்லாவின் தாய் என கிரேட்டீசு என்பவரைக் குறிப்பிடுகின்றனர். [4] ஓமர் அல்லது ஆவிட் இருவரும் இவளது தந்தையைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆனால் பிப்லியோதோகோ இவளது தந்தையாக திரியனசு (அநேகமாக திரைட்டனின் சிதைவு) அல்லது போர்கசு ( போர்கிசி) என்பவரைக் கூறுகிறார். [5] இதேபோல், பிளாட்டோ , ஒருவேளை பிப்லியோதோகோவைப் பின்பற்றி, இவளது தந்தையை தைரெனசு அல்லது போர்கசு என்று கூறுகிறார். [6] அதே சமயம் ஓமர் தனது ஒடிசியில் ( 12.85 ) திரைட்டன் அல்லது போசைடன் மற்றும் கிரேடீசை பெற்றோராகக் குறிப்பிடுகிறார். [7]
மற்ற ஆசிரியர்கள் எகெகேட் என்பவரை இசுகைல்லாவின் தாயாகக் கூருகின்றனர். எசியோடு , மெகலாய் எகோய் போன்றவர்கள் இசுகைல்லாவின் பெற்றோராக கேகேட் மற்றும் அப்பல்லோவைக் குறிப்பிடுகிறார்கள் [8] ஸ்கைலாவின் பெற்றோர் ஹெகேட் மற்றும் ஃபோர்கிஸ் என்று அகுசிலாஸ் கூறுகிறார் (அப்படியே ஸ்கொல். ஒடிஸி 12.85). [9]
ஜான் தசெட்சசு [10] மற்றும் அனீட் பற்றிய மார்கசு சர்வியசின் வர்ணனையின்படி, [11] இசுகைலா ஒரு அழகான ஆவியாகும். இவள் பொசைடனால் உரிமை கோரப்பட்டாள். ஆனால் பொறாமை கொண்ட கடல் ராணி நெரீட் ஆம்பிட்ரைட், இசுகைலாவின் கால்வாயில் நஞ்சு கலந்து அவளை ஒரு பயங்கரமான அரக்கியாக மாற்றினாள்..
இதேபோன்ற கதையை இலத்தீன் எழுத்தாளரான ஐஜினசு தனது பேபுலே என்ற கதையில் குறிப்பிடுகிறார். [12] அவரது கூற்றுப்படி இசுகைலா கிளாக்கசு என்பவனை நேசித்தாள். ஆனால் கிளாக்கசு மந்திரவாதியான சிர்சே என்பவளை விரும்பினான். இசுகைலா கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, பொறாமை கொண்ட சிர்சே கடல் நீரில் நஞ்சை கலந்து விடுகிறாள். இது இசுகைலாவை ஆறு நாய் வடிவங்களுடன் ஒரு பயங்கரமான அரக்கியாக மாற்றியது. இந்த வடிவத்தில், அவள் ஒடிசியசின் கப்பலைத் தாக்கி, அவனது தோழர்களைக் கொள்ளையடிக்கிறாள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Ogden (2013).
- ↑ Virgil (2007). Aeneid. Oxford University Press. pp. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-283206-1.
- ↑ For discussions of the parentage of Scylla, see Fowler, p. 32, Ogden, pp. 134–135; Gantz, pp. 731–732; and Frazer's note 3 to Apollodorus, E7.20.
- ↑ ஓமர், ஒடிசி12.124–125; ஆவிட், Metamorphoses 13.749; Apollodorus, E7.20; Servius on வேர்ஜில் Aeneid 3.420; schol. on பிளேட்டோ, குடியரசு 9.588c.
- ↑ Ogden, p. 135; Gantz, p. 731; Frazer's note 3 to Apollodorus, E7.20.
- ↑ Fowler, p. 32
- ↑ Eustathius on Homer, p. 1714
- ↑ Hesiod fr. 200 Most [= fr. 262 MW] (Most, pp. 310, 311).
- ↑ Acusilaus. fr. 42 Fowler (Fowler, p. 32).
- ↑ John Tzetzes, On Lycophron 45
- ↑ Servius on Aeneid III. 420.
- ↑ Hyginus, Fabulae 199.
பிற ஆதாரங்கள்
தொகு- Apollodorus, Apollodorus, The Library, with an English Translation by Sir James George Frazer, F.B.A., F.R.S. in 2 Volumes. Cambridge, MA, Harvard University Press; London, William Heinemann Ltd. 1921. Online version at the Perseus Digital Library.
- Apollonius Rhodius (1912), The Argonautica, translated by Robert Cooper Seaton (trans 1912 ed.), W. Heinemann – via Internet Archive
- Campbell, David A., Greek Lyric III: Stesichorus, Ibycus, Simonides, and Others, Harvard University Press, 1991. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0674995253.
- Fowler, R. L., Early Greek Mythography: Volume 2: Commentary, Oxford University Press, 2013. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0198147411.
- Gantz, Timothy, Early Greek Myth: A Guide to Literary and Artistic Sources, Johns Hopkins University Press, 1996, Two volumes: பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-5360-9 (Vol. 1), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-5362-3 (Vol. 2).
- Hanfmann, George M. A., "The Scylla of Corvey and Her Ancestors" Dumbarton Oaks Papers 41 "Studies on Art and Archeology in Honor of Ernst Kitzinger on His Seventy-Fifth Birthday" (1987), pp. 249–260.
- Hyginus, Gaius Julius, Fabulae, in The Myths of Hyginus, edited and translated by Mary A. Grant, Lawrence: University of Kansas Press, 1960. Online version at ToposText.
- Most, G.W., Hesiod: The Shield, Catalogue of Women, Other Fragments, Loeb Classical Library, No. 503, Cambridge, Massachusetts, Harvard University Press, 2007, 2018. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-99721-9. Online version at Harvard University Press.
- Ogden, Daniel (2013). Drakon: Dragon Myth and Serpent Cult in the Greek and Roman Worlds. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199557325.
- Stesichorus, in Greek Lyric, Volume III: Stesichorus, Ibycus, Simonides, and Others. Edited and translated by David A. Campbell. Loeb Classical Library 476. Cambridge, MA: Harvard University Press, 1991.
- வேர்ஜில், Aeneid. Translated by Frederick Ahl: Oxford University Press, 2007.
வெளி இணைப்புகள்
தொகு- "Skylla". Theoi Project. – references in classical literature and ancient art.
- "Images of Scylla on Classical artefacts (Archive.org link)". Archived from the original on 2011-09-28.
- "Scylla and Charybdis". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 24. (1911). Cambridge University Press.