இந்தியாவில் சூரிய ஆற்றல் துறை

சூரிய மின்திறன்
(இந்தியாவின் சூரிய ஆற்றல் துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியாவில் சூரிய ஆற்றல் துறை ஆண்டின் பெரும்பாலான நாட்களில் விழுகின்ற சூரிய கதிர்வீச்சின் உயரிய அளவையும் நெருக்கமான மக்கள்தொகையையும் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. உலகில் உயரளவில் நிலக்கரியால் மின்சாரம் பெறும் நாடுகளில் ஒன்றான இந்தியா கரியமில வளி வெளிப்பாட்டைக் குறைக்கும் வண்ணம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துவதில் முனைப்புக் கொண்டுள்ளது. சூரிய ஆற்றலின் இன்றியமையாமையை அறிந்து இந்திய அரசு சவகர்லால் நேரு தேசிய சூரியாற்றல் திட்டத்தை (JNNSM) வரைந்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டிற்குள் 22,000 மெவா மின்சாரத்தைத் தயாரிக்க இலக்கு மேற்கொண்டுள்ளது. இந்த இலக்கினை அடையவும் தன்முனைவோரை ஊக்குவிக்கவும் நுகர்வுச் செலவினை மின்பிணைப்பு கட்டணத்திற்கு இணையாக்கவும் மானியங்கள் வழங்குகிறது.

சவகர்லால் நேரு தேசிய சூரியாற்றல் திட்டம்

காற்றுத் திறன் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்கும் இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் வெளியிட்டுள்ள இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டவரைவில்[1] 10 கிகாவாட் மின்சாரம், நடுவண் துறைகளால் 4 கிகாவாட்டும் மாநில அமைப்புகளால் 6 கிகாவாட்டும், தயாரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தார் பாலைவனத்தில் 35,000 கிமீ2 பரப்பளவில் 700 கிகாவாட் முதல் 2,100 கிகாவாட் வரையான சூரிய ஆற்றல் மின்சாரம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

2020க்குள் ஆண்டில் ஐஅ$19 பில்லியன் செலவில் 20 கிகாவாட் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.[2] இந்தத் திட்டத்தின்கீழ் அரசு கட்டிடங்களிலும் மருத்துமனை மற்றும் தங்குவிடுதிகளிலும் சூரிய ஆற்றல்வழி கருவிகளும் செயல்முறைகளும் கட்டாயமாக்கப்படுகின்றன.[3] 2013ஆம் ஆண்டில் 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க நவம்பர் 2009இல் திட்டம் இயற்றப்பட்டது.[4]

இறங்குமுகமாய் இருக்கின்ற சூரியத் தகடுகளின் விலையும் ஏறுமுகமாய் இருக்கின்ற மின்பிணைப்பு கட்டணமும் இணைந்து அடுத்த ஐந்தாண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சி வீதத்தை 2011இல் வெளியிடப்பட்டுள்ள ஓர் ஆய்வறிக்கை மதிப்பிடுகிறது. அரசு ஆதரவும் மின் தட்டுப்பாடும்[5] இதனை ஊக்குவிக்கின்றன.

தமிழ்நாட்டில் 300 நாட்கள் உயர்ந்த சூரிய கதிர்வீச்சு (5.6-6.0 கிவாமணி/ச. மீ) கிடைக்கிறது. குறிப்பாக தென்தமிழ்நாடு சூரிய ஆற்றல் தயாரிப்பிற்கு மிகவும் பொருந்திய நிலப்பகுதியாக விளங்குகிறது.[6] தமிழ்நாடு அரசு அக்டோபர் 2012இல் வெளியிட்ட தமிழ்நாடு சூரிய சக்திக் கொள்கை 2012யில் ஆண்டுக்கு 1000 மெகாவாட்டாக மூன்றாண்டுகளில் மூவாயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிப்பு மற்றும் உள்நாட்டிலேயே சூரியாற்றல் கருவிகளை உருவாக்கிடும் வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கையை முன்மொழிந்துள்ளது.[6][7]

