கணிதத்தில், n-ஆவது இசை எண் (harmonic number) என்பது, முதல் n இயல் எண்களின் தலைகீழிகளின் கூட்டுத்தொகையாகும்:

இசை எண் இன் அணுகு எல்லை (நீலக்கோடு, -ஆய்லரின் மாறிலி); (சிவப்புக்கோடு).

n = 1, இலிருந்து தொடங்கும் இசை எண்கள் தொடர்வரிசை::

n-ஆவது இசை எண்ணானது, n நேர்ம முழுஎண்களின் இசைச் சராசரியின் தலைகீழியின் n மடங்காக இருக்கும்.

பழங்காலம் முதற்கொண்டு இசை எண்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன; எண் கோட்பாட்டின் பல பிரிவுகளில் இசை எண்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ரீமன் இசீட்டா சார்பியத்தோடு நெருங்கிய தொடர்புள்ளவை. மேலும், பல சிறப்புச் சார்புகளின் கோவைவைகளில் இடம்பெற்றுள்ளன.

இசை எண்கள் தோராயமாக, இயல் மடக்கைச் சார்பாக உள்ளன.[1]:143 இதனால், இசைத் தொடரானது எல்லையின்றி மிகப்பெரியதாக, ஆனால் மெதுவாக அதிகரிக்கிறது.1737 இல் ஆய்லர், இசைத் தொடரின் விரிதன்மைப் பயன்படுத்தி, பகாஎண்கள் முடிவற்றவை என்பதற்கு ஒரு புது நிறுவலை அளித்தார். ஆய்லரின் நிறுவல் 1859 இல் ரீமானால் சிக்கலெண் தளத்திற்கும் நீட்டிக்கப்பட்டது. இதுவே பகா எண்களின் பரவல் குறித்த ரீமான் கருதுகோளுக்கு வழியமைத்தது.

ஐத் தவிர வேறெந்த இசையெண்ணும் ஒரு முழு எண் அல்ல என்ற முடிவை "பெட்ரான்டின் எடுகோள்" தருகிறது[2]

இசை எண்களைக் கொண்டுள்ள முற்றொருமைகள்

தொகு

இசை எண்களின் மீள்வரு தொடர்பு:  

இசை எண்களுக்கும் இசுடர்லிங் சுழல் எண்ணுக்குமுள்ள தொடர்பு  

இசை எண்கள் நிறைவுசெய்யும் முற்றொருமைகள்:  

 

இவ்விரண்டும் ஒத்துள்ள தொகையீட்டு முடிவுகள்:  

 

π உடனான முற்றொருமைகள்

தொகு

இசை எண்களையும் π இன் அடுக்குகளையும் கொண்ட பல முடிவுறாக் கூட்டுத்தொகைகள் உள்ளன:[3]  

கணக்கீடு

தொகு
H_n, க்கான ஆய்லர் தொகையீட்டு வடிவம்:[4] 

  (முற்றொருமை: )

x = 1 − u எனப் பதிலிட:  

 
இசை எண்களுக்கும் இயல் மடக்கைக்குமுள்ள தொடர்பை விளக்கும் வரைபடம். Hn ஐ ரீமான் கூட்டுத்தொகையாகக் கொள்ளலாம்:  

n ஆவது இசை எண் கிட்டத்தட்ட n இன் இயல் மடக்கையளவு பெரியதாக இருக்குமென்பதால் மேலுள்ள கூட்டுத்தொகையின் மதிப்பு   என்ற தொகையீட்டுக்குச் சமமாக இருக்கு; இத்தொகையீட்டின் மதிப்பு ln n ஆகும்.

எனவே, Hn − ln n என்ற தொடர்வரிசை கீழுள்ளவாறான எல்லைக்கு ஒருபோக்காகக் குறையும்:   இதிலுள்ள γ ≈ 0.5772156649 என்பது ஆய்லரின் மாறிலி.

  இதிலுள்ள Bk என்பவை பெர்னோலி எண்கள்..

பிறப்பிக்கும் சார்புகள்

தொகு

இசை எண்களுக்கான பிறப்பாக்கி:

  (ln(z) - இயல் மடக்கை).
அடுக்கப் பிறப்பிக்கும் சார்பு:
  (Ein(z) என்பது அடுக்கத் தொகையீடு).

