இந்தியாவின் முதல் குடிமகள் அல்லது குடிமகன்
இந்தியாவின் முதல் குடிமகள் அல்லது குடிமகன் (First Lady of India or First Gentleman of India) என்பது இந்தியக் குடியரசுத் தலைவரின் துணைவர்/துணைவியருக்கு வழங்கப்படும் பட்டம் ஆகும். இது பொதுவாக இந்தியக் குடியரசுத் தலைவரின் மனைவியினைக் குறிக்கும். இவர்களுக்கு உத்தியோக பூர்வ அலுவல்கள் அல்லது கடமைகள் எதுவும் இல்லை. பொதுவாக உத்தியோக பூர்வ விழாக்களில் இவர்கள் தங்கள் கணவர்/மனைவியுடன் கலந்துகொள்வார்.[1]
முதல் குடிமகன்/மகள் | |
---|---|
இந்திய இலட்சினை | |
இந்தியத் தேசியக் கொடி | |
தற்போது காலியிடம் 25 சூலை 2022 முதல் | |
வாழுமிடம் |
|
முதலாவதாக பதவியேற்றவர் | இராஜ்வன்சி தேவி |
உருவாக்கம் | 26 சனவரி 1950 |
துணை முதல் குடிமகன்/மகள் | குடியரசுத் தலைவரின் துணைவர்/துணைவியர் |
வரலாறு
தொகுஇந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரின் மனைவியான இராஜ்வன்சி தேவி ஆவார். இவர் 1950 முதல் 1962 வரை நாட்டின் முதல் பெண்மணியாக இருந்தார்.[1] இந்தக் காலகட்டத்தில் தேவி குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத்துடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை.[1][2]
சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பதவிக் காலத்தில் இந்தப் பதவி காலியாக இருந்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் சாகீர் உசேனின் மனைவியான சாஜகான் பேகம் பதவி வகித்தார்.[3]
நாட்டின் நான்காவது குடியரசுத் தலைவரான வி. வி. கிரியின் மனைவி சரசுவதி பாய், அதிக பொதுப் பணியினை ஏற்ற முதல் பெண்மணி ஆவார். பாயின் செயல்பாடு இவரது முன்னோடிகளின் செயல்பாடுகளிலிருந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.[1] இவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்திய மக்களுக்கு அடையாளம் காணக்கூடிய நபராக ஆனார்.[1]
1974 முதல் 1977 வரை இந்தியாவின் முதல் பெண்மணியான பேகம் அபிதா அகமது, குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெறும் விழாக்கள் மற்றும் உத்தியோக பூர்வ நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் முதல் பெண்மணியின் பொதுப் பணியினைச் சிறப்பாக நிறைவேற்றினார்.[1][4] 1980 மற்றும் 1989க்கு இடையில் இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பொதுப் பதவியை வகித்த முதல் பெண்மணியாக இருந்தார்.
வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி உஷா நாராயணன் .
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் பதவியேற்பதற்கு முன், பவனின் தலைமை தொகுப்பாளினியாகச் செயல்படுவது குடியரசுத் தலைவர் இல்ல மனைவிகளின் பொறுப்பாக இருந்தது. 2007ஆம் ஆண்டில், முதல் பெண்மணிக்கான அலுவலக அறையில், நாட்டின் "முதல் ஆண்மகனாக" பிரதீபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ரன்சிங் ஷெகாவத் தங்குவதற்குச் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன.[5]
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவியும் முன்னாள் முதல்வருமான சுவ்ரா முகர்ஜி 18 ஆகத்து 2015 அன்று பதவியில் இருந்தபோது மரணமடைந்தார். குடியரசுத் தலைவர் முகர்ஜியின் எஞ்சிய காலத்திற்கு முதல் பெண்மணி பதவி காலியாகவே இருந்தது.[6]
தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் கணவர் இறந்து விட்டதால், 2022 முதல் இந்த பதவி காலியாக உள்ளது.