நிறுவப்பட்ட திறனளவு

தொகு
 
இந்தியாவில் உலகளாவிய கிடைமட்ட கதிர்வீச்சு

2007 நிலவரப்படி, மொத்த மின்சாரத் தேவையில் 1%க்கும் குறைவாகவே சூரிய ஆற்றலால் பெறப்படுகிறது.[8] திசம்பர் 2010இல் மின் பிணையத்தில் (grid) இணைக்கப்பட்ட அளவு 10 மெகாவாட்டாக இருந்தது. இருப்பினும் 1,700 முதல் 1,900 வரையான திறனளவைக் கொண்டுள்ள இந்தியா சூரிய ஆற்றல் பயன்பாட்டில் முன்னணியில் உள்ளது[9] 2010இல் 25.1 மெகாவாட்டும் 2011இல் 468.3 மெகாவாட்டும் கூட்டப்பட்டன.[10] சூலை 2012இல் பிணையத்துடன் இணைக்கப்பட்ட சூரிய மின்கலம்|சூரிய மின்கலம் மூலம் பெறப்பட்ட திறனவு 1040.67 மெவாட்டாக உயர்ந்தது,[11] 2017க்குள் கூடுதலாக 10,000 மெகாவாட்டாக உயர்த்தவும் 2020இல் மொத்த நிறுவப்பட்ட அளவாக 20,000 மெகாவாட்டாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.[12]

இந்தியாவின் மிகப்பெரும் மின்கல (PV) மின் நிலையங்கள்
மின்நிலையத்தின் பெயர் உயர்ந்த நேர்மின்னோட்ட ஆற்றல்
(மெ.வா)
கி.வா-மணி
/ஆண்டு[13]
திறனளவு
காரணி
திறக்கப்பட்ட நாள்
சரண்கா சூரியப் பூங்கா - சரண்கா சிற்றூர், பதான் மாவட்டம், குசராத்[14]   214 ஏப்ரல் 2012
மித்தாப்பூர் சூரிய மின்நிலையம் - மித்தாப்பூர், குசராத் (டாடா பவர்)[15]   25 25 சனவரி 2012
வா சூரிய மின்நிலையம் - சுரேந்திரநகர், குசராத் (மாதவ் பவர்)[16]   10 திசம்பர் 2011
திருபாய் அம்பானி சூரியப் பூங்கா[17]   40 ஏப்ரல் 2012
பிட்டா சூரிய மின்நிலையம் - பிட்டா, கட்சு மாவட்டம், குசராத் (அதானி பவர்)[18]   40 சனவரி 2012
மகிந்திரா & மகிந்தரா சூரிய நிலையம், ஜோத்பூர், இராசத்தான்[19]   5 சனவரி 2012
ரஸ்னா மார்க்கெட்டிங், அகமதாபாத், குசராத் சூரிய ஆற்றல் கொள்கை இரண்டாம் கட்டத்தில் [20]   1 திசம்பர் 2011
சிவகங்கை மின்கல நிலையம் [21]   5 திசம்பர் 2010
கோலார் ஒளிமின்கல நிலையம்[22]   3 மே 2010
இத்னால் ஒளிமின்கல நிலையம், பெல்காம்[23]   3 ஏப்ரல் 2010
அசூர் பவர் - அவான் ஒளிமின்கல நிலையம்[24][25]   2 திசம்பர் 2009
செசுதின் பவர் - உயிர்த்திரள் மற்றும் சூரிய மின்கல நிலையங்கள் [26]   4.1 திசம்பர் 2011
சிட்ரா மற்றும் செப்செசுட்டு மின்நிலையங்கள் - சூரிய ஒளிமின்கல நிலையங்கள், மகாராட்டிரம்[27]   4 அக்டோபர் 2011
ஜாமூரியா ஒளிமின்கல நிலையம், மேற்கு வங்காளம்[28]   2 ஆகத்து 2009
என்டிபிசி ஒளிமின்கல நிலையம் [29]   1 2010
தியாகராசர் விளையாட்டரங்க நிலையம்-தில்லி[30]   1 ஏப்ரல் 2010
காந்திநகர் சூரிய நிலையம்[31]   1 21 சனவரி 2011
டாட்டா பவர் - முல்ஷி, மகாராட்டிரம்[32]   3 ஏப்ரல் 2011
அசூர் பவர் - சபர்காந்தா, குசராத்[33] 10 சூன் 2011, 63 ஏக்கர்கள், 36,000 சன்டெக் மின்கல தகடுகளைப் பயன்படுத்துகிறது.[34]
மோசர் பேயர் பதான், குசராத்[35] (Precious and Solitaire) 30 அக்டோபர் 2011
பி&ஜி சோலார் பி.லிட் - மயிலாடுதுறை, தமிழ்நாடு[36]   1 சவகர்லால் நேரு தேசிய திட்டத்தின் கீழ் துவங்கிய முதல் நிலையம், 10 சூன் 2011
ஆர்ஈஎச்பிஎல் - சடைபலி, (போலங்கிர் மாவட்டம்) ஒரிசா[37]   1 ஒரிசாவின் முதல் சூரிய ஆற்றல் மின்நிலையம், சூலை 2011
டாட்டா பவர் - படாப்பூர், ஒரிசா[38]   1 ஆகத்து 2011
ஒரிசா - படாப்பூர், ஒரிசா[39]   9 ஆகத்து 2012
டாட்டா பவர் - ஓஸ்மானாபாத், மகாராட்டிரம்[40]   1 1 ஆகத்து 2011
அம்ருத்து சூரிய ஆற்றல் மின்நிலையம் - கதிரி, ஆந்திரப் பிரதேசம்   1 மார்ச்சு 2012
இ.தொ.க மும்பை - குவால் பகாரி, அரியானா[41]   3 26 செப்டம்பர் 2011
சந்திரலீலா பவர் எனர்ஜி - நர்நால், அரியானா[42][43]   0.8 15 சனவரி 2012
கிரீன் இன்ஃப்ரா லிமிடெட் - ராஜ்கோட், குசராத்[25][44]   10 நவம்பர் 2011
டால் சூரிய மின் நிலையம் - பரபங்கி, உபி [45]   2 சனவரி 2012
மாநிலம் மெ.வா %
ஆந்திரப் பிரதேசம் 21.8 2.2
சத்தீசுகர் 4.0 0.4
தில்லி 2.5 0.3
குசராத் 654.8 66.9
அரியானா 7.8 0.8
சார்க்கண்ட் 4.0 0.4
கர்நாடகம் 9.0 0.9
மத்தியப் பிரதேசம் 2.0 0.2
மகாராட்டிரம் 20.0 2.0
ஒரிசா 13.0 1.3
பஞ்சாப் 9.0 0.9
இராசத்தான் 197.5 20.2
தமிழ்நாடு 15.0 1.5
உத்தரப் பிரதேசம் 12.0 1.2
உத்தராகண்டம் 5.0 0.5
மேற்கு வங்காளம் 2.0 0.2
மொத்தம் 1044.16[12][46] 100