அடுக்கத் தொகையீட்டைப் பின்வருமாறும் எழுதலாம்:

  ( Γ(0, z) என்பது முழுமையற்ற காமா சார்பு).

வகுபடும்தன்மை

தொகு

  ஐத் தவிர வேறெந்த இசையெண்ணும் ஒரு முழு எண் அல்ல.[5] [6]

  முழுவெண் அல்ல என்பதை நிரூபிக்க,   என்ற 1 முதல்  . வரையிலமைந்த மிகப்பெரிய இரண்டின் அடுக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்; 1 முதல்   எண்களின் மீச்சிறு பொது மடங்கு   எனில்,   ஐ சம பகுதிகளைக் கொண்ட பின்னங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாம்:

  இப்பின்னங்களின் தொகுதிகளில்  , என்ற ஒன்றுமட்டுமே ஒற்றைப்படை எண்ணாகவும் மற்றவையெல்லாம் இரட்டைப்படை எண்ணாகவும் இருக்கும். மேலும்   எனில்,   என்பதே இரட்டைப்படையாக இருக்கும். எனவே இப்பின்னங்கள் அனைத்தும் ஒற்றைப்படைத் தொகுதிகளையும் இரட்டைப்படைப் பகுதிகளையும் கொண்டிருக்கும். எனவே   முழுஎண்ணாக இருக்காது.[5]

மேலும் வலுவாக, தொடர்ந்த முழுஎண்களைக்கொண்ட எந்தவொரு தொடர்வரிசையிலும், அதன் மற்றெந்த உறுப்புகளையும் விடப் பெரிய இரண்டின் அடுக்கால் வகுபடக்கூடிய தனித்ததொரு உறுப்பு இருக்கும். மேற்கண்ட விதத்திலேயே விவாதிக்க, எந்தவிரு இசையெண்களின் வித்தியாசமும் ஒரு முழுஎண்ணாக இருக்காது என்பதை அறியலாம்.[6]

இசையெண்கள் முழுஎண்களாக இருக்காது என்ற கூற்றை நிறுவும் மற்றொரு நிறுவல்,   பின்னத்தின் பகுதியானது   ஐ விடப் பெரிய பகா எண்களால் வகுபடும் என்பதையும், இப்பகா எண்களின் கணம் வெற்றுக்கணமாக இருக்காதென்பதற்கு பெர்ட்ரான்டின் எடுகோளையும் பயன்படுத்துகிறது. இந்நிறுவல் முறையானது  ,  ,   ஆகியவற்றைத் தவிர வேறெந்த இசையெண்ணும் முடிவுறு தசமமாக இருக்காது என்பதை வலுவாகக் காட்டுகிறது.[5] "ஒவ்வொரு பகாஎண்ணும் இசை எண்களின் முடிவுறு கண உறுப்புகளின் தொகுதிகளை மட்டுமே வகுக்கின்றன" என்ற கூற்று அனுமான நிலையில் உள்ளது; நிறுவப்படவில்லை.[7]

குறிப்புகள்

தொகு
  1. John H., Conway; Richard K., Guy (1995). The book of numbers. Copernicus.
  2. Graham, Ronald L.; Knuth, Donald E.; Patashnik, Oren (1994). Concrete Mathematics. Addison-Wesley.
  3. Sondow, Jonathan and Weisstein, Eric W. "Harmonic Number." From MathWorld--A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/HarmonicNumber.html
  4. Sandifer, C. Edward (2007), How Euler Did It, MAA Spectrum, Mathematical Association of America, p. 206, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780883855638.
  5. 5.0 5.1 5.2 Havil, Julian (2003). "Chapter 2: The harmonic series". Gamma: Exploring Euler's Constant. Princeton University Press. pp. 21–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-14133-6.
  6. 6.0 6.1 Thomas J. Osler (November 2012). "96.53 Partial sums of series that cannot be an integer". The Mathematical Gazette 96 (537): 515–519. doi:10.1017/S0025557200005167.  See in particular Theorem 1, p. 516.
  7. Sanna, Carlo (2016). "On the  -adic valuation of harmonic numbers". Journal of Number Theory 166: 41–46. doi:10.1016/j.jnt.2016.02.020. 

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசை_எண்&oldid=4007883" இலிருந்து மீள்விக்கப்பட்டது