பணி
தொகுமுதல் குடிமகன்/மகளின் பங்கு பெரும்பாலும் சம்பிரதாயமானது. முதல் குடிமகளுக்கு உத்தியோக பூர்வ கடமைகள் எதுவும் இல்லை. ஆனால் இவர் பொதுவாகக் குடியரசுத் தலைவருடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் அதிகாரப்பூர்வ விழாக்களில் கலந்து கொள்கிறார்கள்.[5]
பங்குதாரர் அல்லாதவர்கள்
தொகுமனைவி இல்லாத பட்சத்தில், குடியரசுத் தலைவரின் மற்றொரு உறவினர், குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெறும் உத்தியோக பூர்வ நிகழ்ச்சிகளின் போது புரவலர் அல்லது தொகுப்பாளினியாகப் பொறுப்பேற்கலாம். இருப்பினும், இது கட்டாயமில்லை. ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் காலத்தில் தொகுப்பாளினியின் பங்கு காலியாக இருந்தது.[5]
ஜெயில் சிங்கின் மகள் சில நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளினியாகப் பணியாற்றினார்.[5] பிரணப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா முகர்ஜி தனது தாயின் உடல்நலக்குறைவின் போது சில நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளினியாகப் பணியாற்றினார்.
இந்தியாவின் முதல் பெண்/ஆண் பட்டியல்
தொகுஎண் | படம் | பெயர் | பதவிக் காலம் | குடியரசுத் தலைவர் |
---|---|---|---|---|
1 | இராஜ்வன்சி தேவி 17 சூலை 1886 – 9 செப்டம்பர்1962 (வயது 76) |
26 சனவரி 1950 – 12 மே1962 |
இராசேந்திர பிரசாத் தி. 1896 | |
2 | காலியிடம்[a] | 12 மே1962
– 13 மே 1967 |
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் | |
3 | சாஜகான் பேகம் | 13 மே 1967 – 3 மே 1969 |
சாகீர் உசேன் தி. 1915 | |
பொறுப்பு | வி. வி. கிரி | 3 மே 1969 – 20 சூலை 1969 |
வி. வி. கிரி தி. 1917 | |
பொறுப்பு | முகம்மது இதயத்துல்லா[b] | 20 சூலை 1969 – 24 ஆகத்து 1969 |
முகம்மது இதயத்துல்லா தி. 1948 | |
4 | வி. வி. கிரி | 24 ஆகத்து 1969 – 24 ஆகத்து 1974 |
வி. வி. கிரி தி. 1917 | |
5 | பேகம் அபிதா அகமது 17 சூலை 1923 – 7 திசம்பர் 2003 (வயது 80) |
24 ஆகத்து 1974 – 11 பிப்ரவரி 1977 |
பக்ருதின் அலி அகமது தி. 1945 | |
பொறுப்பு | சங்கம்மா ஜாட்டி | 11 பிப்ரவரி 1977 – 25 சூலை 1977 |
B. D. Jatti தி. 1922 | |
6 | நீலம் சஞ்சீவ ரெட்டி | 25 சூலை 1977 – 25 சூலை 1982 |
நீலம் சஞ்சீவ ரெட்டி தி. 1935 | |
7 | பர்தான் கவுர்[c] |
25 சூலை 1982 – 25 சூலை 1987 |
Zail Singh தி. 1934 | |
8 | ஜானகி வெங்கட்ராமன் 1921 – 13 ஆகத்து 2010 (வயது 88–89) |
25 சூலை 1987 – 25 சூலை 1992 |
இரா. வெங்கட்ராமன் தி. 1938 | |
9 | விமலா சர்மா 1927 – 15 ஆகத்து 2020 (வயது 93) [10] |
25 சூலை1992 – 25 சூலை 1997 |
சங்கர் தயாள் சர்மா தி. 1950 | |
10 | உஷா நாராயணன்[d] 1922 — 24 சனவரி 2008 (வயது 85–86) |
25 சூலை 1997 – 25 சூலை 2002 |
கே. ஆர். நாராயணன் தி. 1951 | |
11 | காலியிடம்[e] | 25 சூலை 2002 – 25 சூலை 2007 |
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் | |
12 | தேவிசிங் ரான்சிங் செகாவாத்[f] 1934 – 24 பிப்ரவரி 2023 (வயது 88–89) [12] |
25 சூலை 2007 – 25 சூலை 2012 |
பிரதிபா பாட்டில் தி. 1965 | |
13 | சுவ்ரா முகர்ஜி[g][h] 17 செப்டம்பர் 1940 – 18 ஆகத்து 2015 (74 வயது) |
25 சூலை 2012 – 18 ஆகத்து 2015 |
பிரணப் முகர்ஜி தி. 1957 | |
காலியிடம் | 18 ஆகத்து 2015
– 25 சூலை 2017 | |||
14 | சவிதா கோவிந்த் ஏப்ரல் 15, 1952 |
25 சூலை 2017 – 25 சூலை 2022 |
ராம் நாத் கோவிந்த் தி. 1974 | |
15 | காலியிடம் | 25 சூலை 2022
முதல் |
திரௌபதி முர்மு |