குசராத் மாநிலத்தில் சூரிய ஆற்றல்

தொகு

இந்தியாவின் மொத்த நிறுவப்பட்டத் திறனளவில் மூன்றில் இருபங்கு குசராத் மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் சரண்கா சூரியப் பூங்கா தற்போது 214 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை அளிக்கிறது. இதன் மொத்த திட்டமிடப்பட்ட திறனளவு 500 மெகாவாட்டாகும். பல முனைவாளர்களும் பல பயனாளர்களும் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இப்பூங்காவிற்கு இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) மிகுந்த புதுமைமிக்கதும் சுற்றுச்சூழல் இயைந்ததுமான திட்டமாக விருது வழங்கியுள்ளது.

தலைநகர் காந்தி நகரை முற்றிலும் சூரிய ஆற்றலால் இயங்கும் நகராக மாற்றிட மாநில அரசு கூரை-மேற் சூரிய மின்கலத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின்படி, 50 மாநில அரசு கட்டிடங்கள் மீதும் 500 தனியார் கட்டிடங்கள் மீதும் சூரிய மின்கலங்களை அமைத்து 5 மெகாவாட் மின்சாரத்தை பெற்றிட விழைந்துள்ளது. இத்திட்டத்தை பின்னதாக ராஜ்கோட், சூரத், பாவ்நகர் மற்றும் வடோதரா நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் நர்மதை ஆற்றின் கால்வாய்களில் சூரிய மின்கலங்களை அமைத்திடவும் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஆனந்த் தாலுகாவில் சந்திராசன் பகுதியில் நர்மதை ஆற்றுக் கால்வாய்க் கிளையில் சூரிய மின்கலங்களை அமைத்து 1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கிறது. இத்தகைய மூடல் ஆற்றுநீர் வெப்பத்தால் ஆவியாகி வீணாவதும் தடுக்கப்படுகிறது. ஆண்டுக்கு 90,000 லிட்டர் நீர் தடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இராசத்தான் மாநிலத்தில் சூரிய ஆற்றல்

