இடிமுழிக்கல்

கேரளத்தின் மலப்புறம் மாவட்ட சிற்றூர்

இடிமுழிக்கல் அல்லது செலம்பிரா (Idimuzhikkal or Chelembra) என்பது இந்தியாவின் கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். செலம்பிரா ஊராட்சியின் தலைமையகமாக இடிமுழிக்கல் உள்ளது.

செலம்பிரா
கணக்கெடுப்பு ஊர்
பள்ளியும், அஞ்சலகமும்
பள்ளியும், அஞ்சலகமும்
ஆள்கூறுகள்: 11°09′07″N 75°53′21″E / 11.1519500°N 75.889290°E / 11.1519500; 75.889290
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
அரசு
 • நிர்வாகம்ஊராட்சி
மக்கள்தொகை
 (2016)
 • மொத்தம்1,20,000+
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
673634
தொலைபேசி குறியீடு0483
வாகனப் பதிவுKL-65
அருகில் உள்ள நகரம்கோழிக்கோடு
பாலின விகிதம்.99 /
எழுத்தறிவு99%
மக்களவைத் தொகுதிமலப்புறம்
உள்ளாட்சி நிருவாகம்வள்ளிக்குன்னு ஊராட்சி
குடிமை முகமைஊராட்சி
அருகில் உள்ள வானூர்தி நிலையம்கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்
இணையதளம்chelembrapanchayath.org
சிவன் கோவில், கோலக்கூத்து
கோலக்கூத்தில் உள்ள கோயில் குளம்

அமைவிடம்

தொகு

இடிமுழிக்கல் ஊர் அதிகாரப்பூர்வமாக மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது. ஆனால் இது கோழிக்கோடு மாவட்டத்தின் ராமநாட்டுகர நகரின் விரிவாக்கமாக கருதப்படுகிறது. இது ஃபெரோக், பள்ளிக்கல், தேஞ்சிப்பாலம், வள்ளிக்குன்னு, கொண்டோட்டி, கடலுண்டி ஆகிய ஊர்களின் எல்லையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 17 இடிமுழிக்கலில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள காக்கஞ்சேரியி ஊரின் குறுக்கே செல்கிறது.

முன்மொழியப்பட்ட வள்ளிக்குன்னு நகராட்சி

தொகு

மொத்த பரப்பளவு: 77.18 கிமீ 2

மொத்த மக்கள் தொகை (1991 மக்கள் தொகை கணக்கெடுப்பு): 108,792

போக்குவரத்து

தொகு

இடிமுழிக்கல் நகரம் ஃபெரோக் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை 66 இடிமுழிக்கல் வழியாக செல்கிறது. இதன் வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை எண்.28 நிலம்பூரில் இருந்து தொடங்கி உதகமண்டலம், மைசூர், பெங்களூர் நெடுஞ்சாலைகள்.12,29 மற்றும் 181 வழியாக இணைக்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் பரப்பனங்காடியில் உள்ளது.

தொழில்

தொகு

இந்த சிற்றூரின் முந்தைய தொழில்களில் ஒன்றாக செலம்பிரா நூற்பாலை இருந்தது. அங்கு பல ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்தனர். தொழிலாளர் அமைதியின்மை காரணமாக 1990 களில் நிறுவனம் மூடப்பட்டது. கக்கஞ்சேரி டெக்னோபார்க் (KINFRA) பின்னர் திறக்கப்பட்டது, இது பல தகவல் தொழில்நுட்பம் மற்றும் உணவு தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

சுற்றுலா ஈர்ப்பு

தொகு

இந்தச் சிற்றூர் இன்னும் அதன் கிராமிய அழகைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இங்கு பல குளங்களும் நெல் வயல்களை இணைக்கும் ஓடைகளும் உள்ளன. இந்த சிற்றூர் ராமநாட்டுக்கரையின் நீலித்தோட்டில் இருந்து உருவாகும் கடலுண்டி ஆற்றின் கிளையாற்றின் கரையில் உள்ளது. கடலுண்டி பறவைகள் சரணாலயமானது கடலுண்டிப்புழா ஆறு அரபிக்கடலில் கலக்கும் இடத்தில் உள்ள தீவுகளில் பரவியுள்ளது. இங்கு ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட உள் நாட்டுப் பறவைகளும், சுமார் 60 வகையான வெளிநாட்டுப் பறவைகளும் வருகின்றன. இப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தொடங்கப்பட்ட சாலை விரிவாக்கப் பணிகள் இந்த நகரத்தின் முகப்பை முற்றிலும் மாற்றியுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடிமுழிக்கல்&oldid=3885164" இலிருந்து மீள்விக்கப்பட்டது