மேலும் பார்க்கவும்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Sivakamu Radhakrishnan, wife of Sarvepalli Radhakrishnan died at her home in Madras in 1956, before her husband became President. Though she was the Second Lady of India at the time of her death.[7]
- ↑ Second Lady of India from 1979–1984
- ↑ Zail Singh's daughter had served as hostess for some events.[8][9]
- ↑ India's first foreign born (Burma) First Lady and the first one of foreign origin[11]
- ↑ The role of hostess, during official functions at the Rashtrapati Bhavan, was vacant during the tenure of A. P. J. Abdul Kalam.[9]
- ↑ Shekhawat was India's first and only First Gentleman.
- ↑ Suvra Mukherjee was the first First Lady to die during her husband's presidency.
- ↑ While the position of First Lady was vacant following the death of First Lady Suvra Mukherjee, Mukherjee's daughter, Sharmistha Mukherjee, served as hostess for some events, during her mother's illness and following her death.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Rathi, Nandini (2017-07-26). "Savita Kovind enters Rashtrapati Bhavan, but India's First Ladies are yet to make a mark". Indian Express.Rathi, Nandini (26 July 2017). "Savita Kovind enters Rashtrapati Bhavan, but India's First Ladies are yet to make a mark". Indian Express. Retrieved 12 September 2017.
- ↑ "Dr. Rajendra Prasad –> 1st President of India". Rediff.com. Archived from the original on 4 July 2010. பார்க்கப்பட்ட நாள் 19 August 2015.
- ↑ "ZAKIR HUSAIN, DR". Vice President of India. Archived from the original on 9 November 2015. பார்க்கப்பட்ட நாள் 19 August 2015.
- ↑ "India's First Lady Moves Into the Official Spotlight". The New York Times. 1974-10-25. https://www.nytimes.com/1974/10/25/archives/indias-first-lady-moves-into-the-official-spotlight-politics-for-29.html.
- ↑ 5.0 5.1 5.2 5.3 "The first ladies of Rashtrapati Bhavan". Live Mint. HT Media Ltd. 25 July 2012. பார்க்கப்பட்ட நாள் 19 August 2015."The first ladies of Rashtrapati Bhavan". Live Mint. HT Media Ltd. 25 July 2012. Retrieved 19 August 2015.
- ↑ Nandan Jha, Durgesh (23 August 2015). "Suvra Mukherjee, President Pranab Mukherjee's wife, passes away". Times of India. http://timesofindia.indiatimes.com/india/Suvra-Mukherjee-President-Pranab-Mukherjees-wife-passes-away/articleshow/48524004.cms.
- ↑ Gopalkrishna Gandhi (2013-01-26). "Only half our story". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/gopalkrishnagandhi/only-half-our-story/article1-1001877.aspx.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Ramachandran, Smriti Kak (2014-07-27). "President's daughter turns politician" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/presidents-daughter-turns-politician/article6252972.ece.
- ↑ 9.0 9.1 "The first ladies of Rashtrapati Bhavan". Live Mint. HT Media Ltd. 25 July 2012. பார்க்கப்பட்ட நாள் 19 August 2015.
- ↑ "President Pranab Mukherjee pays tributes to Shanker Dayal Sharma". Zee News. 19 August 2015. பார்க்கப்பட்ட நாள் 19 August 2015.
- ↑ "Ex-First Lady Usha Narayanan dies at 86". The Indian Express. The Indian Express Ltd.
- ↑ "The constant gardener". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 2007-08-16. பார்க்கப்பட்ட நாள் 2020-03-12.