தொகு

குசராத்திற்கு அடுத்தநிலையில் இராசத்தான் மாநிலம் சூரிய ஆற்றல் பயன்பாட்டில் விளங்குகிறது. 40 மெகாவாட் திறனளவுள்ள திருபாய் அம்பானி சூரியப் பூங்கா ஏப்ரல் 2012இல் துவங்கப்பட்டுள்ளது.[17] இரண்டு 125 மெகாவாட் அங்கங்களான 250 மெகாவாட் இறு நேரோட்ட பிரெசுனல் எதிரொளிப்பி (CLFR) நிலையமொன்றை நிறுவி வருகிறது.[47]

மகாராட்டிரத்தில் சூரிய ஆற்றல்

தொகு

சீரடி சாயி பாபா தேவத்தானத்தில் உலகின் மிகப்பெரும் சூரிய ஆற்றல் நீராவி அமைப்பு இயங்கி வருகிறது. ரூ.1.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அமைப்பின் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக நாளொன்றுக்கு 50,000 சாப்பாடுகள் சமைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆண்டொன்றுக்கு 100,000 கிலோ சமையல் எரிவளி மிச்சப்படுகிறது. மின்சாரம் இல்லாத நேரத்திலும் நீராவியால் தயாரிக்கப்படும் மின்சாரம் தண்ணீரை ஏற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[48][49][50]

தமிழகத்தில் சூரிய ஆற்றல்

தொகு

மே 2018 கணக்கின் படி, இந்தியாவிலேயே ஐந்தாவது அதிகம் சூரிய மின்னாற்றல் உற்பத்தி செய்யும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. மொத்த மின்னுற்பத்தித் திறன் 1.8 கிகாவாட். கமுதியில் இந்தியாவின் பெரும் சூரிய மின் நிலையங்களுள் ஒன்று 2016-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

