இந்தியத் தாய்

இந்திய விடுதலைப் போராட்டம்
(இந்திய அன்னை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியத் தாய் (இந்தி, சமசுகிருதம்: பாரத மாதா भारत माता, Bhārata Mātā), மதர் இந்தியா, அல்லது பாரதாம்பா (சமசுகிருதம்: भारताम्बा) என்பது இந்தியாவை அன்னை வடிவாக உருவகப்படுத்தி பாவித்தலைக் குறிக்கும். ஏதோ ஒன்றின் காரணமாக நாட்டை நபராக அடையாளப்படுத்துவதாகும். இந்தியப் பண்பாட்டின் அனைத்து பெண் கடவுளரின் குணங்களை ஒன்றிணைத்து, குறிப்பாக துர்க்கையின் வடிவத்தை ஒத்து உருவாக்கபட்டவளாவார். பொதுவாக இந்திய அன்னை காவி வண்ண அல்லது மூவண்ண புடவை அணிந்து இந்தியத் தேசியக் கொடியை ஏந்தியவாறு அமைக்கப்படுகிறார்; சில நேரங்களில் சிங்கத்துடன் காட்டப்படுகின்றார்.[1]

ஏனாமிலுள்ள சிங்கத்துடன் கூடிய பாரத மாதா சிலை
கன்னியாகுமரியிலுள்ள பாரத மாதா சிலை
அபனிந்தரநாத் தாகூர் வரைந்த காவியுடையணிந்த பாரத மாதா ஓவியம்
லடாக்கின் லேயில் இந்தியப் படைத்துறை முகாம் வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பாரத மாதா சிலை

வரலாற்றுப் பின்னணி

தொகு

19வது நூற்றாண்டின் இறுதியில் இந்திய விடுதலை இயக்கத்தின் அங்கமாக பாரத மாதாவின் உருவம் தீட்டப்பட்டது. 1873இல் முதன்முதலாக கிரண் சந்திர பானர்ஜியின் பாரத் மாதா என்ற நாடகம் நடத்தப்பட்டது. 1882இல் எழுதப்பட்ட பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ஆனந்தமடத்தில் "வந்தே மாதரம்" பாடல் இடம் பெற்றது.[2] இது விரைவிலேயே விடுதலை இயக்கத்தின் பாடலாக அமைந்தது.

இதன் உருவகத்தை விவரித்த பிபின் சந்திர பால் இந்து மெய்யியல் வழக்கங்களுடனும் வழிபாட்டு முறைமைகளுடனும் ஒருங்கிணைத்தார். இந்த உருவகம் அனைத்து இந்துக் கொள்கைகளையும் தேசியத்தையும் அடையாளப்படுத்தியது.[3]

அபனிந்தரநாத் தாகூர் பாரத மாதாவை காவி உடையில் தேவியாக, நான்கு கைகளில் வேதங்கள், நெற்கற்றை, செபமாலை, வெள்ளைத் துணி ஏந்தியவாறு ஓவியம் தீட்டினார். [4] விடுதலைப் போராட்டத்தின் போது இந்தியர்களிடையே தேசிய உணர்வை உருவாக்க பாரத மாதா உருவகம் பயன்படுத்தப்பட்டது.

சிறப்பு

தொகு

பாரத மாதா கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன; 1936இல் மகாத்மா காந்தி திறந்து வைத்த பாரத மாதா கோயில் காசி பல்கலைக்கழகத்தில் உள்ளது. 1983இல் விசுவ இந்து பரிசத்தால் கட்டப்பட்டு, இந்திரா காந்தியால் திறக்கப்பட்ட பாரத மாதா கோயில் அரித்வாரில் உள்ளது.[5]

இந்தியாவைக் கடவுளாக சித்தரிப்பதால் தேசப்பற்றையும் கடந்து அனைத்து இந்தியர்களும் தேசப் பாதுகாப்பில் பங்கேற்பதைத் தங்கள் சமயக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது.[6]

பாரத் மாதா கி ஜெய்’ ("இந்திய அன்னைக்கு வெற்றி") என்பது இந்தியத் தரைப்படையின் முழக்கமாக இருந்து வருகின்றது.[7]

இதனையும் காண்க

தொகு

மேற்சான்றுகள்

தொகு
  1. Visualizing space in Banaras: images, maps, and the practice of representation, Martin Gaenszle, Jörg Gengnagel, illustrated, Otto Harrassowitz Verlag, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-447-05187-3
  2. Kinsley, David. Hindu Goddesses: Vision of the Divine Feminine in the Hindu Religious Traditions. Motilal Banarsidass, New Delhi, India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0379-5. pp. 181-182.
  3. Producing India, Manu Goswami, Orient Blackswan, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7824-107-4
  4. Specters of Mother India: the global restructuring of an empire, Mrinalini Sinha, Zubaan, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89884-00-0
  5. Lise McKean, 'Bharat Mata: Mother India and Her Militant Matriots' in: John Stratton Hawley, Donna M. Wulff (eds.) Devī: goddesses of India. Motilal Banarsidass, 1998, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1491-2, p. 250-280.
  6. Kalyani Devaki Menon, Everyday Nationalism: Women of the Hindu Right in India: The Ethnography of Political Violence, University of Pennsylvania Press, 2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-4196-9, p. 89f.
  7. Vinay Kumar (2 October 2012). "It is Jai Hind for Army personnel". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/news/national/it-is-jai-hind-for-army-personnel/article3958180.ece. பார்த்த நாள்: 8 October 2012. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியத்_தாய்&oldid=3286283" இலிருந்து மீள்விக்கப்பட்டது