சான்றுகோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-12. பார்க்கப்பட்ட நாள் 2012-12-27.
  2. India to unveil 20GW solar target under climate plan, Reuters, 28 July 2009
  3. "India's national solar plan under debate". Pv-tech.org. Archived from the original on 2010-12-09. பார்க்கப்பட்ட நாள் 2010-11-27.
  4. Nitin Sethi, TNN, 18 November 2009, 12.42am IST (18 November 2009). "1gw solar power in 2013". Timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/india/India-targets-1000mw-solar-power-in-2013/articleshow/5240907.cms. பார்த்த நாள்: 2010-11-27. 
  5. Steve Leone (9 December 2011). "Report Projects Massive Solar Growth in India". Renewable Energy World.
  6. 6.0 6.1 [www.tn.gov.in/departments/energy/solar_energy_policy_2012.pdf "SOLAR ENERGY POLICY - 2012"] (PDF). 07 நவம்பர் 2012. தமிழக அரசு. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2012. {{cite web}}: Check |url= value (help); Check date values in: |accessdate= (help)
  7. "3000 மெவா மின் உற்பத்தி செய்யும் 'தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012' - வெளியிட்டார் ஜெ!". 20 அக்டோபர் 2012. ஒன்இந்தியா - தமிழ். பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. Roul, Avilash (15 May 2007). "India's Solar Power: Greening India's Future Energy Demand". Ecoworld.com. Archived from the original on 20 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 பிப்ரவரி 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  9. Chittaranjan Tembhekar (26 October 2009). "India tops with US in solar power". Economic Times. http://economictimes.indiatimes.com/news/news-by-industry/energy/power/India-tops-with-US-in-solar-power/articleshow/5161932.cms. 
  10. Generation of Solar Power
  11. Grid Connected Solar Capacity Increases from 2.5 MW in 2011 to 1040.67 MW In 2012
  12. 12.0 12.1 Progress under Jawaharlal Nehru National Solar Mission
  13. PV Resources.com (2009). World's largest photovoltaic power plants
  14. "Gujarat flips switch on Asia’s largest solar field, leading India’s renewable energy ambitions". Washington Post (New Delhi, India). 2012-04-19. http://www.washingtonpost.com/world/asia_pacific/gujarat-flips-switch-on-worlds-largest-solar-leading-indias-renewable-energy-mission/2012/04/19/gIQAZghhST_story.html. [தொடர்பிழந்த இணைப்பு]
  15. "Tata Power commissions 25Mw solar project in Gujarat". Archived from the original on 2012-02-18. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  16. "Surendranagar Solar Farm". Archived from the original on 2013-04-26. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  17. 17.0 17.1 "Reliance Power to Buy First Solar Panels for U.S.-Backed Project". Bloomberg (India). 5 September 2011. http://www.bloomberg.com/news/2011-09-05/reliance-power-to-buy-first-solar-panels-for-u-s-backed-project.html. 
  18. "Adani Group commissions largest solar power project". Economic Times (New Delhi, India). 2102-01-05. http://articles.economictimes.indiatimes.com/2012-01-05/news/30593042_1_solar-plant-gujarat-solar-power-adani-group. 
  19. "Mahindra Solar Rajasthan unit on stream". The Hindu (India). 10 January 2012. http://www.thehindu.com/business/article2788249.ece. 
  20. "Chemtrols Solar Successfully Commissions A 1 MW Solar PV Project In Gujarat". EAI (Patdi, District Surendranagar in Gujarat, India). 18 January 2012 இம் மூலத்தில் இருந்து 21 பிப்ரவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120221214459/http://www.eai.in/360/news/pages/3038. 
  21. Jaishankar, C. (23 December 2010). "Solar farm launched in Sivaganga district". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article971279.ece. 
  22. "Karnataka gets India's first 3 MW solar plant". Deccan Herald (Kolar, India). 17 June 2010. http://www.deccanherald.com/content/75926/indias-first-3-mw-solar.html. 
  23. "Conergy deploys 3 MW solar PV power plant in India". renewableenergyfocus.com (Itnal, Belgaum District, Karnataka, India). 21 April 2010. http://www.renewableenergyfocus.com/view/8897/conergy-deploys-3-mw-solar-pv-power-plant-in-india/. 
  24. India's First Commercial Solar Power Plant
  25. 25.0 25.1 "MW scale Grid Solar Power Plants Commissioned in India" (PDF). Archived from the original (PDF) on 2012-05-22. பார்க்கப்பட்ட நாள் 2012-12-27.
  26. "Solar off grid". Archived from the original on 2012-02-14. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  27. BHEL Executes Two Solar Power Plants in Maharashtra
  28. "Jamuria 2 MW solar plant is in West Bengal". Archived from the original on 2012-11-01. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  29. Delhi Gets 1 MW Solar Energy Generator
  30. "Thyagaraj Stadium Gets Indias First 1MW Rooftop Solar Plant". Archived from the original on 2010-07-27. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  31. Modi to Dedicate 1 MW Solar Power Plant in Gandhinagar
  32. Mulshi India
  33. "World-Bank Backed Azure Starts Up Solar-Power Plant in India". Bloomberg. 8 June 2011. http://www.bloomberg.com/news/2011-06-08/world-bank-backed-azure-starts-up-solar-power-plant-in-india.html. 
  34. Bay Area News Group, Sunday 1 January 2012; Sun-drenched India sucks up the rays, author=Vikas Bajaj
  35. "Moser Baer commissions 30-MW solar farm in Gujarat". The Hindu. 12 October 2011. http://www.thehindu.com/news/states/other-states/article2531831.ece. 
  36. "Tata BP Solar installs first plant in Tamil Nadu". The Times Of India. 8 July 2011. http://economictimes.indiatimes.com/news/news-by-industry/energy/power/tata-bp-solar-installs-first-plant-in-tamil-nadu/articleshow/9152390.cms. 
  37. orissa-gets-its-first-solar-power-plant
  38. "Tata BP Completes Solar Photovoltaic Plant in Eastern India". Bloomberg. 29 August 2011. http://www.bloomberg.com/news/2011-08-29/tata-bp-completes-solar-photovoltaic-plant-in-eastern-india.html/. 
  39. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-12. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  40. "Tata BP Solar installs first solar power project in co-operative sector". Archived from the original on 2012-03-27. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  41. "Abengoa completes India's first CSP plant at 3 MW". Archived from the original on 2012-04-03. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  42. Aryav Green Energy
  43. "List of Solar Power Projects Commissioned ( As of 27 March 2012)". Archived from the original on 9 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2012. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  44. "Green Infra". Archived from the original on 2011-11-26. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  45. Technical Associates Ltd
  46. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-01. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  47. "French group Areva to build big Indian solar power plant". Archived from the original on 2012-12-08. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  48. "Shirdi Gets Largest Solar Cooking System". Archived from the original on 2012-10-12. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  49. "Shirdis solar cooker finds place".
  50. "Shirdi Gets worlds largest solar steam system". Archived from the original on 2012-10-17. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.

வெளி இணைப்புகள்

தொகு